மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

சந்தையில் பிரபலமான காராக உள்ள சியாஸ் செடான் மாடலின் டீசல் வேரியண்ட்டின் பெயரை தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து மாருதி சுசுகி நிறுவனம் நீக்கியுள்ளது. இதிலிருந்து இந்த செடான் மாடலின் விற்பனை இந்தியாவில் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

சில டீலர்ஷிப்களில் இன்னும் சில நாட்களுக்கு இந்த செடான் மாடல் விற்பனை செய்யப்பட்டாலும் நீண்ட நாட்களுக்கு இதன் விற்பனை இருக்காது. சியாஸ் டீசல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜினை மாருதி நிறுவனம் வழங்கியிருந்தது.

மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 94 பிஎச்பி பவரையும் 225 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வெளிப்படுத்தி வருகிறது. இந்த டீசல் வேரியண்ட்டின் தயாரிப்பு நிறுத்தம், ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் மொத்த டீசல் என்ஜின்களையும் நிறுத்த வேண்டும் என்ற மாருதி நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

மொத்தமாக நிறுத்தவுள்ளோம் என்று மாருதி நிறுவனம் எங்கும் குறிப்பிட்டது இல்லை. வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து பிஎஸ்6 டீசல் வேரியண்ட்கள் தயாரிக்கப்படும் என்று மட்டுமே இப்போது வரை தெரிவித்து வருகிறது.

மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

டீசல் வேரியண்ட் தயாரிப்பு நிறுத்தத்தால் மாருதி சியாஸ் மாடல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான பெட்ரோல் என்ஜினை மட்டுமே பெறவுள்ளது. 1.5 லிட்டரில் வரவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் 103 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வெளிப்படுத்தவுள்ளது.

மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

டீசல் என்ஜினின் தயாரிப்பு நிறுத்தம் தவிர்த்து புதிய சியாஸ் மாடலில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. மாருதி சுசுகி நிறுவனம் இந்த செடான் மாடலின் ஸ்போர்ட்ஸ் வெர்சன் மாடலை சியாஸ் எஸ் என்ற பெயரில் சந்தைப்படுத்தியிருந்தது.

மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

சியாஸ் மாடலின் டாப் வேரியண்ட்டான ஆல்பாவின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த இந்த ஸ்போர்ட்ஸ் வெர்சன் கார் இந்திய சந்தையில் ரூ.10.08 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

சியாஸ் செடான் மட்டுமின்றி மாருதி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி காரிலும் இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

மாருதி சுசுகி சியாஸ் டீசல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்..?

புதிய மாசு உமிழ்வு விதி இந்திய போக்குவரத்தில் மிக விரைவில் அமலாகவுள்ளதால் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக கார்களை தயாரித்து வெளியிட்டுவரும் மாருதி சுசுகி நிறுவனம் அதன் டீசல் வேரியண்ட்களை அதிக செலவினால் தயாரிக்க போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது சியாஸ் மாடலின் டீசல் வேரியண்ட்டின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Ciaz Diesel Powertrain Discontinued In India: Unlisted From Company Website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X