இந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிட்ரோன் எஸ்யூவி கார் ஒன்று முதன்முறையாக நம் நாட்டில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ...

சி21 என்ற குறியீட்டு பெயருடன் தற்சமயம் அழைக்கப்பட்டுவரும் இந்த வாகனம் சிட்ரோன் பிராண்டின் புதிய காமன் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்காக இந்த இயக்குதளம் (ப்ளாட்ஃபாரம்) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ...

அடுத்த ஆண்டு இதே பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் சி21 காம்பெக்ட் எஸ்யூவி கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் அனைத்து சோதனை கார்களுமே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டவைகள் ஆகும்.

இந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ...

ஆனால் தற்போது முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சிட்ரோன் சி21 கார் ஒன்று சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை ஆட்டோகார் இந்தியா செய்திதளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதால் இது இந்தியர்களின் எண்ணத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ...

மேலும் இத்தகைய தோற்றத்தில்தான் இந்த எஸ்யூவி கார் அறிமுகமாகவுள்ளதால் இந்த சோதனையில் சி21 கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய சோதனைகளில் கார் மறைப்பால் மறைக்கப்படவில்லை என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

இந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ...

இந்த எஸ்யூவி சிட்ரோன் குடும்பத்தின் பெரிய மற்றும் விலையுயர்ந்த கார் மாடல்களின் வழக்கமான டிசைன் வளைவுகளை அப்படியே கொண்டிருக்கும். இரு-டயர் ஹெட்லேம்ப்கள், சங்கி அலாய் சக்கரங்கள் மற்றும் பக்கவாட்டுகளில் கருப்பு க்ளாடிங் உடன் சிட்ரோனின் அடையாள க்ரில் பகுதியை மட்டும் நிச்சயம் சி21 எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் இந்த காரில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டர்போ-பெட்ரோல் என்ஜினை வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள பெர்லிங்கோ எம்பிவி காரில் பொருத்தி ஏற்கனவே இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் சோதனை செய்திருந்தது.

இந்தியாவில் சிட்ரோன் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கியது... இந்திய வெர்சனின் ஸ்பை படங்கள் இதோ...

மறுசுழற்சியிலும் எரிபொருள் திறனிலும் மாருதி சுஸுகியின் என்ஜின்களுக்கு போட்டியாக இந்த என்ஜினை சிட்ரோன் பிராண்ட் கொண்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன. சி21 எஸ்யூவி மட்டுமின்றி சி5 ஏர்க்ராஸ் மாடலின் தயாரிப்பு பணிகளிலும் இந்நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

இந்த இரு கார்களின் தயாரிப்பு பணிகள் நமது தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிகே பிர்லா தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே கூறியதுதான், சிட்ரோன் சி21 காம்பெக்ட் எஸ்யூவி கார் அடுத்த ஆண்டு இறுதியில் இந்திய ஷோரூம்களை வந்தடைந்துவிடும்.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
First made-in-India Citroen SUV begins road-tests
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X