பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டட்சன் கார் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு சேமிப்பை பெற முடியும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

 பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த மாற்றுத் தேர்வாக டட்சன் கார்கள் உள்ளன. பட்ஜெட் விலையில் போதிய இடவசதி கொண்ட டட்சன் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது.

 பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

இந்த நிலையில், பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பு சேமிப்புச் சலுகைகளை டட்சன் கார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.47,500 வரை தள்ளுபடி சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி காருக்கு ரூ.42,500 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இப்போது உள்ளது. வரும் 15ந் தேதிக்கு பின்னர் இந்த சேமிப்புச் சலுகைகளில் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும். வரும் 15ந் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,500 சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படும்.

 பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

அடுத்து டட்சன் கோ காருக்கு ரூ.47,500 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.20,000 வரையில் தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறலாம். அடுத்து வரும் 15ந் தேதி வரை முன்பதிவு செய்வோருக்கு ரூ.7,500 சிறப்புத் தள்ளுபடியாக வழங்கப்படும்.

 பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

டட்சன் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.34,500 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதில், ரூ.7,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறலாம். வரும் 15ந் தேதி வரை முன்பதிவு செய்வோருக்கு ரூ.7,500 சிறப்புத் தள்ளுபடியாகவும் பெரும் வாய்ப்புள்ளது.

 பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

இதுதவிர்த்து, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு கார்ப்பரேட் போனஸாக ரூ.7,000 சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

டட்சன் ரெடிகோ காரில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளன. ரூ.3.46 லட்சம் முதல் ரூ.5.75 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 பண்டிகை காலம் நெருங்குகிறது.... அதிரடி ஆஃபர்களை அறிவித்தது டட்சன்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு உள்ளது. இந்த எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. டட்சன் கோ கார் ரூ.4.88 லட்சம் ஆரம்ப விலையிலும், டட்சன் கோ ப்ளஸ் கார் ரூ.5.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கின்றன.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun #diwali 2020
English summary
Datsun has announced festive season discount offer on cars upto Rs.47,500 and this offer will be available till 15th october,2020.
Story first published: Tuesday, October 6, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X