ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி...! விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

தனது கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகாட்டியின் லிமிடேட் எடிசன் செண்டோடிசி ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

உலகின் முன்னணி கால்பந்து வீரராக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2009ல் இருந்து ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த க்ளப் அணிக்காக விளையாடியதில் உலகம் முழுவதிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

மேலும் அதிக கோல் அடித்த வீரராகவும் புகழப்பட்டுவரும் ரொனால்டோ, பின் மாட்ரிட் அணியில் இருந்து விலகி இத்தாலியின் பிரபல க்ளப்பான ஜூவாண்ட்ஸ் அணியில் இணைந்தார். கால்பந்தை தாண்டி உடலை கட்டுக்கோப்பாக வைப்பது உள்பட கார்கள் மீதான ஆர்வமும் இவருக்கு அதிகம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

இதனாலேயே அவரது வீட்டில் சொகுசு கார்களும் ஸ்போர்ட்ஸ் ரக கார்களும் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நிலையில் தனது கார்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாகவும், ஜூவாண்ட்ஸ் அணி 36வது முறையாக சீரிஸ் ஏ சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாகும் விதமாகாவும் புகாட்டியின் லிமிடேட் எடிசன் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

ரொனால்டோவின் ஜூவாண்ட்ஸ் அணி ஸ்கூடெட்டோ அணியை வீழ்த்தியதன் மூலம் இந்த பட்டத்தை பெற்றுள்ளது. இவர் தற்போது வாங்கியுள்ள புகாட்டி செண்டோடிசி காரின் விலை சொன்னால் நம்பவே மாட்டீர்கள், சுமார் 8.5 மில்லியன் யூரோ, அதாவது ரூ.75 கோடி ஆகும்.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

உலக அளவில் இந்த புகாட்டி கார் இதுவரை வெறும் 10 யூனிட்கள் மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த சூப்பர் காரில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 8 லிட்டர் டபிள்யூ16 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 1600 பிஎச்பி பவரை காருக்கு வழங்கும் திறன் கொண்டது.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

புகாட்டியின் லேட்ட்ஸ்ட் சூப்பர் காரான செண்டோடிசி 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 2.4 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது. ஹைப்பர்காரான இதன் அதிகப்பட்ச வேகம் 380 kmph ஆகும். ரொனால்டோ இந்த காரை தற்போதைக்கு முன்பதிவு மட்டுமே செய்துள்ளார்.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

ஏனெனில் புகாட்டி நிறுவனம் இந்த சூப்பர் காரை அடுத்த ஆண்டில் தான் அதன் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளது. புகாட்டி கார் ஒன்றும் ரொனால்டோவிற்கு புதியது அல்ல. ஏனெனில் இவரிடம் ஏற்கனவே சிரோன், வேய்ரான் மற்றும் லா வொய்சர் நொயர் உள்ளிட்ட புகாட்டி கார்கள் உள்ளன.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரியில் இவரது 35வது பிறந்தநாளின் போது ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் 6 லட்சம் யூரோ மதிப்பிலான மெர்சிடிஸ் ஜி வேகன் காரை பரிசாக அளித்திருந்தார். இவை மட்டுமின்றி உலகளவில் அதிகளவில் சம்பாதிக்கும் இரண்டாவது கால்பந்து வீரரான ரொனால்டோவின் கேரேஜில் பல விதமான சூப்பர்கார்கள் உள்ளன.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

இதில் பண்டோம் ரோல்ஸ்-ராய்ஸ், லம்போர்கினி அவெண்டேட்டர், ஃபெராரி எஃப்430, மஸராட்டி க்ரான்காப்ரியோ மற்றும் பென்ட்லி கான்டினென்டல் ஜி.டி.சி உள்ளிட்டவை அடங்கும். இவற்றுடன் தற்போது முன்பதிவு செய்துள்ள புகாட்டி செண்டோடிசி காரை காட்டிலும் அதிக விலை கொண்ட மெக்லாரன் சென்னா காரும் இவரது சேகரிப்பில் உள்ளது.

ரொனால்டோவின் புதிய புகாட்டி செண்டோடிசி... விலை தெரிஞ்சா மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை...

பிரபல எஃப்1 ஓட்டுனரான அய்ர்டோன் சென்னா என்பவரின் பெயரில் இருந்து பெயரை பெற்றுள்ள மெக்லாரனின் இந்த கார் வெறும் 500 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதன் விலை 16 மில்லியன் யூரோ (கிட்டத்தட்ட ரூ.141.5 கோடி) ஆக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cristiano Ronaldo Gifts Himself A Bugatti Centodieci Worth £8.5 Million
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X