Just In
- 16 min ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
- 3 hrs ago
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- 3 hrs ago
விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!
- 6 hrs ago
இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!
Don't Miss!
- Movies
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- News
பிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகர் விக்ரம்க்காக உருவாகிய மினி சொர்க்கம்.. அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ வசதியா! நம்பவே முடியல!
நடிகர் சியான் விக்ரமுக்காக சாதாரண மினி பேருந்து ஒன்று மினி சொர்க்கமாக உருமாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை நான்கு சக்கர வாகன உற்பத்தியில் டாடா, இருசக்கர வாகன உற்பத்தியில் ஹீரோ மோட்டோகார்ப்ஸ் ஆகியவையே ஜாம்பவான் நிறுவனங்களாக காட்சியளித்து வருகின்றன. இவையிரண்டும் இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பழமை வாய்ந்த நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களைப் போலவே வாகன மாடிஃபிகேஷன் உலகின் ஜாம்பவானாக டிசி டிசைன் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிறுவனம், வாகனங்களை மறு சீரமைத்தல் மற்றும் மெருகேற்றுதல் போன்ற மாடிஃபிகேஷன் பணிகளை மட்டுமே செய்து வருகின்றது. இதன் கை வண்ணத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் பல லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு இணையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில், மிக மிக பழைய வாகனங்கள் முதல் புத்தம் புதிய கார்கள் வரை அடங்கும்.

அவ்வாறு, இந்நிறுவனம் மாற்றியமைத்த கார்கள் அனைத்தும், தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லக்சூரி கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் சொகுசு மற்றும் தொழில்நுட்பங்களை பெற்றவையாக மாறியிருக்கின்றன.
அந்தவகையில், சமீபத்தில்கூட ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காரை டிசி2 நிறுவனம் புத்தம் புது ஸ்டைல் மற்றும் டிசைனுக்கு ஏற்றவாறு மின்சார காராக மாற்றியிருந்தது.

இதுமட்டுமின்றி, சில திரைபிரபலங்களின் கார்களைக்கூட அது மாடிஃபை செய்துள்ளது. அந்தவகையில், சமீபத்தில் பாலிவுட் திரைபிரபலங்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் நடிகை மாதுரி திக்ஸித் ஆகியோரின் கார்களை அது மாடிஃபை செய்து வழங்கியிருந்தது.
இந்நிலையில், பிரபல தமிழ் திரைப்பட ஹீரோவான நமது சியான் விக்ரமுக்கு சொந்தமான மினி பேருந்தை சர்வதேச சந்தையில் கிடைக்கும் கேரவன்களுக்கு இணையாக அது மாடிஃபை செய்திருக்கின்றது.

இதுகுறித்த புகைப்படத்தை டிசி2 நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் கை வண்ணத்தால் அந்த மினி பேருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கேரவன்களுக்கு இணையான பேரழகைப் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
சொகுசின் மறு உருவமாக மாற்றப்பட்டிருக்கும் இந்த மினி பேருந்தைப் பற்றிய முழுமையான தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

இருப்பினும், இந்த மினி பேருந்தை நடிகர் சியான் விக்ரமுக்காக அந்த நிறுவனம் மினி சொர்க்கமாக உருவாக்கியிருப்பது மட்டும் தெரிய வந்துள்ளது.
இந்த மினி வேன்தான் இனி படப்புகளின்போது ஓய்வெடுக்க, மேக் அப் செய்துகொள்ள மற்றும் ப்ரெஷ்-அப் ஆகுவது என அனைத்திற்கும் பயன்பட இருக்கின்றது. இதற்கான அனைத்து வசதிகளும் மினி வேனில் (கேரவன்) டிசி2 வழங்கியிருக்கின்றது.

அதுமட்டுமின்றி, கேரவனில் சின்ன மீட்டிங் செய்வது ஏற்பவும் ஷோஃபா மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், ஓய்வெடுக்க மட்டுமல்ல இதனை மினி ஆஃபிஸாகவும் விக்ரமால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தொடர்ந்து, நேரத்தை பொழுதுபோக்குவதற்காக சிறிய தொலைக்காட்சிப் பெட்டி, மினி கழிவறை மற்றும் கூல் ட்ரிங்க்ஸ்களை கூலிங்காக வைத்துக் கொள்ள ஏதுவான மினி ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பிரிமியம் வசதிகளும் இந்த கேரவனில் டிசி2 நிறுவனம் புகுத்தியுள்ளது. இதுபோன்ற அம்சங்களின் காரணமாகவே இந்த மினி வேனை மினி சொர்க்கம் என அழைக்கப்படுகின்றது.

டிசி2 நிறுவனத்தின் கை வண்ணத்தில் மாறிய கார்..
இதனை உறுதிப்படுத்தும் வகையில், சொகுசு அம்சங்கள் மட்டுமின்றி உல்லாச கப்பலில் இருப்பதைப் போன்ற உணர்வை வழங்குவதற்கான அம்சங்களும் கேரவனின் இன்டீரியரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்காக கேரவனின் ஃப்ளூருக்கு நன்கு பாலிஷ் செய்யப்பட்ட உட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், பக்கவாட்டு பகுதிகளில் ராயல் லுக்கை வழங்கும் விதமான ஸ்கிரீன்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

மேலும், மைண்டிற்கு ஃப்ரெஷ்ஷான உணர்வை வழங்கும் விதமான மின் விளக்கு அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த அலங்காரங்கள் அனைத்தும் ஐரோப்பிய ஸ்டைலை தழுவி வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், சர்வதேச சொகுசு வாகனங்களில் காணப்படும் வசதிகள் அனைத்தும் விக்ரமிற்காக பிரத்யேகமாக தயாராகியிருக்கும் இந்த கேரவனில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

பொதுவாக டிசி நிறுவனம் இதுபோன்ற மாடிஃபிகேஷன்களை மிகக் குறைந்த செலவில் வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இது பயனர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைப் பொருத்தது. ஆகையால், சியான் விக்ரமின் கைகளில் விரைவில் கிடைக்கவிருக்கும் இந்த கேரவன் சில லட்சங்கள் செலவிலேயே இந்த பிரம்மிப்பை ஏற்படுத்தும் உருமாற்றத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஆனால், டிசி2 இதனை அதிகாரப்பூர்வமாக வெளியடாததால் அதில் சர்ப்ரைஸே நிலவுகின்றது.