டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் விரைவில் அறிமுகம்

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது. இந்த கார்கள் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

நிஸான் நிறுவனத்தின் குறைவான விலை கார்கள் டட்சன் பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் கார் சந்தைகளை குறிவைத்து இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதிக இடவசதி, சிறப்பம்சங்கள், குறைவான விலை என்பதே இந்த டட்சன் பிராண்டு கார்களின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது.

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

கடந்த 1ந் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் அதற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார்கள் விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

MOST READ: ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

இந்த சூழலில், கொரோனா பிரச்னை தலை விரித்தாடும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் அனைத்து நிறுவனங்களும் இணையதளத்தில் தங்களது பிஎஸ்6 மாடல்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் டட்சன் இணையதள பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் D, A, A(O), T மற்றும் T (O) ஆகிய 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

MOST READ: 'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

இந்த இரண்டு கார்களிலும் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

இதன் சிவிடி கியர்பாக்ஸ் மாடலில் இருக்கும் 1. 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் இருக்கிறது. டட்சன் கோ காரின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 19.02 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 1959 கிமீ மைலேஜையும் தரும். கோ ப்ளஸ் காரின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 19.02 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 18.57 கிமீ மைலேஜையும் வழங்கும்.

MOST READ: அப்படியே பாதியாக குறைந்த அதிசயம்! பெட்ரோல், டீசல் பத்தி இப்படி ஒரு செய்தி மீண்டும் வருவது கஷ்டம்தான்

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையிலேயே பிஎஸ்6 மாடல்கள் வந்துள்ளன. அதிக வித்தியாசங்கள் இல்லை. எல்இடி பகல்நேர விளக்குகள், 14 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

இந்த கார்களில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முழுமையான க்ளவ் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் நியூ மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

MOST READ: நடுரோட்டில் தீப்பிடித்த கார்... போலீஸாரால் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட கல்யாண மாப்பிள்ளை

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் டைனமிக் கன்ட்ரோல், சீட் பெல்ட் ரிமைன்டர் ஆகியவையும் இந்த கார்களில் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் பட்டியலில் இணைந்தது!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடல்கள் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. பொது முடக்கம் முடிவுக்கு வரும்போது விலை அறிவிப்பு வெளியிடப்பட்டு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்4 மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் வரும் வாய்ப்பு உள்ளது.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun India has listed the Go and Go+ BS6 models on its official website ahead of the launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X