எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்!

சீனாவை சேர்ந்த சங்கன் கார் நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. முதல் மாடலாக ஹெக்டர் போட்டியாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பல சீன கார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் பதிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. கிரேட்வால், ஹவல் நிறுவனங்களின் வரிசையில், அடுத்து சங்கன் நிறுவனமும் இந்திய சந்தையில் களமிறங்க உள்ளது.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

தனது முதல் மாடலாக சிஎஸ்75 ப்ளஸ் என்ற மிட்சைஸ் ரக எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த சங்கன் திட்டமிட்டுள்ளது. இந்த மாடலானது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

வெளிநாடுகளில் சங்கன் சிஎஸ்75 ப்ளஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஜிடிஐ புளூ வேல் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎஸ் பவரையும், 265 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

அடுத்து, 2.0 லிட்டர் புளூ வேல் டிஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 232 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

இந்த எஸ்யூவி 4,670 மிமீ, 4,690 மிமீ மற்றும் 4,700 மிமீ என மூன்று விதமான நீளம் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. 1,865 மிமீ அகலம் கொண்டது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ் 2,710 மிமீ ஆக உள்ளது. இந்த எஸ்யூவி மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்துவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

இந்த புதிய எஸ்யூவியை அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 2022-23ம் ஆண்டு காலக்கட்டத்தில் வர்த்தகத்தை துவங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

கார் மாடலை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக டெல்லியில் தற்காலிக தலைமை அலுவலகத்தை அமைத்து இந்திய வர்த்தகப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அடுத்து இந்தியாவில் புதிய ஆலையை வைத்து கார் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளையும் செய்ய இருக்கிறது.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

சங்கன் நிறுவனத்தின் சிஎஸ்75 ப்ளஸ் எஸ்யூவியை தொடர்ந்து சிஎஸ்35 மாடல் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மாடலானது 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவானதாக காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

 எம்ஜி ஹெக்டர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்கும் சங்கன் நிறுவனம்

சீன நிறுவனங்கள் தொழில்நுட்ப அளவில் சிறந்து விளங்குகின்றன. அந்த வகையில், ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார் மாடல்களையும் உருவாக்கும் முயற்சியில் சங்கன் ஈடுபட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சங்கன் நிறுவனத்தின் இரண்டு ஓட்டுனரில்லா கார்கள் 2,000 கிமீ தூரம் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது நினைவுகூறத்தக்கது.

Via - Gaadiwaadi

Most Read Articles
English summary
According to report, Changan is likely to debut in India with CS75 SUV by next year.
Story first published: Saturday, February 29, 2020, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X