அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு வந்துள்ளது. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிக மதிப்புடையதாக வந்திருக்கும் இந்த காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டட்சன் ரெடிகோ கார் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வந்துள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு பொதுவாகவும், 1.0 லிட்டர் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாகவும் உள்ளது. 800சிசி பெட்ரோல் மாடல் D, A, T மற்றும் T(O) ஆகிய வேரியண்ட்டுகளிலும், 1.0 லிட்டர் பெட்ரோ்ல மாடல் T(O) வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

டி வேரியண்ட்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.2.83 லட்சம்

இதுதான் டட்சன் ரெடிகோ காரின் ஆரம்ப விலையில் கிடைக்கும் வேரியண்ட். இந்த வேரியண்ட் 800சிசி பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் 14 அங்குல ஸ்டீல்கள், க்ரோம் க்ரில் அமைப்பு, ஹாலஜன் ஹெட்லைட்டுகள், டின்ட் கண்ணாடிகள், ரிமோட் முறையில் பின்புற பூட் ரூம் கதவை திறக்கும் வசதி, உட்புறத்திலிருந்து மேனுவலாக அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

மேலும், இந்த வேரிண்ட்டில் ஓட்டுனருக்கான ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், முன்புற, பின்புறத்திலும் இருக்கைகளுடன் இணைந்த அனைப்புடைய ஹெட்ரெஸ்ட்டுகள் உள்ளன.

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ரெடிகோ ஏ வேரியண்ட்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.3.58 லட்சம்

இந்த வேரியண்ட்டும் 800சிசி பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டும் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் பாடி கலர் பம்பர்கள், பவர் ஸ்டீயரிங் சிஸ்டம், கூலர், ஹீட்டர் வசதியுடன் மேனுவல் ஏசி சிஸ்டம், மடக்கும் வசதியுடன் பின் இருக்கைகள், இம்மொபைலைசர், டாக்கோமீட்டர், ஆக்சஸெரீ சாக்கெட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.

MOST READ : வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா?

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ரெடிகோ டி வேரியண்ட்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.3.80 லட்சம்

இந்த வேரியண்ட்டும் 800சிசி பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக சென்ட்ரல் ரிமோட் லாக்கிங் சிஸ்டம், ஃபுல் வீல் கவர்கள், பாடி கலர் கைப்பிடிகள், புளூடூத், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் மற்றும் எஃப்எம் வசதியுடன் 2 டின் ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீல், கதவு கைப்பிடிகள், சென்டர் கன்சோல் ஆகியவற்றில் சில்வர் வண்ண அலங்கார பாகங்கள், கன்மெட்டல் பாகத்துடன் டேஷ்போர்டு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ரெடிகோ டி ஆப்ஷனல்

எக்ஸ்ஷோரூம் விலை: ரூ.4.16 லட்சம் முதல் ரூ.4.77 லட்சம் வரை

இந்த வேரியண்ட்டானது 800சிசி பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதுடன், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வானது இந்த ஒரே வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

MOST READ : வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எலஇடி விளக்கு பட்டையுடன் டெயில் லைட்டுகள், பாடி கலர் மிரர்கள், ரியர் வியூ கேமரா, இரட்டை வண்ணத்திலான ஃபுல் வீல் கவர்கள் கொடுக்கப்படுகின்றன.

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் மற்றும எஃப்எம் ரேடியோவும் உள்ளது. முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ், பிரிமீயம் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட சென்ட்ரோல் கன்சோல் ஆகியவை உள்ளன.

MOST READ : டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல

அசத்தும் அம்சங்களுடன் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்... வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

போட்டியாளர்கள்

டட்சன் ரெடிகோ காரின் 800சிசி மாடலானது மாருதி ஆல்ட்டோ, ரெனோ க்விட் 800சிசி மாடல்களுடன் போட்டியிடுகிறது. 1.0 லிட்டர் மாடலானது ரெனோ க்விட் 1.0 லிட்டர் மாடல் மற்றும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்களுக்கு இணையான ரகத்தில் உள்ளது. டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டாப் வேரியண்ட்தான் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும். பிற வேரியண்ட்டுகளில் அடிப்படை வசதிகளே உள்ளன.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
Here is the variant wise features list of Datsun Redigo facelift 2020 model.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X