புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைப்பர் கார் மாடல்களில் ஒன்றாகவும், அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் புகாட்டி சிரோன் இருந்து வருகிறது. பெரும் பணக்காரர்களின் கனவு மாடலாக இருந்து வரும் புகாட்டி சிரோன் கார் மொத்தமாக 500 யூனிட்டுகள் என்ற உற்பத்தி இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்டது.

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

இந்த நிலையில், தற்போது புகாட்டி சிரோன் காரின் உற்பத்தி 250 யூனிட்டுகளை எட்டியிருக்கிறது. இதனை கொண்டாடும் விதத்தில், புகாட்டி சிரோன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

புகாட்டி சிரோன் நோரி ஸ்போர்ட்டிவ் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய மாடல் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

புதிய புகாட்டி சிரோன் நோரி ஸ்போர்ட்டிவ் மாடலானது மொத்தமாகவே 20 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனால், கார் சேகரிப்பு ஆர்வலர்கள் இந்த காரை அடித்து பிடித்து வாங்குவதற்கு இப்போதே தயாராகி வருகின்றனர்.

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

புதிய புகாட்டி சிரோன் நோரி ஸ்போர்ட்டிவ் மாடலானது ஸ்போர்ட்டிவ் மற்றும் எலிகன்ஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். புகாட்டி சிரோன் நோரி ஸ்போர்ட்டிவ் என்ற பெயரில் நோரி என்பது பிரெஞ்ச் மொழியில் கருப்பு வண்ணம் என்று பொருள்படுகிறது.

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

எனவே, புதிய புகாட்டி சிரோன் நோரி ஸ்போர்ட்டிவ் மாடலானது மேட் பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சுடன் வர இருக்கிறது. இதர புகாட்டி சிரோன் கார்களிலிருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் பல்வேறு விதங்களில் வேறுபட்டு இருக்கும்.

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

புதிய புகாட்டி சிரோன் காரில் இருக்கும் 8.0 லிட்டர் W16 சிலிண்டர்கள் அமைப்புடன் 4 டர்போசார்ஜர்களுடன் இயங்கும் எஞ்சின் அதிகபட்சமாக 1,500 எச்பி பவரையும் வழங்கும். 1,600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியீடு!

இந்த கார் 3 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து, புகாட்டி நிறுவனத்தின் கூடுதல் ஆக்சஸெரீகள் பேக்கேஜ் என்பது ஒரு லட்சம் டாலர்கள் மதிப்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
French car maker, Bugatti has revealed Chiron Sport Edtion Noire Sportive special edition model and it is limited to just 20 units.
Story first published: Monday, February 24, 2020, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X