Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 8 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
Co Win: கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கே கொரோனா தடுப்பூசி
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Movies
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த நிஸான் மேக்னைட்... இந்த காருடைய டயர்களின் ஸ்பெஷாலிட்டி தெரியுமா?
நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ள நிஸான் மேக்னைட் காருக்கு, சியட் நிறுவனம் டயர்களை சப்ளை செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள காம்பேக்ட் எஸ்யூவி காரான மேக்னைட்டிற்கு, டயர்களை சப்ளை செய்வதற்காக, நிஸான் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக, டயர் உற்பத்தி நிறுவனமான சியட் இன்று (டிசம்பர் 2) அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிஸான் மேக்னைட் இன்றுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்து வரும் அமோக வரவேற்பு காரணமாக இந்தியாவில் வரும் ஆண்டுகளில், காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் அதிவேகமாக வளரவுள்ளது. இந்த செக்மெண்ட்டிற்கு ஏற்ற தரமான டயர்கள் சியட் நிறுவனத்திடம் இருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

நிஸான் மேக்னைட் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும், சியட் நிறுவனம் தனது செக்யூராடிரைவ் (SecuraDrive) டயர்களை சப்ளை செய்யவுள்ளது. நிஸான் மேக்னைட் போன்ற காம்பேட் எஸ்யூவி கார்கள் மற்றும் பிரீமியம் செடான் செக்மெண்ட்டிற்காக, இந்த செக்யூராடிரைவ் டயர்கள் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டிருப்பதாகவும் சியட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான சியட் நிறுவனத்தின் செக்யூராடிரைவ் டயர்களின் செயல்திறனை நிஸான் ஜப்பான் சரிபார்த்ததாகவும், சியட் தெரிவித்துள்ளது. டயர் சத்தத்தை குறைக்கும் வகையிலான வடிவமைப்புடன் செக்யூராடிரைவ் டயர்கள் வருவதாகவும் சியட் நிறுவனம் கூறியுள்ளது. இது இந்த டயர்களின் சிறப்பம்சமாக உள்ளது.

மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிஸான் மேக்னைட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்கள் ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த கார்களுக்கு நிஸான் மேக்னைட் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மிகவும் குறைவான விலையில் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியை நிஸான் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நிஸான் மேக்னைட் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 4.99 லட்ச ரூபாய் மட்டுமே.

இது அறிமுக சலுகை விலையாகும். வரும் டிசம்பர் 31ம் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த விலையில் காரை வாங்க முடியும். இதன் பிறகு 5.54 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் நிஸான் மேக்னைட் கார் விற்பனை செய்யப்படும். இதுவும் கூட குறைவான விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 9.35 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது மிக சவாலான விலை நிர்ணயம் என்பதால், இந்தியாவில் நிஸான் நிறுவனத்திற்கு மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.