இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்! வாகனத்தை இப்படி அலங்கோலம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

இந்திய வாகன ஆர்வலர்கள் மத்தியில் வாகனம் சார்ந்து புதிய கலாச்சாரம் ஒன்று முளைக்கத் தொடங்கியுள்ளது. அது என்ன என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

மோட்டார் வாகன விதிகளின்படி வாகன மாடிஃபிகேஷன் சட்ட விரேத செயலாக இருந்தாலும் இந்திய வாகன ஆர்வலர்கள் மத்தியில் இந்த செயலுக்கு நல்ல ஈர்ப்பு நிலவி வருகின்றது. இதேபோன்று தற்போது மற்றுமொரு வாகனம் சார்ந்த விநோத செயலுக்கு இந்திய வாகன ஆர்வலர்கள் வித்திட தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

அதாவது, வாகனத்தின் பின் பகுதி பம்பரை நீக்கிவிட்டு இயக்கும் செயலை பலர் தங்களின் வாகனங்களில் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனத்திற்கு அழகு சேர்ப்பதில் முன் மற்றும் பின் பக்க பம்பர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இத்தகைய அம்சத்தை இந்தியர்கள் சிலர் குறிப்பிட்ட காரணங்களுக்காக நீக்கி வருகின்றனர்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

முன்னதாக இந்த கலாச்சாரம் உலக நாடுகளில், சில கார் பந்தய வீரர்கள் மத்தியில் மட்டுமே காணப்பட்டது. குறிப்பாக, ரேஸ் டிராக்குகள் வாகனத்தை இயக்கும்போது மட்டுமே இதை அவர்கள் கடைபிடித்து வந்ததனர். அதிலும், லம்போர்கினி கார் உரிமையாளர்கள் மட்டுமே செய்து வந்தனர். ஆனால், இப்போது உலகம் முழுவதிலும் பலர் இச்செயலைச் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இந்தியாவிலும்கூட இதனை சில வாகன உரிமையாளர்கள் தங்களின் கார்களில் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

இந்த செயலுக்கு அவர்கள் கூறும் காரணம்; காரின் வெளியேற்றும் அமைப்பை (எக்சாஸ்ட் சிஸ்டம் - exhaust system) வெட்ட வெளிச்சமாக காண்பிப்பது மட்டுமே நோக்கமாகும். தொடர்ந்து, ஒரு சிலர் வெளியேற்றும் அமைப்பை விரைவில் குளிர்விக்கும் நோக்கிலும் இவ்வாறு பின் பகுதி பம்பரை நீக்குவதற்கான காரணமாக குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

எதுவாக இருந்தாலும் இந்த பம்பரை நீக்கும் செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்கும் சூழ்நிலையேக் காணப்படுகின்றது. ஒரு சிலர், அர்னால்டின் பிரபல ஹாலிவுட் திரைப்படமான பிரிடேட்டர்ஸ் எனும் படத்தில் வரும் வேற்றுக் கிரக வாசியைப் போல் பம்பர் நீக்கப்படும் கார்கள் காட்சியளிப்பதாக நக்கலடிக்கின்றனர்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

சரி இப்போ பின் பக்க பம்பரை தூக்கிட்டீங்க! அடுத்து என்ன முன் பக்க பம்பரா?, என்ற நக்கலான கேள்வியையும் நெட்டிசன்கள் முன் வைக்கின்றனர். பொதுவாக இந்த செயலை 4X4 திறனுடைய வாகனங்களை, ஆஃப்-ரோடு பயணத்தில் ஈடுபடுத்தும்போது வாகனத்தின் பெர்ஃபார்மென்ஸை அதிகரிக்கச் செய்யும் விதமாக வாகன ஆர்வலர்கள் செய்து வந்தனர்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

வாகன ஆர்வலர்களின் இந்த செயலுக்கு "பின்புற பம்பரை நீக்கு" (rear bumper delete) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி கார்களைத் தொடர்ந்து சில 90ஸ் ஹோண்டா சிவிக் கார் உரிமையாளர்களும் இதே பம்பரை நீக்கும் செயலைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, டிராக் ரேஸின்போது இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

இந்த செயல் மிகவும் ஆபத்தானது என வாகனம் சார்ந்து இயங்கும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வாகனத்தின் பின் பகுதி பம்பரை முழுமையாக நீக்கிவிட்டு இயக்குவதால், பின்பகுதி கவசம் இன்றி பாதுகாப்பில்லாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றது. இம்மாதிரியான நேரத்தில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருள் அதிக வேகத்தில் மோதுமானால் அது எதிர்பார்த்திராத பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

மேலும், சிறு தவறும்கூட எஞ்ஜின் மற்றும் அதன் வேலையை சேதப்படுத்தக்கூடும். இந்த நிலை குறிப்பிட்ட அந்த வாகனத்திற்கு மட்டுமின்றி பிற வாகனங்கள் மற்றும் சுற்றியிருப்பவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவேதான் வாகன ஆர்வலர்களின் இந்த விநோதமான செயலை முட்டாள்தனமானது என மிக வெளிப்படையாக பலர் தங்களின் கருத்தை முன் வைக்கின்றனர். டீம் பிஎச்பி தளத்தில்கூட ஓர் பயனர் தன்னுடைய கருத்தை இவ்வாறே முன் வைத்துள்ளார்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

இந்த செயல், உயர் ரக வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி சில வெகுஜன கார் உரிமையாளர்களையும் கவர்ந்து வருகின்றது. மாருதி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட கார்களிலும் பம்பர் நீக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. உயர் ரக வாகனங்களில் எக்சாஸ்ட் சிஸ்டம் பின் பகுதியில் இருக்கின்றது. அவற்றை குளிர்விக்க அதன் உரிமையாளர்கள் பின் பக்க பம்பரை நீக்குகின்றனர்.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

ஆனால், வெகுஜன பயன்பாட்டில் இருக்கும் பலேனோ, போலோ, ஸ்விஃப்ட், இன்னோவா கார்களில் ஏன் இந்த மாற்றம் செய்யப்படுகின்றது என்பது புரியவில்லை என வாகன வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஆபத்தான செயல் என்பதால் விரைவில் இத்துறைச் சார்ந்த அதிகாரிகள் இதற்கு எதிராகவும் தங்களின் இரும்புக் கரங்களை ஓங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் முளைக்கும் புதிய கலாச்சாரம்... வாகனத்தை இப்படி அலங்கோளம் செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

அண்மைக் காலங்களாக வாகன மாடிஃபிகேஷனுக்கு எதிராக போக்குவரத்து போலீஸார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பின் பக்க பம்பரை நீக்கும் செயலும் ஓர் விதமான வாகன மாடிஃபிகேஷன் செயல் என்பதால் இவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Car 'Rear Bumper Delete' A New Modification Trends In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X