லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

ஊரடங்கு தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்தும் விதமாக இளைஞர் ஒருவர் செய்த காரியம் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

நல்ல வேலை, கை நிறைய சம்பளம், சொந்த வீடு இதுபோன்ற கனவுகள் இல்லாத நபர்களை பார்ப்பது மிகவும் கடினம். அனைத்து மனிதர்களிடத்திலும் ஏதாவது ஓர் கனவு இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அந்தவகையில், தனக்கென சொந்தமாக ஓர் வாகனத்தை வாங்க வேண்டும் என்பதையும் பலர் தங்களின் வாழ்நாள் கனவாக கொண்டிருக்கின்றனர்.

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இன்றைய காலத்தில் காரை வாங்குவது என்னமோ சுலபம்தான். ஆனால், தற்போதும் ஒரு சில நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களால் புதிய வாகனம் வாங்குவது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. அதிலும், தற்போதைய கொரோனா சூழ்நிலையில் வருமானம் இல்லை, அன்றாட அத்தியாவசிய தேவைக்கே என்ன செய்வது என தவித்து வருகின்ற வேலையில் புதிய வாகனத்தை எங்கிருந்து வாங்குவது என்ற வார்த்தை எழும்புகின்றது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்நிலையில், இளைஞர் ஒருவர் தனது தந்தையின் நீண்ட நாள் கனவான சொந்த கார் ஆசையை நிறைவேற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், தற்போது கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு உச்சத்தில் இருக்கின்ற வேலையிலும், அந்த இளைஞர் தனது தந்தையின் நீண்ட நாள் ஆசையை பூர்த்திச் செய்துள்ளார்.

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இதற்காக டாடா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்றான டியாகோ மாடலை அவர் பரிசாக வழங்கியிருக்கின்றார்.

டெல்லியைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத ஓர் இளைஞர்தான் டாடா டியாகோ காரை அவரது பெற்றோர்களுக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார்.

MOST READ : தீவிரமாக பரவும் வரைஸ்! அச்சத்தில் மக்கள்! நம்பிக்கையை விதைக்க புதிய தந்திரத்தை கையாளும் எடப்பாடியார்

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இதனை சர்ப்ரைஸாக வழங்குவதற்காக அந்த இளைஞர், அவரது நண்பர்கள் சிலரின் உதவியை நாடியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, அருகில் ஓர் பூஜைக்கு செல்லலாம் என அழைத்துவரப்பட்டு அவர்களிடம் புத்தம் புதிய காரை அந்த இளைஞர்கள் ஒப்படைத்தனர்.

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இதற்கு முன்னர் வரை தங்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கின்றது என்பதை அறியாத அந்த பெற்றோர்கள், ஆச்சரியத்துடன் ஷோரூம்களில் இருந்த புதிய கார்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், காரை திடீரென பரிசாக வழங்கியது, அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. மேலும், அவர்களது கண்களை அது கலங்கவும் செய்துள்ளது.

MOST READ : ஊரடங்கில் தளர்வு... மீண்டும் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500...

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்த நெகிழ்ச்சியான சம்பவம்குறித்த வீடியோவை ஜேஎஸ் பிலிம்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் பட்ஜெட் விலை கார்களில் டாடா டியாகோவும் ஒன்று. இந்த காரை டாடா நிறுவனம் சமீபத்தில்தான் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியது. இத்துடன், லேசான சில புதுப்பித்தல்களையும் அது வழங்கியது. இந்த அப்டேட்டால் டாடா டியாகோ மாடர்ன் தோற்றத்தைப் பெற்ற மலிவு விலை காராக மாறியிருக்கின்றது.

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

விலை மற்றும் தோற்றத்தில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த கார் தற்போது இந்தியாவின் அதிக பாதுகாப்பான வாகனங்களில் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. ஆம், சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்புகுறித்த க்ராஷ் டெஸ்ட் பரிசோதனையில் இந்த கார் ஐந்திற்கு 4 நட்சத்திரங்களைப் பெற்றது.

MOST READ : அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்த ரேட்டிங்கானது, டாடா டியாகோ கார் அதிக பாதுகாப்பானது என்பதை உறுதிச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த அதிக பாதுகாப்பு தரத்திற்காக டாடா நிறுவனம் ட்யூவல் ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இணைத்துள்ளது. இத்துடன், ஸ்பீடு அலர்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றது.

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

டாடா நிறுவனம், டியாகோ காரை டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரு வேரியண்டுகளிலும் விற்பனைச் செய்து வந்தது. ஆனால், பிஎஸ்-6 தரம் அறிமுகத்திற்கு பின்னர் பெட்ரோல் வேரியண்டை மட்டும் தற்போது விற்பனைச் செய்து வருகின்றது.

அதாவது, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டில் மட்டுமே டியாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இது அதிகபட்சமாக 84 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இது, ஐந்து ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐந்து ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் தேர்விலும் கிடைக்கின்றது. இத்துடன், இந்த மாடலின் டாப் எண்ட் வேரியண்டில் கன்னெக்ட்நெக்ஸ்ட் எனும் தொழில்நுட்பத்தை டாடா வழங்கி வருகின்றது. இந்த தொழில்நுட்பம் அதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இதன் மூலம் கார் பற்றிய பல தகவல்களை செல்போனிலேயே நம்மால் பெற முடியும்.

லாக்டவுண் தடையை தாண்டி தந்தையை ஆச்சரியப்படுத்திய இளைஞர்... என்ன செய்தார் தெரியுமா?

தற்போது டாடா நிறுவனம், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஆன்-லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து வருகின்றது. இத்துடன், கார்களை வீட்டிலேயே வந்து டெலிவரி வழங்கும் சேவையையும் தொடங்கியிருக்கின்றது. இத்துடன், தள்ளுபடி போன்ற சலுகை திட்டங்களையும் விற்பனையை அதிகரிப்பதற்காக அறிவித்து வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Youngster Gifted His Father A Brand New Tata Tiago Car. Read In Tamil.
Story first published: Saturday, June 6, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X