இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

உலகமே தடுமாறி வரும் ஒரு பிரச்னைக்கு சீன நிறுவனம் ஒன்று முடிவு கட்டியுள்ளது. அதுவும் குறைவான விலையில் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

எதிர்கால உலகை நிச்சயமாக எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஆளப்போகின்றன. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களால் ஏற்படும் பிரச்னைகள், உலகின் கவனத்தை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பியுள்ளன. எனவே உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக வேகமாக பிரபலமாகி வருகின்றன.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

எனினும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது ஒரு சில குறைபாடுகள் சுமத்தப்படவே செய்கின்றன. அந்த குறைகள் அனைத்தையும் டெஸ்லா போன்ற சில முன்னணி நிறுவனங்கள் அடித்து நொறுக்கி வருகின்றன. மின்சார கார்களை கவர்ச்சிகரமான தோற்றத்திலும், அதிசெயல்திறன் மிக்கதாகவும், அதிநவீன வசதிகள் நிரம்பியதாகவும் தயாரிக்க முடியும் என்பதை டெஸ்லா நிறுவனம் நிரூபித்து காட்டியுள்ளது.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

ஆனால் எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே பேட்டரி திறன்களை பற்றியதாகதான் உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் (ரேஞ்ச்), எலெக்ட்ரிக் கார்கள் எவ்வளவு தூரம் பயணிக்கும்?, பேட்டரி நீடித்து உழைக்குமா? என்பது பற்றி வாடிக்கையாளர்கள் அதிகம் ஆராய்கின்றனர்.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

ஏனெனில் பெட்ரோல் பங்க்குகளுக்கு நிகராக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இன்னும் அதிகரிக்கவில்லை. எனவே நடுவழியில் சார்ஜ் தீர்ந்தால் சிக்கல்தான். அதேபோல் பேட்டரி முழுமையாக நிரம்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என்பதும் வாடிக்கையாளர்களின் கவலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

பெட்ரோல், டீசல் தீர்ந்து விட்டால், ஒரு சில நிமிடங்களில் நிரப்பி விட்டு மீண்டும் புறப்பட்டு விடலாம். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை சார்ஜ் செய்ய அதிக நேரமாகிறது. இதன் காரணமாக பேட்டரி திறன் பற்றிய கவலைகளே வாடிக்கையாளர்களை, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முடிவில் இருந்து இழுத்து சென்று விடுகின்றன.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

ஆனால் இந்த கவலைகளை எல்லாம் தீர்க்கும் பேட்டரிகள் மார்க்கெட்டில் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவற்றின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை நிர்ணயம் செய்வதில் பேட்டரிகள்தான் முக்கிய பங்கை வகிக்கின்றன. பேட்டரியை பொறுத்தே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை, உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

இன்று உலகில் காற்று மாசுபாடு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கான செலவும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த 2 முக்கிய பிரச்னைகளுக்கும் மின்சார வாகனங்கள் நல்ல தீர்வு என்றபோதிலும், அதன் பேட்டரியில் காணப்படும் ஒரு சில குறைபாடுகள், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விடாமல் மக்களை தடுக்கின்றன.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

ஆனால் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. சீனாவை சேர்ந்த முன்னணி பேட்டரி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று கான்டெம்ப்ரரி ஆம்ப்ரெக்ஸ் டெக்னாலஜி கோ. லிமிடெட். (Contemporary Amperex Technology Co. Ltd - CATL). சுருக்கமாக சிஏடிஎல் என இந்நிறுவனம் அழைக்கப்படுகிறது.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

டெஸ்லா, ஃபோக்ஸ்வேகன், டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சிஏடிஎல் நிறுவனம் தயாரிப்புகளை சப்ளை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய அத்யாயம் எழுத சிஏடிஎல் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. இந்த முயற்சியில் தற்போது புதிய மைல்கல் ஒன்றையும் சிஏடிஎல் நிறுவனம் எட்டியுள்ளது.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

சிஏடிஎல் நிறுவனம் புதிய பேட்டரி சிஸ்டம் ஒன்றை தற்போது உருவாக்கியுள்ளது. இது 16 ஆண்டுகள் அல்லது 20 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு நீடித்து உழைக்கும். தற்போதைய சராசரி அளவை விட இது பல மடங்கு அதிகம் என்பதால், உலகின் கவனத்தை சிஏடிஎல் ஈர்த்துள்ளது. தற்போதைய நிலையில் சராசரியாக 8 ஆண்டுகள் வாரண்டி அல்லது 2.41 லட்சம் கிலோ மீட்டர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

இந்த புதிய பேட்டரிக்கு ஆர்டர்களை ஏற்க தயாராக உள்ளதாக சிஏடிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சரி, விலை மிகவும் அதிகமாக இருக்குமோ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படி எல்லாம் இல்லவே இல்லை. தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளின் விலையை காட்டிலும் இதன் விலையானது சுமார் 10 சதவீதம் மட்டுமே அதிகம்.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

எனினும் இந்த புதிய பேட்டரியின் அவுட்புட்டை வைத்து பார்க்கையில், இதனை நியாயமான விலையாகவே எண்ண தோன்றுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது மார்க்கெட் திணறி வந்தாலும், வரும் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று சிஏடிஎல் நிறுவனம் நம்புகிறது.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள் பலர், கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் முடிவை தற்போதைக்கு ஒத்தி வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முடிவை மீண்டும் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், விற்பனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

சிஏடிஎல் நிறுவனம் டெஸ்லாவுடன் தற்போது 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் இதற்கு முன்பாக பேட்டரி தேவைகளுக்கு, ஜப்பனானின் பனசோனிக் நிறுவனத்தையும், தென் கொரியாவின் எல்ஜி செம் நிறுவனத்தையும் நம்பியிருந்தது. ஆனால் தற்போது சிஏடிஎல் நிறுவனத்துடன் டெஸ்லா கூட்டணி அமைத்துள்ளது.

இதைதான் எதிர்பார்த்தோம்... உலகின் பிரச்னைக்கு முடிவு கட்டியது சீன நிறுவனம்! அதுவும் குறைவான விலையில்

இதனால் ஷாங்காய் அருகே அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மாடல் 3 கார்களிலும், சிஏடிஎல் பேட்டரிகள்தான் இடம்பெறவுள்ளன. சிஏடிஎல் நிறுவனத்தின் புதிய பேட்டரி, புரட்சியை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இது தொடர்பாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
English summary
CATL Develops Electric Vehicle Battery Lasting 16 Years Or 20 Lakh Kilometers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X