தலைகீழாக நின்றாலும் பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி... ஏன் தெரியுமா?

இனி தலைகீழாக நின்றாலும்கூட பாகிஸ்தானியர்களால் மாருதி நிறுவனத்தின் பிரபல மாடலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல மாடல்களில் சியாஸ் காரும் ஒன்று. பட்ஜெட் வாகன விரும்புகளின் முதன்மையான தேர்வில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் இருப்பதற்கு, அவை அதிக மைலேஜ் மற்றும் திறன் வாய்ந்தவையாக இருப்பதுதான் முக்கிய காரணமாக இருக்கின்றது.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

அந்தவகையில், அதிக சிறப்பு வாய்ந்த காராக காட்சியளிக்கும் மாருதி சுசுகி சியாஸ் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

ஆனால், பாகிஸ்தானில் இந்நிலை அப்படியே தலைகீழாக இருக்கின்றது. ஆம், இந்தியாவில் கிடைப்பதைப் போன்ற வரவேற்பு மாருதி சியாஸ் காருக்கு பாகிஸ்தானில் கிடைக்கவில்லையாம்.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

எனவே, பாகிஸ்தானில் இருந்து சியாஸ் காரை விற்பனையில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் மாருதி களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை கார்ஸ்பிரிட்பிகே எனும் தளம் வெளியிட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் இனி பாகிஸ்தானியர்களின் கைகளுக்கு மாருதி சுசுகி சியாஸ் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

பாகிஸ்தானுக்கான கார்கள் பல இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. அதாவது, சுசுகி நிறுவனம் பாகிஸ்தானியர்களுக்கான வாகனங்கள் பெரும்பாலானவற்றை இந்தியாவிலிருந்தே இறக்குமதிச் செய்து விற்பனைச் செய்து வருகின்றது.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

அந்தவகையில், பாகிஸ்தானுக்காக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாருதி சுசுகி கார்களில் சியாஸ் மாடலும் ஒன்று. இந்த கார்களை இந்தியா மட்டுமின்றி தாய்லாந்தில் இருந்தும் சிபியு வாயிலாக பாகிஸ்தானில் விற்பனைச் செய்து வருகின்றது மாருதி.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

அதாவது, இந்தியா மட்டுமின்றி தாய்லாந்தின் ரயோங் பிளாணட்டில் தயாரிக்கப்படும் சியாஸ் கார்களையும் சிபியூ வழியாக பாகிஸ்தானில் விற்பனைச் செய்கிறது மாருதி சுசுகி நிறுவனம். எனவே, பாகிஸ்தானில் இந்தியா-தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதிச் செய்யப்படும் மாருதி கார்களே அதிகம்.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

தாய்லாந்தில் பழைய தலைமுறை சியாஸ் கார்களின் உற்பத்தி கைவிடப்பட்டு புதிய தலைமுறை சியாஸ் மாடல்கள் மட்டுமே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

எனவே, பாகிஸ்தானில் பழைய தலைமுறை சியாஸ் நீக்கப்பட்டு புதிய தலைமுறை சியாஸ் அறிமுகம் செய்யப்படும் எதிபார்த்தனர். ஆனால், இம்மாதிரியான அறிவிப்பு எதுவும் மாருதி தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

ஆகையால், பாகிஸ்தானில் இரு தலைமுறை சியாஸ் மாடல்களும் இனி விற்பனைக்கு கிடைக்காது என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானில் சியாஸ் மாடலுக்கு பெரியளவில் கிடைக்காத வரவேற்பே முக்கிய காரணமாக இருக்கின்றது.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

அதேசமயம், இந்த காரின் தோல்விக்கு பின்னால், இதில் அதிகளவில் தற்காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெறாததே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆம், பாகிஸ்தானியர்கள் சியாஸ் காரில் அதிகம் தொழில்நுட்ப வசதிகளை எதிர்பார்க்கின்றனர். ஆனால், சியாஸ் மாடலில் அவர்கள் எதிர்பார்த்த அம்சங்கள் இடம்பெறவில்லை. இதனாலயே இந்த காரை அவர்கள் புறம் தள்ளியிருக்கின்றனர்.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

குறிப்பாக, அலாய் இல்லாதது, தொடுதிரை இன்ஃபோடெயன்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, ஸ்டியரிங் வீல் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் மாருதி சியாஸ் மாடலில் தற்போதும் இடம்பெறாத நிலையை நீடித்து வருகின்றது. இதன்காரணமாகவே, பாகிஸ்தானியர்கள் சியாஸ் காரை ஒதுக்கியிருக்கின்றனர்.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

அதேசமயம், இந்தியா போன்ற பிற நாட்டு சந்தைகளில் மாருதி சியாஸ் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

பாகிஸ்தான் சியாஸ் மாடலில் கி14பி 1.4 லிட்டர் விவிடி நேட்சுரல்லி அஸ்பயர்ட் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 92.45 பிஎஸ் பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 130 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

தலைகீழாக நின்றாலும் இனி பாகிஸ்தானியர்களால் இந்த காரை வாங்கவே முடியாது... மாருதி அதிரடி!

இதுமட்டுமின்றி, மாருதி சியாஸ் பாகிஸ்தானில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார் பாகிஸ்தானில், அந்நாட்டு மதிப்பில் 23.00 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 10.88 லட்சம் ஆகும். இது மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட மாடலின் விலையாகும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடை சியாஸ் இந்திய மதிப்பில் ரூ. 11.83 லட்சம் விலையில் விற்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Ciaz Will Be Discontinued In Pakistan. Read In Tamil.
Story first published: Saturday, May 9, 2020, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X