சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த காரின் படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ கார் தயாரிப்பு குழுமம் தனது சிட்ரோன் பிராண்டு கார்களுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க ஆயத்தமாகி வருகிறது. முதல் மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, பல புதிய கார் மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த சூழலில், சிட்ரோன் பிராண்டின் பெர்லிங்கோ என்ற எம்பிவி கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பிரெஞ்ச் நாட்டு கார் மாடல்களுக்கே உரிய டிசைன் அம்சங்களுடன் காட்சி தரும் இந்த காரின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் விற்பனை செய்து வந்த ரெனோ லாட்ஜி காரின் தோற்றம் இந்த காரின் பிரதிபலிக்கிறது. அதாவது, பிரெஞ்ச் நிறுவனங்களின் தனித்துவமான டிசைன் பாணியுடன் இந்த கார் இருப்பது தெரிய வந்துள்ளது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த கார் இரண்டு விதமான நீளம் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டான்டர்டு மாடல் 4.4 மீட்டர் நீளமும், எக்ஸ்எல் என்ற மாடல் 4.75 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கின்றன. இதில், எக்ஸ்எல் மாடல் மிகச் சிறப்பான உட்புற இடவசதியை பெற்றிருக்கிறது. இதில், எக்ஸ்எல் மாடல்தான் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வெளிநாடுகளில் கொடுக்கப்படுகின்றன. இதன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 எச்பி பவரையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 102 எச்பி பவர் அல்லது 130 எச்பி பவரை அளிக்கும் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இதில், இந்தியாவில் ஸ்டான்டர்டு மாடல்தான் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு உள்ளது. பெர்லிங்கோ எக்ஸ்எல் மாடல் உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரப்படாது என்று கருதலாம். இதே கார் ஓபல், வாக்ஸ்ஹால் பிராண்டுகளிலும் ரீபேட்ஜ் செய்யப்ப்டு விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டா பிராண்டில் புரோஏஸ் சிட்டி என்ற பெயரிலும் வெளிநாடுகளில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

அடுத்த ஆண்டு சிட்ரோன் பிராண்டில் முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சி21 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களை பிஎஸ்ஏ குழுமம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த வரிசையில் பெர்லிங்கோ எம்பிவி காரும் இடம்பெறும் என தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
It is a known fact that French automakers, Citroen is entering the Indian market with the C5 Aircross SUV. It is expected to go on sale sometime early next year. According to the latest reports, the company is also testing its Berlingo XL MPV in the country.
Story first published: Thursday, August 20, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X