இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன..?

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட டட்சன் ரெடி-கோ மாடல் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பிஎஸ்6 டட்சன் மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன...?

டட்சன் நிறுவனம் ரெடி-கோ மாடலை முதன்முறையாக இந்தியாவில் கடந்த 2016ல் அறிமுகப்படுத்தியது. அப்போதில் இருந்து தற்போது தான் இந்த கார் அப்டேட்டை பெற்றுள்ளது. இதனால் இந்த மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன...?

கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு ரெடி-கோ மாடல் அப்டேட் வெர்சனை பெற்றுள்ளதால் இதன் வெளிப்புற மற்றும் உட்புற லேஅவுட்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. 4 விதமான வேரியண்ட்களுடன் இரு என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளை இந்த பிஎஸ்6 கார் புதியதாக பெற்றுள்ளது.

இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன...?

பிஎஸ்6 அப்டேட் உடன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக வெளிவந்துள்ள இந்த 2020 மாடலில் L-வடிவிலான எல்இடி பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றன. இவற்றுடன் எல்இடி பனி விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லைட் க்ளஸ்ட்டர்களும் இந்த காரில் உள்ளன.

MOST READ: ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன...?

8.0 இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை உட்புறத்தில் கொண்டுள்ள இந்த பிஎஸ்6 மாடல் இரட்டை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், உட்புறத்தில் இருந்து அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பக்கவாட்டு கண்ணாடிகள், பின்பக்கமாக பார்க் செய்வதற்கு கேமிரா, சென்சார்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன...?

இதன் டேஸ்போர்டு பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதால் உட்புற கேபின் பார்ப்பதற்கே மிகவும் ப்ரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதன் டேஸ்போர்டில் உள்ள இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இணைக்கும் வசதியுடன் ப்ளூடூத், உரிமையாளரின் குரலுக்கு ஏற்ப செயல்படும் அம்சங்களையும் கொண்டுள்ளது.

MOST READ: விற்பனையாகாத பிஎஸ்4 கார்கள்... ரூ.125 கோடியை நஷ்ட கணக்கில் எழுதிய மாருதி சுஸுகி!

இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன...?

இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ள 800சிசி மற்றும் 1.0 லிட்டர் என்ற இரு என்ஜின் தேர்வுகளும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இதில் 800சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனையும், 1.0 லிட்டர் என்ஜின் 67 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும்.

இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன...?

இந்த என்ஜின் தேர்வுகளுடன் தற்போதைய ரெடி-கோ மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் தான் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த புதிய தலைமுறை காரில் கூடுதலாக 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் இணைக்கப்பட்டுள்ளது.

MOST READ: ஊரடங்கை மீறி தேசிய நெடுஞ்சாலையில் குதிரை சவாரி... பாஜக எம்எல்ஏ மகனின் அடாவடி செயல்... வைரல் வீடியோ!

இந்தியாவில் இன்று அறிமுகமாகுகிறது பிஎஸ்6 டட்சன் ரெடி-கோ... கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன...?

குறைவான விலையிலான பட்ஜெட் ரக மாடல்களில் டட்சன் ரெடி-கோ மாடல் அதன் வித்தியாசமான தோற்றத்தினாலும், அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸினாலும் வாடிக்கையாளர்களின் பிரதான தேர்வாக விளங்குகிறது. இந்த நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள இதன் 2020 மாடலுக்கு விற்பனையில் போட்டியினை அளிக்க ரெனால்ட் க்விட், மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் மாருதி சுசுகி ஆல்டோ கார்கள் தயாராக உள்ளன.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
BS6 compliant Datsun redi-GO to be unveiled today
Story first published: Friday, May 22, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X