அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அடுத்த வருடம் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் இந்நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், ஃபியாட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது உள்ள போர்ட்ஃபோலியோவை கூடுதல் மாடல்களுடன் விரிவுப்படுத்துப்படுத்துவதற்கான பணிகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

இந்த வகையில் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ள காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் அவற்றில் முதன்மையான தயாரிப்பு மாடலாக விளங்கவுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் புதிய 3-வரிசை இருக்கை எஸ்யூவி மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

2021ல் இந்திய சந்தைக்கு வரவுள்ளதாக கூறப்படும் ஜீப் காம்பஸ் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் காரில் சில மாற்றங்களாக ரீ-டிசைனில் ஹெட்லைட்ஸ், பம்பர்ஸ் மற்றும் க்ரில் அமைப்புகள் கொண்டுவரப்படவுள்ளன. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மிக பெரிய மாற்றமாக இதன் உட்புற கேபின் இருக்கும்.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

உட்புறத்தில் பெரிய அளவிலான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டட் தொழிற்நுட்பத்துடன் புதிய டிசைனில் டேஸ்போர்டு இந்த காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காம்பஸ் மாடலின் தற்போதைய தலைமுறை கார் அதன் பிரிவில் உள்ள மற்ற மாடல்களுடன் ஒப்பிடுகையில் சில வசதிகளை கொண்டிருக்கவில்லை.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

இதனால் அத்தகைய வசதிகள் அனைத்தையும் ஜீப் நிறுவனம் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கும் என தெரிகிறது. இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ள 3-வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எஸ்யூவி கார், மோனோகோக் கட்டமைப்பு உடன் காம்பஸ் மாடலின் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளது.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

மேலும் ஜீப்பின் இந்த புதிய எஸ்யூவி மாடல் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற வகையில் தோற்றத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ள ஏணி வடிவிலான சேசிஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் மாடல்களுக்கு சரியான போட்டியினை கொடுக்கும்.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

இந்நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்பு மாடலான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் தற்போதைக்கு ஜீப் 526 என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. ஃபியாட் பாண்டா மாடலின் 4 வீல் ட்ரைவ் சிஸ்டத்தை அப்படியே பெறவுள்ள இந்த கார், ஜீப் தயாரிப்பு மாடல்களுக்கு உண்டான முரட்டுத்தனமான தோற்றத்தையும், ஆஃப்-ரோடு டிஎன்ஏ-வையும் கொண்டிருக்கும்.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

ஜீப் 526 எஸ்யூவி மாடலின் உலகளாவிய அறிமுகம் 2022ல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர்த்து இந்நிறுவனத்தில் க்ராண்ட் செரோக்கி மாடலின் அடுத்த தலைமுறை காரும் சந்தையில் எதிர்பார்க்கப்படும் மாடல்களுள் ஒன்றாக உள்ளது. இந்த புதிய காரின் அறிமுகம் இந்தியாவில் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

ஆல்ஃபா ரோமியோ எஸ்யூவியின் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படவுள்ள க்ராண்ட் செரோக்கியின் அடுத்த தலைமுறை கார், தற்போதைய மாடலை காட்டிலும் பெரியதாகவும், உயர்ரக தோற்றத்தை கொண்டதாகவும் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இந்த காரில் என்ஜின் தேர்வாக பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் ஹைப்ரீட் சிஸ்டமும் வழங்கப்படவுள்ளது.

அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

ஜீப் காம்பஸ், இந்நிறுவனத்தின் சிறந்த இந்திய விற்பனை மாடலாக உள்ளது. மேலும் இந்த எஸ்யூவி மாடல் தான் இந்நிறுவனத்தில் இருந்து சந்தைப்படுத்தப்படும் விலை குறைவான காராகவும் விளங்குகிறது. இருப்பினும் சந்தையில் எஸ்யூவி மாடல்களுக்கு அதிகரித்து வரும் தேவையின் காரணமாக புதியதாக காம்பெக்ட்-எஸ்யூவி மற்றும் 3-வரிசை எஸ்யூவி உள்ளிட்டவை களமிறங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Facelift To Lead Brand Expansion In India: New Three-Row SUV In The Works
Story first published: Wednesday, April 15, 2020, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X