Just In
- 10 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர்! இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்
அரியவகை கார்களில் ஒன்றான பத்மினிக்கு புத்துயிர் வழங்கிய சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அரிய மற்றும் பழமையான வாகனங்கள் நவீனகால வாகனங்களுக்கு இணையாக அலங்கரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு அண்மைக் காலங்களாக இந்தியாவில் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. பாரம்பரிய தோற்றத்தில் மிகவும் கவர்ச்சியாகக் காட்சியளிப்பதனாலயே, பலர் பழைய வாகனங்கள் என்றும் பொருட்படுத்தாமல் பெரும் பொருட் செலவில் அவற்றிற்கு புத்துயிர் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், நம்முடைய அப்பா-தாத்தா காலத்தில் விற்கப்பட்ட பிரிமியர் பத்மினி கார் ஒன்றை இளைஞர் ஒருவர் தலையில் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இதன்காரணமாக அக்காருக்கு அவர் புத்துயிரை வழங்கி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார். கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பிரிமியர் பத்மினி காரை புதுப்பிக்கும் நிகழ்வுகள் அதிகம் அரங்கேறிவது நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

இந்த நிலையிலேயே மீண்டுமொரு பத்மினி மாடிஃபை செய்யப்பட்டது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதுகுறித்த தகவலை ஆர்ஏஎஸ்என் என்ற தளம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் புத்துயிர் பெற்றிருக்கும் பத்மினி பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, பத்மினி காருக்கு உயிர்பளிக்கும் விதமாக வெளி மற்றும் உட்புறத் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, பழைய பாகங்கள் பல நீக்கப்பட்டு புதிய மற்றும் அதிக சொகுசு வசதியை வழங்கும் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதற்கு காரின் உட்பகுதி பற்றி வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படமே சான்று.

காரின் உட்பகுதியில் சொகுசு அம்சம் மட்டுமின்றி ராயலான தோற்றத்திற்காகவும் குறிப்பிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், கதவுகளின் பழைய பேன்ல்கள் நீக்கப்பட்டு அதற்கு மிருதுவான துணிகளாலான பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதேபோன்று இரு நிறம் கொண்ட அதிக ஸ்பாஞ்ஜ் தன்மைக் கொண்ட இருக்கைகள் மற்றும் மென்மையான விரிப்பான்கள் காரின் தரைப் பகுதியில் போர்த்தப்பட்டிருக்கின்றன.

மாற்றத்தைப் பெற்றிருக்கும் இந்த கார் 1991 மாடல் ஆகும். சந்தீப் சிங்கேட் (RASN Designs) எனும் ஓர் வட நாட்டவருக்கு சொந்தமானதாகும். இவர்தான் இக்காரின் மீதிருக்கும் பினைப்பின் காரணமாக மீண்டும் புத்துயிர் வழங்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். இவரே முன்னதாக ஃபியர் 1100 எனும் மாடலை மாடிஃபை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், அந்த காரைக் காட்டிலும் இது அதிக கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டும் பாரம்பரிய தோற்றத்தில் ஓர் ஸ்போர்ட்ஸ் என்ற பிம்பத்தை தோற்றுவிக்கின்ற வகையில் அக்கார் உள்ளது. இதன் நிறம் முதல் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் அம்சங்கள் வரையில் இந்த தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இக்காரு வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டுள்ளது. இத்துடன், ஆங்காங்கே நீள நிறம் கலந்த கோடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதே நிறத்தில்தான் காரின் உட்பகுதியும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதாவது, மின் விளக்கு மற்றும் இருக்க உள்ளிட்டவை காணப்படுகின்றன. இதுதவிர, ஸ்போர்ட்ஸ் லுக்கை மேலும் எடுப்பாக காட்டும் விதமாக வீல் மற்றும் டயர் உள்ளிட்டவை ஆஃப்டர் மார்க்கெட் ரகத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதேபோன்று மின்சாதனங்களும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், காரின் வெளிப்புறத்தில் இருக்கும் முகப்பு மின் விளக்குகள் மட்டுமின்றி காரின் கேபினுக்குள் இருக்கும் மின் விளக்குகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. பார்க்கிங் மின் விளக்கு, பனி விளக்கு, இன்டிகேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் எல்இடி தரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து காரின் ஓடும் வேகம் மற்றும் எரிபொருள் அளவைக் குறிக்கும் மீட்டர்கள்கூட மாற்றப்பட்டிருக்கின்றன. அவை ஃபியட் நிறுவனத்தின் கார்களில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. இத்துடன், புதிதாக தொழில்நுட்ப அம்சங்களைச் சேர்க்கும் விதமாக இசைக் கருவிகள், செல்போர்ன் சார்ஜிங் பாயிண்டுகள் மற்றும் புதுவிதமான எஞ்ஜினை ஆன் செய்யும் பொத்தான்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இவற்றுடன், காரின் கார்பரேட்டரும் மாற்றப்பட்டிருக்கின்றது. மேலும், எக்சாஸ்ட் சிஸ்டம், அ்தன் தலைப் பகுதி உள்ளிட்டவை நவீன ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையானதாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதன் எஞ்ஜின் திறன் பற்றி பார்ப்போமேயானால் 1,089 சிசி திறன் கொண்ட நேட்சுரல்லி அஸ்பயர்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டதாகும்.