போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி

அமெரிக்கன் ஆட்டோமொபைல் நிறுவனமான செவ்ரோலெட் க்ரோவ் என்ற பெயரில் புதிய மிட்-சைஸ்டு எஸ்யூவி மாடலை சந்தையில் களமிறக்க அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த எஸ்யூவி கார் குறித்து ஜிஎம்அத்தாரிட்டி என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி...

தயாரிப்பு பணியில் உள்ள இந்த மிட்-சைஸ்டு எஸ்யூவி மாடல் சீன சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள போஜன் 510 காரின் மறு உருவாக்கம் ஆகும். இதேபோன்று போஜன் 530 எஸ்யூவி மாடலின் மறு உருவாக்கமாக தான் செவ்ரோலெட் கேப்டிவா, எம்ஜி ஹெக்டர் மற்றும் வுலிங் அல்மாஸ் மாடல்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி...

இந்த எஸ்யூவி காரை செவ்ரோலெட் நிறுவனம் லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்பட 40 நாடுகளில் இறக்குமதி செய்து விற்பனை செய்யவுள்ளது. இந்நிறுவனத்தின் இந்த புதிய செவ்ரோலெட் மாடலுக்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி மாடல்களாக ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ் மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்டவை விளங்கவுள்ளன.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி...

செவ்ரோலெட் க்ரோவ் மாடலுக்கு அடிப்படையாக விளங்கும் போஜன் 510 எஸ்யூவி மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட போது சில முறை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. போஜன் 510 மாடலை பற்றி விரிவாக பார்த்தாலே செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி மாடல் எவ்வாறான தோற்றத்தில் இருக்கும் என்பதை அறிய முடியும்.

போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி...

எம்ஜி ப்ராண்டில் அறிமுகமாகலாம் என கூறப்படும் போஜன் 510 மாடலின் இந்த சோதனை ஓட்ட படங்களில் கார் செவ்ரோலெட் நிறுவனத்தின் ரேடியேட்டர் க்ரில் மற்றும் முத்திரையை கொண்டிருந்தது.

குறிப்பாக இதன் க்ரில் அமைப்பை செவ்ரோலெட்டின் கேப்டிவா மாடலில் பார்த்திருக்க முடியும்.

MOST READ: ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி...

இவற்றை தவிர்த்து பார்த்தோமேயானல் இந்த எஸ்யூவி கார் அதன் சீன முன்னோடி மாடல்களை தான் அதிகளவில் ஒத்துள்ளது. போஜன் 510 காரின் நீளம் 4,220மிமீ ஆகவும், அகலம் 1,740மிமீ ஆகவும், உயரம் 1,615மிமீ ஆகவும், வீல்பேஸ் 2,550மிமீ ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்ரோலெட்டின் புதிய க்ரோவ் மாடலில் 115 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.

போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி...

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவில் உள்ள எஸ்ஏஐசி மோட்டார் கார்ப்ரேஷனின் ஒரு அங்கம் ஆகும். இதே கார்ப்ரேஷன் தான் போஜன் எஸ்யூவி ப்ராண்ட்டையும் சொந்தமாக கொண்டுள்ளது. எஸ்ஏஐசி கார்ப்ரேஷனின் கவனம் தற்சமயம் இந்திய சந்தையின் மீது தான் உள்ளது.

MOST READ: நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி...

இதனால் தான் எம்ஜி மோட்டார்ஸ் ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் மற்ற சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக புதிய காம்பெக்ட் எஸ்யூவி மூலம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் என்ஜின் உடன் எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Chevrolet Groove SUV based on Baojun 510; Hyundai Creta Rival
Story first published: Sunday, May 24, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X