இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

நொய்டா எல்லையில் இருந்து டெல்லி செல்வதற்கு இனி இ-பாஸ் கட்டாயம் இல்லை என்றும் அதற்கு பதிலாக வேறொன்றைக் காண்பிக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடித்த வண்ணம் இருக்கின்றது. தற்போது நான்காம் கட்டமாக அமல்படுத்தியுள்ள தடையுத்தரவில் தளர்வுகள் பல வழங்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், மக்கள் வழக்கம்போல நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையேக் காணப்படுகின்றது.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் திரியும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதேசமயம், சில அவசர மற்றும் முக்கிய தேவைகளுக்கு வெளியே வர அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

இதற்காக ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேக தளங்களை அமைத்து அனுமதிச் சீட்டு (பாஸ்) வழங்கி வருகின்றன.

ஆனால், இந்த பாஸ் கிடைப்பதற்கு ஒரு மணி நேரம் முதல் சில நாட்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால், பொதுமக்களில் சிலர் அவசரகாலங்களில் வெளியே செல்வதில் சிக்கல் ஏற்படுகின்றது.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

குறிப்பாக, விமான பயணிகள் பலர் இதில் அதிகம் பாதித்து வருகின்றனர். இத்தகையோருக்கு சிறப்பு சலுகை வழங்கும் விதமாக நொய்டா போலீஸார், உறுதிச் செய்யப்பட்ட விமான டிக்கெட் இருந்தால் பாஸ் பெற வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளனர். இதனால், தலைநகர் டெல்லியன் எல்லையோரப் பகுதியில் இருக்கும் மக்கள் சற்றே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

கொரோனா அச்சம் காரணமாக தலைநகர் முழுவதுமாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால், இந்த யூனியன் பிரதேசத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வாழும் மக்களால் டெல்லிக்குள் நுழைய முடியாத நிலைக் காணப்படுகின்றது. முக்கியமாக டெல்லியன் எல்லையோரப் பகுதியில் இருக்கும் நொய்டா போன்ற பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

இந்த நிலையிலேயே நொய்டா காவல்துறை டெல்லிக்குள் நுழைவதற்கு உறுதி செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளே போதும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு முன்னர் வரை அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் உரிய அனுமதிச் சீட்டை வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டு வந்தது.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

இதனால், அண்டை மாநிலத்திற்குள் நுழைய முடியாமல் பலர் தவித்து வந்தனர். உரிய காரணம் இருந்தும், பாஸ் இல்லாத காரணத்தால் அவர்கள் உள் நுழையமறுக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையை தற்போது நொய்டா அதிகாரிகள் தளர்த்தியிருக்கின்றனர்.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

கொரோனா வைரஸ் அதிகம் பரவிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே இத்தகைய கடும் விதிகளை டெல்லி மற்றும் நொய்டா ஆகிய பகுதி போலீஸார் எடுத்து வருகின்றனர். தற்போது, வைரஸ் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பகுதிகளில் மும்பை, புனே, சென்னை ஆகிய நகரங்களின் வரிசையில் தலை நகர் டெல்லியும் இருக்கின்றது.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

ஆகையால், வைரஸ் மேலும் பரவிடக்கூடாது என்பதற்காக தலைநகர் உள்ளே மற்றும் அதன் எல்லையோரப் பகுதிகள் அடைக்கப்பட்டு தீவிர கண்கானிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

தற்போது வழங்கப்பட்டிருக்கும் சலுகை விமான பயணச்சீட்டு மட்டுமின்றி உறுதிச் செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என கவுதம் புத்த நகர் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

வெகு நாட்கள் கழித்து விரைவில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருப்பதை முன்னிட்டு போலீஸார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

தலைநகர் டெல்லியில் இன்று (மே25) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட இருக்கின்றது.

இதற்காக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டுக் கிடந்த அனைத்து ரயில் நிலையங்களும் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

ஆனால், கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் இடங்களில் அதாவது வைரஸ் பாதிப்பில் சிவப்பு மண்டலங்களாக கண்டறியப்பட்டிருக்கும் பகுதிகளில் மட்டும் பொதுப் போக்குவரத்து கேள்விக் குறியாக உள்ளது. இங்கு பொதுபோக்குவரத்து வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுகுறித்த எந்தவொரு திட்டமும் இல்லை.

இனி இ-பாஸ் தேவையில்லை... ஆனா வேறு ஒன்றை காண்பிக்கனுமாம்! ஓபனாக அறிவித்த நொய்டா காவல்துறை...

எனவே, நோய் பாதிப்பு சற்று ஓய்ந்த பின்னரே அப்பகுதிகளில் பழைய திரும்புவதற்கு வாய்ப்பி இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், சென்னைப் போன்ற சிவப்பு மண்டலங்களில் வசிக்கும் மிகுந்த வருத்தத்தில் ஆழந்திருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Confirm Air Ticket Holders No Need To Carry e-Pass. Read In Tamil.
Story first published: Monday, May 25, 2020, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X