டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரம் ஒருவர் டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

நாட்டின் மிக முக்கியமான டயர் உற்பத்தி நிறுவனங்களில் சியாட் நிறுவனமும் ஒன்று. ஆர்ஜிபி குழுமத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனமே தனது பிராண்ட் அம்பாசிடராக இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரத்தை நியமித்துள்ளது.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

பாலிவுட் திரை பிரபலமான நடிகர் அமீர்கானைதான் இந்நிறுவனம் தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக நியமித்திருக்கின்றது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவரே இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பார். இதற்கான ஒப்பந்தம் இன்று (செப்டம்பர் 26) கையெழுத்தாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த புதிய ஒப்பந்தத்தை அடுத்து அமீர் கான் இரு புதிய விளம்பரங்களில் நடித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. அவை, 2020 ஐபிஎல் போட்டிகளின்போது ஒளிப்பரப்பும் விதமாக தயார் செய்யப்பட்டிருக்கின்றன. கார்களுக்கான பிரீமியம் டயர் விளம்பரத்திலேயே ஆமிர்கான் தற்போது நடித்துள்ளார்.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

சியாட் நிறுவனம், செக்யூராடிரைவ் எனும் பெயரில் கார்களுக்கான பிரீமியம் ரக டயர்களை உற்பத்தி செய்து வருகின்றது. இதைச் சந்தைப்படுத்துவதற்கான விளம்பரத்திலேயே அமீர்கான் அம்பாசிடராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நடித்திருக்கின்றார்.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த டயர் விளம்பரமே தற்போது திரைகளில் ஒளிப்பரப்பட்டு வருகின்றது. மேலும், ஐபிஎல் போட்டிகளின்போது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் இந்த விளம்பர வீடியோவே ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. ஆகையால், அமீர்கான் நடித்துள்ள விளம்பரத்தை சின்னத்திரையில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் நம்மால் காண முடியும்.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

புதிய விளம்பரத்திற்காக அமீர்கான், 'ஐ ரோபோ' ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் எந்திர மனிதனைப் போன்று மாறியிருக்கின்றார். இதுகுறித்த பேனர் புகைப்படங்களே தற்போது வெளியாகியிருக்கின்றன. இந்த விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் ஆமிர்கான் கூறியதாவது, "இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய பிராண்டுகளில் ஒன்றான சியாட்டுன் இணைந்திருப்பதில் பெருமைப்படுகிறேன்" என்றார்.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

தொடர்ந்து பேசிய அவர், "புதிய விளம்பரத்திற்காக சியாட் என்னை அணுகியபோது, நான் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டேன். விளம்பரத்திற்காக வழங்கிய ஸ்கிரிப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டம்மியின் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. நான் படப்பிடிப்பை முழுமையாக ரசித்தேன். சியாட் டயர்களுடன் ஒரு அற்புதமான பயணத்தை எதிர்பார்க்கிறேன்" என கூறினார்.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

நடிகர் அமீர்கானைத் தொடர்ந்து பேசிய சியாட் டயர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமித் டோலானி, "ஒவ்வொரு நாள் பயணத்தையும் பாதுகாப்பானதாகவும், சிறந்ததாகவும் மாற்றுவதே என்ற எங்கள் லட்சியம். இதை சியாட் தயாரிப்புகள் எப்போதும் வழங்கும். எங்கள் புதிய விளம்பரமானது, பிரீமியம் செடான் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி டயர்களுக்கும் பொருந்தும்"...

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

..."இந்த விளம்பரத்தின் மைய கருவே போலியான டயர்களைக் காட்டிலும் சியாட் நம்பகமான, நம்பதகுந்த மற்றும் அதிக நீடித்த உழைப்பு தன்மைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. இந்த விளம்பரத்திற்காக அமீர்கான் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு" என பெருமிதம் கொண்டார்.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

"இந்திய திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் எங்களுடன் இருப்பது கூடுதல் பலத்தை அளிக்கும். தற்போது நிலவி வரும் போட்டியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் இணைவதற்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது" என கூறினார்.

டயர் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய உச்ச நட்சத்திரம்... யாருனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

சியாட் நிறுவனம் கார்களுக்கு மட்டுமின்றி இருசக்கர வாகனங்களுக்குமான டயர்களையும் உற்பத்தி செய்து வருகின்றது. எனவே வருகின்ற காலங்களில் நடிகர் அமீர்கான், சியாட்டின் இரு சக்கர வாகனங்களுக்கான டயர் விளம்பரத்தில் தோன்றுவார் என யூகிக்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actor Aamir Khan Signed As A Brand Ambassador Of CEAT Tyres. Read In Tamil.
Story first published: Saturday, September 26, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X