நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

தொழிற்சாலை அல்லாமல் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென் மாடல் சாலையில் செல்லும்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள வீடியோவை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

சூப்பர் கார்கள், பெரும்பாலான ஆட்டோமொபைல் ப்ரியர்களின் கனவாக உள்ளன. ஏனெனில் அவற்றில் என்ஜின் பவர், தோற்றம் மற்றும் எக்ஸாஸ்ட் சத்தம் உள்ளிட்டவை பார்ப்பவர் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் அளவில் இருக்கும்.

நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

ஆனால் சூப்பர்கார்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள் என்று பார்த்தால் மிக குறைவானவர்களே. மற்றவர்களுக்கு இன்னும் சூப்பர் கார்கள் மொபைலிலும் லேப்-டாப்களிலும் வெறும் போட்டோக்களாகவே உள்ளன. ஆனால் அனைவருக்கும் இவ்வாறான கார்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஒரே மாதிரியாகவே உள்ளது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

ஒரு சிலரோ, அவ்வளவு தொகை கொடுத்து சூப்பர் கார்களை வாங்க முடியாவிட்டால் என்ன.. நாமே சொந்தமாக தயாரித்துவிடுவோம் என இறங்கிவிடுகின்றனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென் மாடல் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

வெறும் கைகளின் மூலமாக மெட்டல்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹூராகென் மாதிரி காரில் சாதாரண என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரிஜினல் ஹூராகென் மாடலை போல் இல்லாமல் இருந்தாலும், அதற்கு இணையாக உருவாக்க இதன் டிசைனர் முயற்சித்திருப்பது தெரிய வருகிறது.

MOST READ: இந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..?

நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

இந்த கஸ்டம் பணிக்கு டிசைனர் லம்போர்கினி ஹூராகென் மாடலை தேர்ந்தெடுத்திருப்பது ஒன்றும் ஆச்சிரியமானது அல்ல. ஏனெனில் இத்தாலிய நாட்டை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் பல ஆண்டுகளாக விற்பனை செய்துவரும் அதன் கூர்மையான பாகங்களை கொண்ட கார்களால் உலகளவில் பிரபலமானது.

நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

இதனால் இந்த ஹூராகென் மாதிரி மாடல் சாலையில் செல்லும்போது பலரது கவனத்தை வெகுவாக ஈர்ப்பதை வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது. இந்த மாதிரி ஹூராகென் மாடல் உண்மையான மாடலை போன்று முன்புற பம்பருக்கு மேற்புறத்தில் பெரிய அளவிலான ஏர் டேம்களை கொண்டுள்ளது.

MOST READ: ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

இதேபோல் பொனெட்டும் சில கூர்மையான லைன்களுடன் அதே தத்துவத்தை தான் பின்பற்றியுள்ளது. ஹெட்லேம்ப் டிசைன் சற்று சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியில் ஸ்லோப்பிங் ரூஃப்லைன் ஹைலைட்டாக உள்ளது. பின்பகுதியும் உண்மையான ஹூராகென் மாடலுக்கு எந்த விதத்திலும் சளித்ததாக இல்லை.

நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

மேலும் இந்த கஸ்டம் வேலைகள் இந்த காரில் இன்னும் முடியவில்லை. ஏனெனில் பெயிண்ட் பணிகள் உள்ளிட்டவை பாதி நிலையில் தான் உள்ளன. சிவப்பு நிறத்திற்கு பதிலாக லம்போர்கினியின் மஞ்சள் நிறம் கொடுக்கப்பட்டிருந்தால் பெரும்பாலானோர் இது உண்மையான ஹூராகென் மாடல் என்று தான் நம்பிவிடுவார்கள்.

MOST READ: கண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... ஏன் தெரியுமா?

நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...

மற்றப்படி இந்த கஸ்டம் காரில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் அமைப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. வழக்கமான லம்போர்கினி ஹூராகென் மாடல் தோற்றம் மட்டுமின்றி ஆற்றலிலும் உயர் நிலையில் உள்ளது. ஹுராகெனில் 5.2 லிட்டர் வி10 என்ஜினை லம்போர்கினி நிறுவனம் பொருத்தி வருகிறது.

Most Read Articles

English summary
Home-made Lamborghini Huracan From Punjab Is Starry-Eyed Metal
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X