கொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...

இசுஸு நிறுவனத்தின் பிஎஸ்6 வாகனங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் தாமதமாக அறிமுகமாகவுள்ளன. இந்நிறுவனம் அதன் பிஎஸ்6 மாடல்களை 2020-21 பொருளாதார ஆண்டின் பிற்பகுதியில் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

கொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...

இதனால் கொரோனாவின் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்தால் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்களை வருகிற ஜூலை மாதத்தில் இருந்து எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்நிறுவனம் வாகனங்களின் உத்தரவாத காலத்தையும், இலவச சர்வீஸ் காலத்தையும் அதிகரிப்பதாக அறிவித்திருந்தது.

கொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...

ஏனெனில் தற்சமயம் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்கள் அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் இலவச சர்வீஸ் அல்லது வாரண்டியை இப்போதைக்கு பெற முடியாது. இதனால் மார்ச் 15ல் இருந்து ஏப்ரல் 15 வரையில் சர்வீஸ் கால முடிவடையும் வாடிக்கையாளர்களுக்கு மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...

இசுஸு நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரைவேட் மற்றும் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான கார்களை விற்பனை செய்து வருகிறது. இசுஸுவின் டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிக்-அப் மற்றும் எம்யூ-எக்ஸ் எஸ்யூவி உள்ளிட்டவை தனி நபர் (ப்ரைவேட்) பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம், டி-மேக்ஸ் ரெகுலர் கேப் மற்றும் டி-மேக்ஸ் எஸ்-கேப் வாகனங்களை கமர்ஷியல் பயன்பாட்டிற்காக வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர்.

கொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...

இந்திய சந்தையில் உள்ள இந்நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களும் பிஎஸ்6 அப்டேட் பணிகளில் உள்ளன. இந்த அப்டேட்களால் இவற்றின் விலைகள் உயர்த்தப்படவுள்ளன. இந்த விலை அதிகரிப்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்றாலும், இந்த விலை ஏற்றம் ரூ.1 லட்சம் வரையில் இருக்கும் என கூறப்படுகிறது.

MOST READ:கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா... கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்... இப்போதான் வேகம் எடுக்குது...

கொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...

இசுஸு நிறுவனம் மட்டுமின்றி இந்திய சந்தையில் உள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது பிஎஸ்6 வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்காக கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக டீலர்ஷிப்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சில நிபந்தனைகளை கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தி அறியவும்.

பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு... ஆனா, பல கண்டிஷன்!

கொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...

இதேபோல் வங்கி கடன்கள் மூலமாக வாகனங்களை வாங்கியவர்கள் மாதத்தோறும் செலுத்தும் இஎம்ஐ தொகைகளையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு

கொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...

இசுஸு நிறுவனத்துடன் இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் தான் பெரும்பான்மையான நிறுவனங்கள் புதிய அறிமுகங்களை சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தன. ஏற்கனவே கூறியதுபோல் பிஎஸ்6 வாகனங்களின் அறிமுகங்கள் தான் தள்ளிப்போடப்பட்டுள்ளன. மற்றப்படி வாடிக்கையாளர்கள் பாதிக்காத வகையில் வாகனங்களுக்கான உத்தரவாத மற்றும் இலவச சர்வீஸ் காலங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu BS6 Vehicles Launch Delayed Due To Covid-19 Lockdown In India
Story first published: Tuesday, March 31, 2020, 10:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X