ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட யமஹாவின் எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பைக் மாடல்கள் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுகுறித்து எம்ஆர்டிவிலாக்ஸ் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பைக்குகளை மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் புதிய அம்சங்களுடன் பிஎஸ்6 தரத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்த யமஹா நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் இந்த இரு 250சிசி பைக்குகளையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

தோற்றத்தில் இவை இரண்டும் ஒரே மாதிரியாக காட்சியளித்தாலும் எஃப்இசட்எஸ் 25 வழக்கம்போல் கூடுதலாக சில வசதிகளை ஏற்றுள்ளது. இந்த இரு பைக்குகளிலும் பொதுவாக புதிய க்ளாஸ் டி பை-செயல்பாட்டு எல்இடி ஹெட்லேம்ப் ஆனது எல்இடி டிஆர்எல் உடன் வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

காம்பெக்ட், ஸ்னாப்பி டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்லேம்ப் சிறப்பான ஒளியினை வழங்கும் என்பது உறுதி. இது தவிர்த்து மற்ற முக்கிய அம்சங்களாக பல செயல்பாடுகளை கொண்ட எதிர்மறை எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

இவற்றுடன் சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதியையும் இந்த பிஎஸ்6 பைக் மாடல்கள் பெற்றுள்ளன. நேர்த்தியான டிசைனில் உள்ள இவற்றின் எரிபொருள் டேங்க் சற்று பெரியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

கூர்மையான மஃப்லர் கவர் மற்றும் அண்டர் கௌல் உள்ளிட்ட பைக்கின் பெரும்பான்மையான பாகங்கள் அனைத்தும் கருப்பு நிறத்திலேயே ஜொலிக்கின்றன. இவற்றுடன் கூடுதலாக எஃப்இசட்எஸ் 25 பைக்கானது தங்க நிறத்தில் அலாய் சக்கரங்கள், ப்ரஷ் பாதுகாப்பான் மற்றும் முன்பக்க விஸர் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

எஃப்இசட் 25 பைக்கை வாடிக்கையாளர்கள் மெட்டாலிக் ப்ளாக் மற்றும் ரேஸிங் ப்ளு என்ற இரு விதமான நிறங்களில் பெறலாம். அதுவே எஃப்இசட்எஸ் 25 பைக்கிற்கு பிளாட்டினா க்ரீன், வெள்ளை-வெர்மிலியன் மற்றும் டார்க் மேட் ப்ளூ என்ற நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

இந்த இரு பைக் மாடல்களிலும் இயக்க ஆற்றலை வழங்க 249சிசி ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 20.8 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்-ல் 20.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

இதே என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 20.9 பிஎச்பி/20 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியது. இந்திய சாலைகளில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக இந்த பிஎஸ்6 என்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த என்ஜின் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள 4-வரிசை கோர் ஆயில் கூலர் சுட்டெரிக்கும் கோடை வெயிலும் என்ஜினை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

எஃப்இசட் 25 பைக்கின் எடை 153 கிலோ எனவும், எஃப்இசட்எஸ் 25-ன் எடை 154 கிலோ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எஃப்இசட் 250 ட்வின் பைக்குகளில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 7 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோக்ராஸும் வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

ப்ரேக்கிங் பணியை கவனிக்க இவற்றின் இரு சக்கரங்களில் 282மிமீ மற்றும் 220மிமீ என்ற அளவுகளில் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் ஏபிஎஸ்-ம் உள்ளது. பிஎஸ்6 யமஹா எஃப்இசட் 25 பைக்கின் விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் ரூ.15 ஆயிரம் அதிகமாகும்.

ஷோரூம்களை வந்தடைந்த யமஹாவின் பிஎஸ்6 எஃப்இசட் பைக்குகள்... விரைவில் டெலிவிரிகள் துவங்குகின்றன...

அதேநேரம் பிஎஸ்6 எஃப்இசட்எஸ் 25 எக்ஸ்ஷோரூம் விலையை ரூ.1.57 லட்சமாக பெற்றுள்ளது. இவற்றின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பினும் 250சிசி பிரிவில் மலிவான பைக்குகளாக தொடர்ந்து இவை தான் விளங்குகின்றன. இவற்றிற்கு அடுத்த நிலையில் பஜாஜ் டோமினார் 250 ரூ.1.60 லட்சம் என்ற விலையுடன் உள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha BS6 FZ 25, FZS 25 Arrive in Showroom – Video Walkaround
Story first published: Friday, August 7, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X