இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை..

பிஎஸ்ஏ க்ரூப்பின் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடலின் இரு மாதிரி கார்கள் தமிழ்நாட்டில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ராக் த்ரூ டெக் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்ஏ க்ரூப் இந்திய சந்தையில் மீண்டும் நுழைய அனைத்து விதங்களிலும் தயாராக உள்ளது. இருப்பினும் இதன் சிட்ரோன் ப்ராண்ட்டின் எஸ்யூவி மாடல்களின் இந்திய அறிமுகம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டே வருகின்றன.

இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை...

ஆனால் எப்படியிருந்தாலும் 2021ஆம் ஆண்டின் முதல் கால்பகுதிக்குள் நம் நாட்டு சந்தையில் காலடி பதித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் தற்போதைய நிலையில் தான் சிட்ரோன் ப்ராண்ட்டின் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் இரு மாதிரிகள் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை...

தமிழ்நாட்டில் சிகே பிர்லாவின் தொழிற்சாலையில் சோதனையாக சி5 ஏர்க்ராஸ் மாடலின் சில யூனிட்களை சிட்ரோன் நிறுத்தி வைத்துள்ளதால், இந்த சோதனை ஓட்டம் தமிழ்நாட்டு சாலையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இரு சோதனை காரும் ஹரியானாவின் நம்பர் ப்ளேட் உடன் காட்சியளிக்கின்றன.

இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை...

இதன் மூலம் சிட்ரோன் சி5 கார்கள் இந்தியாவில் சிகேடி முறையில் தான் விற்பனை செய்யப்படவுள்ளதை அறிய முடிகிறது. தற்போதைய இரு சோதனை சி5 ஏர்க்ராஸ் கார்களில் ஒன்று வெள்ளை நிறத்திலும், மற்றொன்று கருப்பு நிறத்திலும் உள்ளது.

இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை...

ஒட்டு மொத்தமாக இந்த ஏர்க்ராஸ் மாடல் வழக்கத்திற்கு மாறான டிசைன் மொழியை ஏற்றுள்ளது. முன்புறத்தில் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் உடன் உள்ள இந்த கார் பின்புறத்தில் செவ்வக வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது.

இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை...

இந்த கார் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ள சிட்ரோனின் ஏர்பம்ப் கதவு மற்றும் சக்கர ஆர்ச் பாதுகாப்பான்கள் காருக்கு வித்தியாசமான தோற்றத்தை வழங்குவது மட்டுமில்லாமல், கதவுகளின் அடிப்பகுதியையும் பாதுகாக்கவல்லன.

இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை...

இதனுடன் பனோராமிக் சன்ரூஃப், 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8.0 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், இரு-நிலை ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ்-ப்ரீ டெயில்கேட், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனரின் இருக்கை உள்ளிட்டவையும் இந்த ஏர்க்ராஸ் காரில் எதிர்பார்க்கலாம்.

இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை...

இயக்கத்திற்கு 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படலாம். மற்றப்படி இதன் பெட்ரோல் மாடல் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. சிட்ரோன் நிறுவனம் இந்த எஸ்யூவி மாடலை ரூ.30 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen C5 Aircross SUV Spied On Test In India Sans Camouflage Again
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X