புதிய டட்சன் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டட்சன் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்

கொரோனா பாதிப்பு காரணமாக, கார் விற்பனை அதள பாதாளத்தில் உள்ளது. இதிலிருந்து மீண்டு வருவதற்காக பல சிறப்பு திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டட்சன் கார் நிறுவனமும் பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

புதிய டட்சன் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்

அதன்படி, டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களுக்கு குறைவான வட்டி விகித கடன், பழைய காரை மாற்றி டட்சன் கார் வாங்குவோருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை, சிறப்பு கடன் திட்டங்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய டட்சன் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்

வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மாதத் தவணை இல்லாத கடன் திட்டம் வழங்கப்படுகிறது. அதுவே, தெற்கு மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு 6.99 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

புதிய டட்சன் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்

இதுதவிர்த்து, டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களுக்கு ரூ.25,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பும் உள்ளது. ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் சலுகையாக பெற முடியும்.

புதிய டட்சன் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் பட்ஜெட் விலையில் அதிக மதிப்பு மிக்க அம்சங்களுடன் விற்பனையில் உள்ளன. இந்த கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய டட்சன் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் மாடல் 76 பிஎச்பி பவரையும் 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார்களின் மதிப்பை உயர்த்துவதில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

புதிய டட்சன் கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்... முழு விபரம்

டட்சன் கோ கார் ரூ.3.99 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், கோ ப்ளஸ் கார் ரூ.4.19 லட்சம் முதல் ரூ.6.89 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். மாருதி வேகன் ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ உள்ளிட்ட பட்ஜெட் மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun India has announced attractive finance schemes and discounts offered during July 2020. The discounts and offers are offered on the GO and GO+ models and are valid for purchases made during this month.
Story first published: Wednesday, July 15, 2020, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X