சிட்ரான் டிஎஸ்7 க்ராஸ்பேக் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது?

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரான் 2020ல் இந்தியாவில் கால் பதிக்கவுள்ளதை ஏற்கனவே உறுதி செய்திருந்தது. இந்நிறுவனம் இந்தியாவில் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் அறிமுகமாகவுள்ள நிலையில் சிட்ரான் நிறுவனம் தனது மற்றொரு தயாரிப்பு மாடலான டிஎஸ்7 காரை தற்போது இந்திய பொது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது.

சிட்ரான் டிஎஸ்7 க்ராஸ்பேக் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது?

மறைப்பு எதுவுமின்றி சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த க்ராஸ்பேக் மாடல் கார் சிட்ரான் சி5 ஏர்க்ராஸ் மாடலின் ப்ளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கார் இந்திய சாலையில் பல முறை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த காரின் இந்திய அறிமுகம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

சிட்ரான் டிஎஸ்7 க்ராஸ்பேக் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது?

சிட்ரான் நிறுவனம் அங்கம் வகித்து வரும் பிஎஸ்ஏ க்ரூப் முழுவதும் வருங்காலத்தில் இந்தியாவில் களமிறங்க திட்டமிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக விரைவில் அறிமுகமாகவுள்ள சிட்ரான் நிறுவனத்தை தொடர்ந்து 2020ஆம் ஆண்டின் இறுதியில் டிஎஸ் என்ற பிஎஸ்ஏ க்ரூப்பின் மற்றொரு ப்ராண்ட்டும் இந்திய சந்தையில் கால் பதிக்கவுள்ளது.

சிட்ரான் டிஎஸ்7 க்ராஸ்பேக் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது?

டிஎஸ்7 க்ராஸ்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகமான பின்பு ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் வால்வோ எக்ஸ்சி40 உள்ளிட்ட கார்களுடன் சந்தையில் போட்டியிடவுள்ளது. அதிகளவில் தொழிற்நுட்பங்களை கொண்டுள்ள டிஎஸ்7 மாடலானது ஐரோப்பாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிட்ரான் டிஎஸ்7 க்ராஸ்பேக் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது?

இந்த டிஎஸ்7 காரில் வழங்கப்பட்டுள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 180 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 2.0 லிட்டர் டீசல் என்ஜினானது 180 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் நிலையாக வழங்கப்படுகிறது.

சிட்ரான் டிஎஸ்7 க்ராஸ்பேக் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது?

சிட்ரான் சி5 மாடல் இந்தியாவில் அறிமுகமாகும்போதும் இதே என்ஜின் தேர்வுகளை தான் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் இந்த இரு மாடல்களும் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ளன.

சிட்ரான் டிஎஸ்7 க்ராஸ்பேக் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது?

பிஎஸ்ஏ க்ரூப், அறிமுகப்படுத்தவுள்ள மாடல் கார்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்ய திட்டுமிட்டு வருகிறது. ஆனால் சிட்ரான் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சிகேடி முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதே முறையில் தான் டிஎஸ்7 மாடலும் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரான் டிஎஸ்7 க்ராஸ்பேக் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது?

டிஎஸ்7 க்ராஸ்பேக் மாடல் அதன் பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் போட்டியிட அதன் விலை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த க்ராஸ்பேக் கார் இந்தியாவில் எண்ட்ரீ-லெவல் ப்ரீமியம் எஸ்யூவி பிரிவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன்
English summary
Citroen DS7 Crossback Spotted Testing In India Yet Again: India-Launch On The Cards?
Story first published: Wednesday, January 1, 2020, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X