ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டட்சன் ரெடிகோ கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பை தரும் வகையில் அதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. 

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

பட்ஜெட் கார்

இந்தியாவின் மிக குறைவான பட்ஜெட் கார் தேர்வுகளில் டட்சன் ரெடிகோ கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. மேலும், இதன் ரகத்தில் ஹேட்ச்பேக் கார்களிலிருந்து சற்று வித்தியாசமான டிசைன், எஸ்யூவி போன்று அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவை இதற்கு கூடுதல் மதிப்பை வழங்கி வருகிறது.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

பிஎஸ்6 எஞ்சின்கள்

இந்த நிலையில், கடந்த மாதம் அமலுக்கு வந்துள்ள பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இன்று டட்சன் ரெடிகோ கார் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய டட்சன் ரெடிகோ கார் 800சிசி மற்றும் 999சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் பிஎஸ்6 தரத்துடன் கிடைக்கும். இதில், 800சிசி எஞ்சின் மாடலானது D, A, T மற்றும் T(O) ஆகிய வேரியண்ட்டுகளிலும், 999சிசி பெட்ரோல் எஞ்சினின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் T(O) ஆகிய வேரியண்ட்டிலும் கிடைக்கும்.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

செயல்திறன்

டட்சன் ரெடிகோ காரின் 800சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 73 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் 999சிசி (1.0 லி) பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 800சிசி பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

மைலேஜ்

டட்சன் ரெடிகோ காரின் 800சிசி பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.71 கிமீ மைலேஜையும், 1.0 லிட்டர் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 21.70 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று டட்சன் தெரிவித்துள்ளது.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய அம்சங்கள்

2020 மாடலாக வந்திருக்கும் டட்சன் ரெடிகோ காரில் முகப்பு மிகவும் வசீகரமாக மாற்றப்பட்டுள்ளது. பெரிய க்ரில் அமைப்பு, L வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், பாடி கிளாடிங், டியூவல் டோன் வீல் கவர்கள், பாடி கலர் ரியர் வியூ மிரர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. டிசைனில் பெரிய மாற்றங்கள் தென்படவில்லை.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகரிப்பு

இந்த காரின் க்ரவுண்ட் கிளியரன்ஸ் 187 மிமீ ஆக சற்றே அதிகரிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் கொண்ட பம்பர் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இன்டீரியர்

புதிய டட்சன் ரெடிகோ காரில் இன்டீரியரின் பாகங்களின் தரம் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டு அமைப்பானது கருப்பு மற்றும் கன்மெட்டல் க்ரே என்ற இரட்டை வண்ணத் தேர்வில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் சி பில்லர் பீஜ் வண்ண பேனலுடன் காட்சித் தருகிறது.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் புதிய 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். வாய்ஸ் ரெககனிஷன் சப்போர்ட் வசதியும் உள்ளது. AM, FM, iPod, புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன. ரியர் வியூ கேமராவுக்கான திரையாகவும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் செயல்படும்.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

அலங்கார அம்சங்கள்

இந்த காரில் இரட்டை வண்ண ஃபேரப்ரிங் அப்ஹோல்ஸ்ட்ரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்ட்ரல் கன்சோல் டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கியர் லிவரில் க்ரோம் பட்டையுடன் அலங்காரமாக தெரிகிறது. மொத்தத்தில் உட்புறமும், வெளிப்புறமும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு வசீகரமாக இருக்கிறது.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

வண்ணத் தேர்வுகள்

புதிய டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலானது விவிட் புளூ, ரூபி ரெட், சேண்ட்ஸ்டோன் பிரவுன், பிரான்ஸ் க்ரே, க்றிஸ்ட்டல் சில்வர் மற்றும் ஓபல் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு சென்சார்கள், 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள் என பல்வேறு பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

விலை விபரம்

புதிய டட்சன் ரெடிகோ கார் ரூ.2.83 லட்சம் முதல் ரூ.4.77 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மாருதி ஆல்ட்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ, ரெனோ க்விட் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடுகிறது. மிகவும் குறைவான பட்ஜெட்டில் புதிய கார் வாங்க திட்டமிடுவோரை திருப்திப்படுத்தும் பல விஷயங்கள் உள்ளன. எனவே, இது மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun has launched Redi-GO 2020 facelift model in India and prices starting at Rs.2.83 Lakh (Ex-Showroom)
Story first published: Thursday, May 28, 2020, 17:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X