மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமல் பதிவு செய்யலாம்... மத்திய அரசு அனுமதி!

மின்சார வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலேயே விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 இனி மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமலே பதிவு செய்யலாம்!

பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக, சுற்றுச்சூழலுக்கு பெரும் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பெரு நகரங்களில் வாகனப் புகையால் மக்களுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை மனதில் வைத்து, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 இனி மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமலே பதிவு செய்யலாம்!

எனினும், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை விட பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, மின்சார வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரியின் விலை மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

 இனி மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமலே பதிவு செய்யலாம்!

இந்த சூழலில், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அதன் விலையை குறைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி, மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமல் விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் அனுமதிக்கலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இனி மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமலே பதிவு செய்யலாம்!

இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்துத் துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இனி மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமலே பதிவு செய்யலாம்!

வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் பதிவு செய்யும்போது பேட்டரி இருப்பது அவசியமில்லை. அதன் வகை குறித்த விபரங்களையும் குறிப்பிடப்பட வேண்டிய கட்டாயமில்லை. அதேநேரத்தில், பரிசோதனை முகமையிடம் சோதனைகளுக்காக ஒப்படைக்கப்படும் புரோட்டோடைப் மின்சார வாகனங்களில் வழக்கமான அல்லது மாற்றிக் கொள்ளும் வகையை சேர்ந்த பேட்டரி இருப்பது அவசியம்.

 இனி மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமலே பதிவு செய்யலாம்!

வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் மின்சார வாகனத்தை பதிவுசெய்யும்போது பேட்டரியை வகை உள்ளிட்ட தகவல்களை குறிப்பிடப்படுவது அவசியமில்லை. எனினும், வாகனத்தின் உடல்கூடு வகை, சாலையில் பயன்படுத்துவதற்கான தகுதிச் சான்று உள்ளிட்டவற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

 இனி மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமலே பதிவு செய்யலாம்!

மேலும், பதிவு செய்ததற்கு பின்னால் வாடிக்கையாளர்கள் தங்களது புதிய மின்சார வாகனத்திற்கான தகுந்த பேட்டரியை வாகனத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் தனியாக வாங்கிக் கொள்ளலாம்.

 இனி மின்சார வாகனங்களை பேட்டரி இல்லாமலே பதிவு செய்யலாம்!

இந்த அறிவிப்பு மூலமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
According to a statement by the Ministry of Road Transport and Highways, electric vehicles without batteries can be sold and registered based on the type approval certificate issued by the Test Agency.
Story first published: Thursday, August 13, 2020, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X