Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சன்ரூஃப், ஆட்டோ ட்ரைவ் எல்லாம் இருக்கு... வெறும் ரூ.7 லட்சத்தில் சீனாவில் அறிமுகமான புதிய இவி கார்..
சீனாவை சேர்ந்த இவி ஸ்டார்ட்அப் நிறுவனமான லீப்மோட்டார் எஸ்01 கூபே மாடலுக்கு அடுத்ததாக தனது இரண்டாவது தயாரிப்பு மாடலாக டி03 என்ற பெயரில் முழு எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் மாடலை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சீன சந்தையில் 65,800- 75,800 யுவான்களை விலையாக பெற்றுள்ள இந்த காரின் இந்திய மதிப்பு ரூ.8.08 லட்சமாகும். இந்த எலக்ட்ரிக் மாடலுக்கு 400 ஸ்டாண்டர்ட் எடிசன், 400 காம்ஃபர்ட் எடிசன் மற்றும் 400 டீலக்ஸ் எடிசன் என்ற மூன்று விதமான வேரியண்ட்களை லீப்மோட்டார் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த மூன்று வேரியண்ட்களிலும் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 74 பிஎச்பி மற்றும் 155 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 55 கிலோவாட்ஸ் மோட்டார், அதிக செயல்திறனை வழங்கக்கூடிய 36.5 கிலோவாட்ஸ்.நேரம் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பேட்டரியின் ஆற்றல் அடர்த்தி 171 வாட்ஸ்.நேரம்/கிலோ ஆகும். மேலும் பேட்டரி மூன்று-நிலை ஆற்றல் மீட்பு அமைப்பையும் பெற்றுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக டி03 மாடல் சிங்கிள் சார்ஜில் 400 கிலோ தூரம் வரை இயங்கும் என புதிய ஐரோப்பிய ட்ரைவிங் சைக்கிள் என்ற அமைப்பு சான்றளித்துள்ளது.

வேகமான சார்ஜர் மூலமாக 0-விலிருந்து 80 சதவீத சார்ஜரை வெறும் 36 நிமிடங்களில் எட்டிவிடும் இந்த காருக்கு லீப்மோட்டார் நிறுவனம் 8 வருட அல்லது 150,000 கிலோமீட்டர் உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி முதல் 1000 வாடிக்கையாளர்கள் காரி வாழ்நாள் முழுவதற்குமான இலவச சாலையோர உதவி மற்றும் பேட்டரி பராமரிப்புடன் 15 இன்ச் சக்கரங்களுக்கு இலவச அப்கிரேட்டையும் பெறலாம்.
MOST READ: அறிமுகமாகி 2 வருடங்களான போதிலும் ஜப்பானில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுசுகி ஜிம்னி...

இருப்பினும் புதிய டி03 எலக்ட்ரிக் மாடல் இவ்வாறான இலவச வசதிகளை காட்டிலும் அதனுள் கொண்டிருக்கின்ற தொழிற்நுட்ப அம்சங்களில் தான் கவனிக்கத்தக்க மாடலாக விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், லீப்மோட்டார் டி03 மாடல் தான் அதன் பிரிவில் நிலை 2 தன்னிச்சையான ட்ரைவிங் திறனை கொண்ட ஒரே காராகும்.

இதன் காரணமாக மூன்று கேமிராக்கள் மற்றும் 12 ரேடார்களை (மில்லிமீட்டர்-அலைக்கு ஒன்று, அல்ட்ராசோனிக் யூனிட்களுக்கு 11) இந்த எலக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இவற்றுடன் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப்பிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங், ஸ்மார்ட் பார்க்கிங் உள்ளிட்டவை அடங்கிய 10 செல்ஃப்-ட்ரைவிங் உதவிகளும் உள்ளன.

8.0 இன்ச்சில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் 10.1 இன்ச்சில் தொடுத்திரையை கொண்டுள்ள இந்த கார் சில வெளிநாட்டு சந்தைகளில் இணைப்பு தேர்வுகளையும் பெற்றுள்ளது. ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்கோனமி என்ற மூன்று விதமான ட்ரைவிங் மோட்களை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் மாடலின் பரிணாம அளவு 3620x1652x1577மிமீ ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் வீல்பேஸ் 2,400மிமீ ஆகும். கவர்ச்சிக்கரமான விலையுடன் டெஸ்லா மாடல்களுக்கு இணையான தொழிற்நுட்பங்களை டி03 மாடல் பெற்றுள்ளதால் சீன சந்தையில் மிக பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.