14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...

சிட்ரோன் பிராண்ட் 14- 20 வயது உடைய இளம் தலைமுறையினரை கவரும் வகையில் புதிய இவி கார் ஒன்றை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...

அமி என்ற பெயர் கொண்ட

சிட்ரோனின் இந்த புதிய எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சமே இந்த காரை 18 வயதுக்கு குறைவானர்களும் உபயோகப்படுத்தலாம் என்பதாகும். இது தொழில்நுட்பத்தில் ஆர்வலர்களான இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய குணாதிசயங்களைக் கொண்டுள்ளது.

14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...

மேலும் இது ஏற்கனவே பிரெஞ்சு நாட்டு நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் வீடியோ கேம் கன்சோல்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது மிதமான 6-கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்கும் வாகனமாகும்.

14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...

பிரெஞ்சு நாட்டு சட்டத்தின்படி, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பதினான்கு வயதுக்கு உட்பட்ட யாவராயினும் கார்களை ஓட்டலாம். இந்த சட்டத்தை மனதில் வைத்து கொண்டுதான் சிட்ரோன் இந்த புதிய எலக்ட்ரிக் காரை பிரான்ஸ் நாட்டில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...

இந்த எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகம் 45 kmph ஆகும். இதன் உடற்பகுதிகள் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இதன் உட்புறம் சுருங்கங்கள் அற்றதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் 5.5 கிலோவாட் பேட்டரி தொகுப்பு நிலையான 220-வோல்ட் பிளக் சாக்கெட் வழியாக முழு சார்ஜ் பெற 3 மணிநேரங்களை எடுத்துகொள்ளும்.

14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...

மேலும் இந்த முழு சார்ஜில் 70 கி.மீ வரையில் இந்த அமி எலக்ட்ரிக் காரில் பயணம் செய்யலாம். இதன் எண்ட்ரீ-லெவல் எடிசனை பிரான்சில் வாங்க, 6,000 யூரோக்கள் (தோராயமாக ரூ.5.22 லட்சம்) செலவாகும். பிரான்சில் உள்ள தனது வாடிக்கையாளர்கள் தளத்திலிருந்து இந்த எலக்ட்ரிக் காருக்கு இதுவரை 1,000 ஆர்டர்கள் கிடைத்ததாக சிட்ரோன் பிராண்ட் கூறியுள்ளது.

14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...

"முதல் வாடிக்கையாளர்... தனது தந்தையுடன் வந்த ஒரு இளைஞன் ஆவார்" என பிரெஞ்சு நுகர்வோர் மின்னணு சில்லறை விற்பனை நிறுவனமான ஃபெனாக் டார்டியின் தலைவரான ஆலிவர் கார்சியா கூறியுள்ளார். மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அல்லது மொபெட்டை தான் தற்சமயம் இளைஞர்கள் இணையத்தில் அதிகம் தேடுவதகாவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 வயது இளைஞர்களும் ஓட்டலாம்... பிரான்ஸில் விற்பனைக்கு வந்தது சிட்ரோனின் புதிய எலக்ட்ரிக் கார்...

"ஏனெனில் பிரான்சில் இளைஞர்களின் விருப்பம் ஆனது முழு நகரத்தை சுற்றிவரும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீது தான் உள்ளது. எனவே இந்த அமி எலக்ட்ரிக் கார் எங்களது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் பங்காகும், இதன் மதிப்பை குறைவாக எடை போட வேண்டாம்" எனவும் கார்சியா கூறியுள்ளார்.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen's All-Electric Ami Can Be Driven By 14 Year Olds In France
Story first published: Sunday, September 13, 2020, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X