ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

ஏழு-இருக்கைகளை கொண்ட சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

சிட்ரோன் பிராண்ட் அடுத்த ஆண்டில் சி5 ஏர்க்ராஸ் மாடலின் மூலம் இந்தியாவில் நுழையவுள்ளது. மேலும் சிட்ரோன் பிராண்டின் மூலமாக ஐரோப்பாவில் கொடிக்கட்டி பறந்துவரும் பிஎஸ்ஏ க்ரூப் மீண்டும் இந்தியாவிற்கு வருகிறது.

ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

ப்ரீமியம் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள சி5 ஏர்க்ராஸ் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவில் சோதனை ஓட்டங்களிலும் இந்த எஸ்யூவி கார் உட்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

சி5 ஏர்க்ராஸ் மட்டுமின்றி சி21 என்ற பெயரில் காம்பெக்ட் எஸ்யூவி காரையும் அடுத்த ஆண்டு இந்தியாவில் காலடி தடத்தை பதித்த பிறகு அறிமுகப்படுத்த சிட்ரோன் பிராண்ட் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் இந்நிறுவனத்தின் எதிர்கால இந்திய அறிமுக மாடல்தான் சிட்ரோன் பெர்லிங்கோ ஆகும்.

ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் உள்ள ஏழு இருக்கைகளை கொண்ட எம்பிவி காரான பெர்லிங்கோ, சி5 ஏர்க்ராஸின் அதே எம்ப்2 ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவிற்கு நேரடி போட்டி மாடல் எதுவும் இல்லாததால் காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவுகளை போன்று எம்பிவி பிரிவில் கடந்த சில வருடங்களாக போட்டி தீவிரமாக இல்லை.

ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

சிட்ரோன் பெர்லிங்கோ இன்னோவா க்ரிஸ்டாவிற்கு போட்டியாக வருமா அல்லது இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமான கியா கார்னிவல் எம்பிவி காருக்கு போட்டியாக வெளிவருமா என்பது தெரியவில்லை. ஏனெனில் இரண்டும் எம்பிவி கார்கள்தான் என்றாலும், எக்ஸ்ஷோரூம் விலை இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

2018 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் முதன்முதலாக உலகளவில் அறிமுகமான பெர்லிங்கோ ஓபல் மற்றும் வாக்ஸ்ஹால் என்ற பிராண்ட்களிலும் சில நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் சர்வதேச சந்தையில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் மூன்றாம் தலைமுறை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் தற்போது இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

இது தொடர்பாக காடிவாடி செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் கார் செவ்வக வடிவிலான முன்பக்க க்ரில், பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், அகலமான காற்று ஏற்பான்கள், பெட்டகம் வடிவிலான உடலமைப்பு, செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில்லேம்ப்கள் மற்றும் கருப்பு நிறத்தில் A-பில்லர்கள், முன்பக்க பம்பர் மற்றும் பக்கவாட்டு க்ளாடிங் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.

ஏழு-இருக்கை சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை! கதிகலங்கும் கியா கார்னிவல்

4.75 மீட்டர் நீளத்தில் உள்ள இந்த எம்பிவி காரில் மூன்று வரிசை இருக்கைகளுடன் கேபின் நன்கு விசாலமாகவே வழங்கப்பட்டிருக்கும். சிட்ரோன் பெர்லிங்கோ காருக்கு 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ற என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் 110 பிஎச்பி பவரையும், டீசல் என்ஜின் 102 பிஎச்பி மற்றும் 130 பிஎச்பி என்ற இரு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையிலும் வழங்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Seven-Seater Citroen Berlingo MPV Spotted Again In India
Story first published: Saturday, October 24, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X