மீண்டும் கைவரிசையை காட்டிய சீன நிறுவனம்... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றத்தில் எலக்ட்ரிக் கார்...

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சீன ஆட்டோமொபைல் நிறுவனமான பிஒய்டி, கிட்டத்தட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலின் தோற்றத்தில் புதிய யுவான் காம்பெக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தி ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

மீண்டும் கைவரிசையை காட்டிய சீன நிறுவனம்... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றத்தில் எலக்ட்ரிக் கார்...

பிஒய்டி நிறுவனம், டொயோட்டா போன்ற சில முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து கொண்டு தனது சந்தையை கொலாம்பியா உள்பட மற்ற நாடுகளுக்கும் விரிவுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலை காப்பியடித்தாற் போன்ற யுவான் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மீண்டும் கைவரிசையை காட்டிய சீன நிறுவனம்... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றத்தில் எலக்ட்ரிக் கார்...

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலுடன் தோற்றத்தில் ஒத்து காணப்பட்டாலும், பிஒய்டி யுவான் எலக்ட்ரிக் காரானது தனது தனி அடையாளத்திற்காக சில புதிய டிசைன் பாகங்களையும் கொண்டுள்ளது. இந்த வகையில் இதன் முன்புறத்தில் தனித்துவமான க்ரில், புதுமையான ஸ்டைலில் C-பில்லர் மற்றும் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மீண்டும் கைவரிசையை காட்டிய சீன நிறுவனம்... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றத்தில் எலக்ட்ரிக் கார்...

இந்த எலக்ட்ரிக் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 53.22 kWh பேட்டரியானது வழக்கமான பயன்பாட்டில் 410 கிமீ தூரம் வரையில், நிலையான குறைவான வேகத்தில் காரை இயக்கும்போது 535 கிமீ தூரம் வரையில் காரை சிங்கிள் சார்ஜில் இயக்கி செல்லும்.

மீண்டும் கைவரிசையை காட்டிய சீன நிறுவனம்... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றத்தில் எலக்ட்ரிக் கார்...

0-விலிருந்து 50 kmph என்ற வேகத்தை 3.9 வினாடிகளில் அடைந்துவிடக்கூடிய பிஒய்டி யுவான் மாடலில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 160 பிஎச்பி மற்றும் 275 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படும் பேட்டரியை விரைவான சார்ஜர் மூலம் 0%-லிருந்து 80% சார்ஜ் செய்ய 1 மணிநேரம் 10 நிமிடங்கள் தேவைப்படும்.

மீண்டும் கைவரிசையை காட்டிய சீன நிறுவனம்... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றத்தில் எலக்ட்ரிக் கார்...

கொலாம்பியாவில் இந்த வருட இரண்டாம் பாதியில் இருந்து டெலிவிரியை ஆரம்பிக்கவுள்ள யுவான் எலக்ட்ரிக் கார் முதலில் 132 யூனிட்கள் மட்டுமே அந்நாட்டில் விற்பனை செய்யப்படவுள்ளது. யுவான் மாடலை தவிர்த்து பிஒய்டி நிறுவனம் பெரிய அளவிலான எஸ்யூவியாக டாங் மாடலையும் கொலாம்பியாவில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

மீண்டும் கைவரிசையை காட்டிய சீன நிறுவனம்... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றத்தில் எலக்ட்ரிக் கார்...

4,870 மிமீ நீளம் கொண்ட பிஒய்டி டாங் எலக்ட்ரிக் மாடலில் 82.8 kWh ஆற்றல் கொண்ட பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளுக்கும் விரைவில் செல்லவுள்ள இந்த பெரிய தோற்றம் கொண்ட எஸ்யூவி மாடல் முழு சார்ஜில் வழக்கமான இயக்கத்தில் 500 கிமீ தூரமும், குறைவான வேக இயக்கத்தில் 600 கிமீ தூரமும் இயங்கவல்லது.

மீண்டும் கைவரிசையை காட்டிய சீன நிறுவனம்... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் தோற்றத்தில் எலக்ட்ரிக் கார்...

இதில் பொருத்தப்பட்டுள்ள இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் மொத்தமாக 489 பிஎச்பி மற்றும் 330 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும். 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதுமானது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Ford EcoSport Clone Chinese BYD Yuan EV Introduced
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X