ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

2020 ஹோண்டா ஜாஸ் மாடல் கார் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சோதனை ஓட்டத்தின் ஸ்பை புகைப்படங்களின் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

இந்த சோதனை ஓட்ட புகைப்படங்கள் இந்த காரில் உமிழ்வு சோதனை கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதை காட்டுகின்றன. தற்சமயம் உலகம் முழுவதும் நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கு முன்பாகவும் சோதனையில் உட்படுத்தப்பட்டிருந்தது.

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

தற்போது இணையத்தில் கசிந்துள்ள ஸ்பை புகைப்படங்களிம் மூலம் 2020 ஜாஸ் மாடலில் அப்கிரேட் என்ஜின் உடன் சிறிய அளவிலான காஸ்மெட்டிக் மற்றும் டிசைன் மாற்றங்களை ஹோண்டா நிறுவனம் கொண்டு வந்திருப்பது தெரிய வருகிறது. இருப்பினும் இந்த மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

புதிய தலைமுறைக்கு மேம்படுத்தப்பட்ட ஜாஸ் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

இதன் டீசல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை ஹோண்டா நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த என்ஜின் 100 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக இணைக்கப்படவுள்ளது.

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதல் தேர்வாக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளது. 2020 ஹோண்டா ஜாஸ் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நமக்கு தெரிந்தவரை இதன் விலையை இன்னும் சில வாரங்களில் இந்நிறுவனம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

புதிய ஹோண்டா ஜாஸ் மாடலில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபேப்ரிக் துணியால் வடிவமைக்கப்பட்ட உட்புற கேபின், லெதர் ஸ்டேரிங் சக்கரம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுனர் இருக்கை மற்றும் எலக்ட்ரானிக் மல்டி-ட்ரிப்மீட்டர் உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்துள்ளன.

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், ப்ரேக் அசிஸ்ட், பவர் டோர் லாக்ஸ், குழந்தை பாதுக்காப்பிற்கான லாக்குகள், இரட்டை காற்றுப்பைகள், சீட் பெல்ட் அணிவதை நினைவூட்டும் வசதி, கதவுகள் சரியாக மூடப்படாததை எச்சரிக்கும் வசதி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், என்ஜின் இம்பொளிசர், க்ராஷ் சென்சார் மற்றும் பின்புற பார்க்கிங் கேமிரா போன்ற தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஊரடங்கிலும் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்ட ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 கார்...

தற்போதைய தலைமுறை ஹோண்டா ஜாஸ் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.7.45 லட்சத்தில் இருந்து ரூ.9.40 லட்சமாக உள்ளது. இதன் 2020 மாடலை சற்று ப்ரீமியம் விலையில் எதிர்பார்க்கலாம். ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் மாருதி சுசுகி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Source: Autocar India

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Spy Pics: Honda Jazz BS6 Model Spotted Testing Ahead Of India Launch
Story first published: Saturday, April 11, 2020, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X