இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. சிறப்பு தகவல்!

உலகின் மிக சிறிய மின்சார் கார் ஒன்றை சிட்ரோவன் நிறுவனம் ஏஎம்ஐ பிராண்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

உலக நாடுகளின் மிகப்பெரிய தேவைகளில் ஒன்றாக மின்சார கார் உருவாகியிருக்கின்றது. அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களினால் உருவாகும் பின்விளைவுகள் தீவிரம் அடைந்து வருகின்றது.

குறிப்பாக, வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகை பல்வேறு பேராபத்துகளுக்கு முக்கிய காரணியாக அமைகின்றது. ஆகையால், இந்தியா போன்ற வாகன அடர்த்தியை அதிகமாகக் கொண்ட நாடுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், பிஎஸ்ஏ குழுத்தின் கீழ் செயல்படும் சிட்ரோவன் நிறுவனம் உலகின் மிக சிறிய மின்சார காரை வெளியீட்டுள்ளது.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

இது பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறவனம், இன்னும் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்ய தொடங்கவில்லை. ஆனால் இந்நிலை நீண்ட காலம் நீடிக்காது. மிக விரைவில் சிட்ரோவன் இந்தியாவிலும் கால் தடம் பதிக்க உள்ளது.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

இந்நிலையிலேயே, சிட்ரோவன் நிறுவனம் ஏஎம்ஐ பிராண்டில் புதிய மினி மின்சார காரை தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காருக்கு குறைந்த விலையாக அமெரிக்க டாலர்களில் 7,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 5.42 லட்சம் ஆகும்.

சிட்ரோவன் நிறுவனம் இந்தியாவில் களமிறங்கியதன் பின்னரே இந்த புத்தம் புதிய மின்சார காரின் வருகைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தாகவல் தெரியவரும்.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

அதேசமயம், மிக விரைவில் இந்தியாவில் சிட்ரோவன் கால் தடம் பதிப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றது. இதற்கான பணியில் அந்நிறுவனம் தற்போது தீவிரம் காட்டி வருகின்றது. தொடர்ந்து, இந்தியாவில் சிட்ரோவன் வாகன புயலை துவங்கும் விதமாக முதல் கார் ஷோரூம் அஹமதாபாத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!
இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

இந்தநிலையில், அனைத்து ரக வாடிக்கையாளர்களையும் தன் வசம் ஈர்க்கும் விதமாக குறைந்த விலை மினி மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிட்ரோவன் ஏஎம்ஐ இவி ஒரு முழுமையான சார்ஜில் 70 கிமீ தூரம் வரை செல்லும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த கார் நகர பயன்பாட்டாளரை முக்கிய குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் இத்தகைய குறைந்த ரேஞ்ச் திறனை அது பெற்றிருக்கின்றது.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

இதேபோன்று, இந்த காரின் வடிவமைப்பை மிக சிறியதாக வடிவமைப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக நகரவாசிகளைக் கருத்தில் கொண்டிருப்பதால், பார்க்கிங், குறுகிய சாலையில் பயணித்தல் உள்ளிட்டவற்றைக் கவனத்தில் கொண்டு ஏஎம்ஐ கார் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளது.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

ஆகையால், இந்த காருக்கு 2,041 மிமீ நீளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய குறுகிய நீளத்தை இது கொண்டிருப்பதால், அதிக டிராஃபிக் நிறைந்த இடத்தில்கூட அந்த காரை பயன்படுத்துவது மிக சுலபம்.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

இதன் குறைவான நீளத்திற்கேற்ப ஓட்டுநருடன் இணைந்து ஒருவர் மட்டுமே பயணிக்கின்ற வகையில் இரு இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓட்டுநர் ப்ளஸ் பயணி, இவர்கள் இருவர் மட்டுமே ஏஎம்ஐ காரில் அமர்ந்து சொகுசாக பயணிக்க முடியும்.

மேலும், இந்த காரை சாலையில் இயக்க ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இதற்கான சான்றை சிட்ரோவன் பெற்றிருக்கின்றது.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

ஆகையால், இந்த காரை பயன்படுத்தும்போது போலீஸாரைக் கண்டு பயப்படவே தேவையில்லை. மேலும், ஏஎம்ஐ காரில் சிறப்பான பேட்டரி பேக்-அப்பை வழங்கும் விதமாக 5.5 kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 3 மணி நேரங்கள் எடுக்குமாம்.

இதற்கு 220வேல்ட் சாக்கெட்டே போதும் என்கிறது சிட்ரோவன்.

இந்த காரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை.. உலகின் மிக சிறிய மின்சார கார் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு தகவல்!

பார்ப்பதற்கு மிகச் சிறிய காராக இது காட்சியளித்தாலும், பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியதாக ஏஎம்ஐ மினி மின்சார கார் காட்சியளிக்கின்றது. குறிப்பாக இந்த இரு டூர்கள் கொண்ட சிறிய மின்சார காரில் ப்ளூடூத், விரைவில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் திறன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வசதிகள், நகர வாசிகளை முக்கியமாக குறுகிய இடைவெளியில் பணிக்குச் சென்று திரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோவன் #citroen
English summary
Citroen AMI Mini Electric Car Unveiled. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X