பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

பிஎஸ்4 எஞ்ஜின் கொண்ட வாகனங்களை துவம்சம் செய்யும் வகையில் அறிமுகமாகி வரும் பிஎஸ்6 எஞ்ஜினின் பயன் மற்றும் இயக்கத்தைப் பற்றிய சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

அண்மைக் காலங்களாக வாகனங்கள் சார்ந்து வெளிவரும் செய்தியில் பிஎஸ்-6 வாகனங்களின் அறிமுகத்தை பற்றிய தகவலே அதிகளவு ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. பிஎஸ்-6 மாசு உமிழ்வு கட்டுப்பாடு வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கின்றது. ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் பிரபல தயாரிப்புகளை இத்தரத்திற்கு ஏற்ப உயர்த்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

இதனாலயே, அதிகளவில் பிஎஸ்-6 வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக அது உச்சபட்ச அளவை எட்டியிருக்கின்றது.

இந்நிலையில், பலருக்கு இந்த வாகனங்களைப் பற்றிய சந்தேகம் எழுந்திருக்கலாம். பிஎஸ்6 வாகனங்கள் என்றால் என்ன..? பிஎஸ்-4 மற்றும் பிஎஸ்-6 ஆகிய இரு வாகனங்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ன..? அதனால், கிடைக்க இருக்கும் பலன் என்ன என பல்வேறு விதமான சந்தேகங்கள் நிலவி வருவதை நம்மால் காண முடிகின்றது.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

அவர்களுக்கு பதிலளிக்கும் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிஎஸ்-6 வாகனங்கள் பற்றி நிலவும் பல்வேறு மர்மங்களை விளக்கும் வகையில் தகவலை கூறியுள்ளோம் வாருங்கள் பார்க்கலாம்...

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

சமீப காலமாக இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு இணையாக உயர்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை அதிகளவில் நச்சுத் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றது.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

அதிலும், பெட்ரோல் வாகனத்தைவிட டீசல் வாகனத்தில் அதன் அளவு மிகவும் அதிகளவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இது, புவி வெப்ப மயமாதல் மற்றும் பல்வேறு வியாதிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

ஆகையால், இதில் தீர்வு காணும் விதமாகவே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிஎஸ்-4 தரம் கொண்ட எஞ்ஜின்களை உடைய வாகனங்களைவிட மிக மிக குறைந்தளவு நச்சு தன்மையையே வெளிப்படுத்துகின்றன.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

இதன்காரணமாகவே, 2020 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் பிஎஸ்-6 தரத்திற்கு குறைவான வாகனங்களை விற்பனை அல்லது உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பிஎஸ்-6 தரத்திற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளையும் விற்பனைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

இந்த நடவடிக்கையால் பிஎஸ்-4 தர எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் நிலை என்னவென்று கேள்வி எழும்பியுள்ளது.. நீங்கள், பெட்ரோலில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட கார் அல்லது பைக்கை வைத்திருப்பவரானால் இதைக் கண்டு அச்சப்பட தேவையில்லை.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

இவ்விரு தர எரிபொருளிலும் சிறு வேதியியல் மாற்றமே செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இது பிஎஸ்-4 தரம் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் வாகனத்திற்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால், நீங்கள் பிஎஸ்-4 தரத்திலான எஞ்ஜினுடைய வாகனத்தை வைத்திருப்பவரானால் சற்றே கவலைக் கொள்ளக் கூடிய விஷயமாக உள்ளது. ஆனால், அது சிறிய எரிபொருள் கலவை மூலம் சீர் செய்யப்படும் என்பதால் நீங்கள் பெரியளவில் தேவையில்லை.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

தற்போது நாம் வாங்கும் டீசலில் குறைந்தபட்சம் சல்பரின் (கந்தகம்) அளவு 50 விழுக்காடு உள்ளது. ஆனால், புதிய பிஎஸ்-6 எரிபொருளிலோ அது 10PPM (parts per million) ஆகவே உள்ளது. இது சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

எரிபொருளில் சல்பரின் பங்களிப்பு என்ன, ஏன் பிஎஸ்-4 டீசல் எஞ்ஜினில் பிஎஸ்-6 தர டீசலை பயன்படுத்தக்கூடாது..?

டீசல் என்ஜின்களில் இருக்கும் இன்ஜெக்டர்கள் டீசலை திரவ நிலையில் இருந்து அணு தெளிப்பாக மாற்றும் பணியை செய்கிந்றது. இவ்வாறு, மாறிய பின்னரே அவை சிலிண்டரில் எரியத் தொடங்கும். அப்போது, ஒரு சில எரிபொருள் சிலிண்டரின் வழியாக இன்ஜெக்டருக்குள் கசிய முற்படும். அவ்வாறு, அது கசியுமேயானால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதே இந்த சல்பரின் பணியாக உள்ளது.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

அதாவது, சல்பர் டீசல் எஞ்ஜினின் இன்ஜெக்டர்களில் எரிபொருளை செலுத்தும்போது மசகு (lubricant) எண்ணெய்யைப் போல் செயல்படுகின்றது. இதுவே அதன் முக்கிய பணியாக உள்ளது.

ஒரு வேலை எரிபொருளில் சல்பரின் அளவு குறையுமேயானால் எந்திரத்திற்கு சீரற்ற அளவில் எரிபொருள் கடத்தப்படும்.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

இதனால், எரிப்பு திறமையில் பாதிப்பு ஏற்பட்டு, உமிழ்தலின் அளவு அதிகரிக்கும். இது பல்வேறு பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதனாலேயே பிஎஸ்-4 எஞ்ஜினில் பிஎஸ்-6 தரம் கொண்ட எரிபொருளை பயன்படுத்தக்கூடாது என கூறப்படுகின்றது. ஆகையால், பிஎஸ்-4 வாகனத்தில் பிஎஸ்-6 தரத்திலான எரிபொருளை செலத்தும்போது பெட்ரோல் பங்க் ஊழியரிடம் குறிப்பிட்ட கலவையை கேட்டு பெறுதல் இனி அவசியமாக உள்ளது.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

பிஎஸ்-4 மற்றும் பிஎஸ்-6 எஞ்ஜினுக்கான வித்தியாசம் என்ன?

பிஎஸ் 4 தரத்திலான எஞ்ஜினுடைய வாகனங்களே தற்போது அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், இதனை பிஎஸ்-6 வாகனங்கள் முறியடிக்க இருக்கின்றது. ஏனென்றால், இந்த தரத்திலான எஞ்ஜின்களில் ப்யூவல் இன்ஜெக்டட் (FI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், அவை அதிக மைலேஜை வழங்கும் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

இந்த தொழில்நுட்பம் குறைந்த அளவு எரிபொருள் பயன்பாட்டிற்கு வழி வகுகின்றது. இதனால், குறைந்த எரிபொருளில் அதிக மைலேஜ் வழங்கும் தன்மையை பிஎஸ்-6 வாகனங்கள் பெறுகின்றது. இந்தியர்களில் பெரும்பாலானோர் மைலேஜ் அதிகம் தரும் வாகனங்கள்மீது கவனமுடையவர்களாக இருக்கின்றனர்.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

ஆகையால், விரைவில் அதிகம் மைலேஜ் தரும் பிஎஸ்-6 வாகனங்களுக்கான சந்தை விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், இந்த பிஎஸ்-6 எஞ்ஜின்கள் பிஎஸ்-4 எஞ்ஜினைக் காட்டிலும் குறைந்த திறனை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால், பிஎஸ்- 4 தரத்திலான ஓர் 110சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் 7,500 ஆர்பிஎம்மில் 9.8 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 10 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துமேயானால், பிஎஸ்-6 எஞ்ஜின் கொண்ட பைக் 9 பிஎச்பி பவரையும், 9.79 என்எம் டார்க்கை மட்டுமே வெளிப்படுத்தும். இது தோராயமாகவே கூறப்பட்டுள்ளது. சில நேரங்களில் இந்த தரவில் மாற்றம் ஏற்படலாம்.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

இதுபோன்று, பல்வேறு வித்தியாசங்கள் பிஎஸ்-4 மற்றும் பிஎஸ்-6 எஞ்ஜின்களுக்கு இடையே காணப்படுகின்றது. இதுமட்டுமின்றி, மாசு வெளிப்பாட்டு அளவிலும் பிஎஸ்-6 எஞ்ஜின் சிறப்பானதாக உள்ளது.

பிஎஸ்-4 வாகனங்களை துவம்சம் செய்யவிருக்கும் பிஎஸ்-6 வாகனங்கள்..? இருவிதமான எஞ்ஜின்களில் எது பெஸ்ட்..!

பிஎஸ்-4 வாகனத்தைக் காட்டிலும் ஆக்ஸைடு, நைட்ரஜன் வெளிப்பாடு 68 சதவீதம் குறைவாக உள்ளது. தொடர்ந்து, இதில் காற்றை நச்சுப்படுத்தும் தன்மை 82 சதவீதம் வரை குறைவாக காணப்படுகின்றது. ஆகையால், பிஎஸ்-6 வாகனங்கள் எகனாமி நிலையிலும் சரி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிலும் சரி சிறந்த தொழில்நுட்பமாகவே காணப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BS4 - BS6 Which Engine Best? We Explain. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X