மின்சார கார் வாங்கினால் இவ்வளவு பெரிய தொகை மானியமா? இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கை ஒன்று, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய 2 பிரச்னைகளையும் குறைப்பதற்கு மின்சார வாகனங்கள் நல்ல தீர்வாக பார்க்கப்படுகின்றன. ஆனால் மின்சார வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகம் என்பதால், பொதுமக்கள் மத்தியில் இன்னும் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

எனவே மின்சார வாகனங்களின் விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதாவது மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது, சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தை ரத்து செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

இதன் மூலமாக மின்சார வாகனங்களின் விலை வெகுவாக குறையும். எனவே மின்சார வாகனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மத்திய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசும் ஒன்று.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

தேசிய தலைநகருக்கான மின்சார வாகன கொள்கையை, டெல்லி மாநில அரசு கடந்த மாதம் அறிவித்தது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை முறைப்படி அறிவித்தார். இதன் மூலம் டெல்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து, காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என டெல்லி அரசு எதிர்பார்க்கிறது.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

உலகில் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நகரங்களில் டெல்லியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த மின்சார வாகன கொள்கை மூலமாக பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் எனவும் நம்பப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு நல்ல அறிவிப்புகளை உள்ளடக்கியதாக இந்த மின்சார வாகன கொள்கை உள்ளது.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

டெல்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் புதிய மின்சார வாகனங்களை பதிவு செய்வதே இந்த மின்சார வாகன கொள்கையின் நோக்கம் என இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிடும்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இந்த புதிய மின்சார வாகன கொள்கையின் கீழ், மானியம் வழங்கும் திட்டங்களை டெல்லி அரசு அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் மின்சார ரிக்ஸாக்களுக்கு, இந்த மின்சார வாகன கொள்கையின் கீழ் 30 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். அதே சமயம் மின்சார கார்கள் என்றால், அதிகபட்சமாக 1.50 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

நீங்கள் புதிய மின்சார வாகனங்களை வாங்கினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னர், வெறும் இரண்டே நாட்களில், உங்களின் வங்கி கணக்கிற்கு மானிய தொகை அனுப்பி வைக்கப்படும். அத்துடன் மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்களும், டெல்லி அரசின் போக்குவரத்து துறையிடம் பதிவு செய்ய வேண்டும்.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

இதன்மூலம் டெல்லி மாநில அரசால், சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு மானிய தொகையை எளிதாக அனுப்பி வைக்க முடியும். மேலும் இந்த புதிய மின்சார வாகன கொள்கையின் கீழ், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் ஆகியவை மாநில அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

எனவே மின்சார வாகனங்களை வாங்குவது மக்களுக்கு பெரும் சுமையாக இருக்காது. டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலமாக வரும் மாதங்களில் டெல்லியில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் மையமாக டெல்லி மாறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

டெல்லியில் தற்போதைய நிலையில் சுமார் 11 மில்லியன் (1.10 கோடி) வாகனங்கள் ஓடி கொண்டுள்ளன. இதில், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 83,730 மட்டுமே. இதிலும் பெரும்பாலானவை மின்சார ரிக்ஸாக்கள் ஆகும். இது கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி டெல்லியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வங்கி கணக்கில் வந்து விழும் 1.50 லட்ச ரூபாய்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கெஜ்ரிவால்

ஆனால் டெல்லி அரசு தற்போது எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மூலமாக வரும் மாதங்களில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி அரசை போன்ற மின்சார வாகன கொள்கைகள், மற்ற மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டால், நிச்சயமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு உயரும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Delhi Government's New Electric Vehicle Policy - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X