ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகுடன் கடந்த வாரம் வெளியான டிசி டிசைன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் இணைய ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக மாறியது. இந்த கார் பற்றிய பல முக்கியத் தகவல்களை இப்போது வெளியாகி இருக்கின்றன. அதில், நீங்கள் எதிர்பார்க்கும் கேள்விக்கான விடையும் இப்போது கிடைத்திருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

அமர்க்களமான இந்த அம்பாடர் குறித்து டிசி நிறுவனத்தின் ஸ்தாபகர் திலீப் சாப்ரியாக இந்த எலெக்ட்ரிக் அம்பாசடர் குறித்த பல்வேறு தகவல்களை எலெக்ட்ரிக் வெஹிக்கிள் வெப் தளத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

சுவிஸ் எஞ்சினியரிங்

எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் மாடலின் பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையுமே சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம்தான் உருவாக்கி இருக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் பெயரை திலீப் சாப்ரியா பகிர்ந்து கொள்ளவில்லை.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

கொஞ்சம் பெருசு

சாதாரண அம்பாசடர் காரைவிட 125 மிமீ கூடுதல் நீளமும், 170 மிமீ கூடுதல் அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை பெற்றிருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

இன்டீரியர்

சில ஆண்டுகளுக்கு முன் டிசி நிறுவனம் வெளியிட்ட அம்பிராய்டு என்ற அம்பாசடர் காரின் இன்டீரியர் அம்சங்கள் அடிப்படையில்தான் இதன் இன்டீரியர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம். மிக சொகுசான, கவர்ச்சிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

கல்விங் கதவுகள்

இந்த காரில் கல்விங் வகை கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது, கதவுகள் மேல்நோக்கி திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கல்விங் கதவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரின் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த காரிலும் இதே வகை கல்விங் கதவுகள்தான் பொருத்தப்பட்டுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

அசத்தும் செயல்திறன்

இந்த காரில் அதிசெயல்திறன் மிக்க மின் மோட்டார் மற்றும் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, 0 - 60 கிமீ வேகத்தை இந்த மின்சார கார் வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடுமாம்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

ரேஞ்ச்

இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்டவற்றின் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

அமோக வரவேற்பு

இந்த கார் வெளியிடப்பட்டதில் இருந்து விற்பனை செய்யப்படுவது குறித்து ஏராளமான விசாரணைகள் வருவதாக திலீப் சாப்ரியா பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் எதிர்பார்த்த அந்த விஷயத்தையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

விற்பனை?

இந்த கார் வெளியிடப்பட்டபோது பலரின் கேள்வி, இது விற்பனைக்கு கொண்டு வரப்படுமா என்பதாகவே இருந்தது. இந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ஆம். அடுத்த ஆண்டு இறுதியில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வர டிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

உற்பத்தி பணிகள்

டிசி அவந்தி கார் உற்பத்திப் பிரிவில்தான் இந்த மின்சார அம்பாசடர் காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளதாம். மொத்தமாக 5,000 யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா மட்டுமின்றி உலக அளவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

எதிர்பார்க்கும் விலை

இந்த காருக்கு ரூ.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக சொகுசான, அதிசெயல்திறன் மிக்க மின்சார கார் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

விவிஐபி பயன்பாடு

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசுத் துறையில் அம்பாசடர் கார் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. பிரதமர் முதல் அதிகாரிகள் வரை ஆஸ்தான வாகனமாகவே இருந்தது. இந்த புதிய மின்சார அம்பாசடர் காரும் பிரதமர் உள்ளிட்டோரின் பயன்பாட்டை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டு இருப்பதாக திலீப் சாப்ரியா தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
DC Design company founder Dilip Chhabria has revealed many key details of electric ambassador, which was released recently.
Story first published: Tuesday, April 14, 2020, 15:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X