நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம், கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியுள்ளது.

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 19,658 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்துள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 4,38,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

மேலும் நன்கொடைகளையும் வழங்க தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் 2 கோடி ரூபாய் நன்கொடையை தற்போது அறிவித்துள்ளது. குர்கான் மற்றும் ஹலோல் (வதோதரா) ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் இந்த தொகையில் வழங்கப்படும்.

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

மேற்கண்ட 2 நகரங்களிலும்தான் எம்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலை மற்றும் அலுவலகம் அமைந்துள்ளன. இந்த 2 கோடி ரூபாய் நன்கொடையில் 1 கோடி ரூபாயை எம்ஜி நேரடியாக வழங்குகிறது. எஞ்சிய 1 கோடி ரூபாயை எம்ஜி நிறுவனத்தின் ஊழியர்கள் நன்கொடையாக வழங்குகின்றனர். கொரோனா வைரஸை எதிர்த்து போரிட்டு வரும் இந்தியாவிற்கு எம்ஜி நிறுவனம் உதவ முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

இந்த 2 கோடி ரூபாயில், கையுறைகள், மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் மற்றும் படுக்கைகள் ஆகியவற்றை எம்ஜி நிறுவனம் வழங்கவுள்ளது. குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் தேவையை பொறுத்து, அதற்கு ஏற்ப உதவி செய்யப்படும். இதற்காக சமூக வலை தளங்களில் எம்ஜி நிறுவனத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கிய முதல் தயாரிப்பு ஹெக்டர். எஸ்யூவி ரக காரான எம்ஜி ஹெக்டர் இந்திய மார்க்கெட்டில் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

எஸ்யூவி செக்மெண்ட்டில் அனைவரும் விரும்பும் மாடல்களில் ஒன்றாக எம்ஜி ஹெக்டர் திகழ்ந்து வருகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான வசதிகள் மற்றும் மிக சவாலான விலை ஆகிய காரணங்களால்தான் இந்திய வாடிக்கையாளர்கள் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு இந்த அளவிற்கு வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது

இந்தியர்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றிக்கடனாக தற்போது எம்ஜி நிறுவனம் உதவி செய்ய முன்வந்துள்ளது. ஹெக்டரை தொடர்ந்து இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Coronavirus Pandemic - MG India Donates Rs.2 Crore. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X