விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... வீடியோ!

ஆக்ரோஷமாக விரட்டிய சிறுத்தையிடம் இருந்து லாரி டிரைவரை நாய்கள் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல் மற்றும் வீடியோவை இந்த பதிவில் காணலாம்.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்னைகளில் பொதுவானதாக விதிமீறல் வாதிகளின் ஒழுங்கற்ற வாகனம் ஓட்டும் திறன் இருக்கின்றது. இதனை இந்தியாவின் அனைத்து விதமான (எந்தவிதமான) சாலைகளிலும் நம்மால் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, வாகன ஓட்டிகள் சந்திக்கும் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக விலங்குகளின் நடமாட்டம் உள்ளது.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

இது நகரத்தின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் சாலையில் மட்டுமே நடைபெறும் சம்பவம் என நிச்சயமாக நாங்கள் கூற மாட்டோம். ஏனெனில், நம்மில் பலருக்கு முக்கிய நெடுஞ்சாலைகளில்கூட விலங்குகள் குறுக்கிட்ட அனுபவம் கிடைத்திருக்கும்.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

இந்த நிலையிலேயே மிகவும் வித்தியாசமான அனுபவத்தை தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் பெற்றிருக்கின்றார். ஆம், லாரி டிரைவர் ஒருவரை சிறுத்தை ஒன்று விரட்டியது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

தற்போது நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்தியாவின் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடிய நிலையிலேயே காட்சியளிக்கின்றது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சில வாகன ஓட்டிகள் ஜாலி ரைடு சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

ஆறறிவு கொண்ட மனிதர்களே இப்படியென்றால் விலங்குகளைப் பற்றி சொல்லவா வேண்டும். ஆம், ஜாலி ரைடு செல்லும் இளைஞர்களுப் போலவே விலங்குகள் சிலவும் வெறிச்சோடி கிடக்கும் சாலைகளில் ஹாயாக நடமாடத் தொடங்கியிருக்கின்றன.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கின்ற காரணத்தால் அவை எளிதில் வெளியில் தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் மான், மயில் போன்ற சில வன விலங்குகள் மற்றும் பறவைகள், கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிவதை நாம் கண்டிருப்போம். சிலர் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

இந்த வரிசையில் தற்போது சிறுத்தை ஒன்றும் இணைந்திருக்கின்றது. பொதுவாக, அரிதினும் அரிதாகவே மனிதர்களின் கண்களில் இந்த வகை விலங்கினங்கள் தென்படும். ஆனால், அவையும் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மிக சுலபமாக வெளியேவரத் தொடங்கியிருக்கின்றன.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

அந்தவகையில், வெளிவந்த சிறுத்தை ஒன்றே ஹைதராபாத்தின் சாலையோரத்தில் தனது விளையாட்டைக் காட்டத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த வீடியோதான் தற்போது இணைய தளங்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

அந்த வீடியோவில், சாலையின் டிவைடரில் மறைந்தவாறு நின்றுக்கொண்டிருக்கும் இருவர், எதையோ மிகவும் உண்ணிப்பாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திடீரென, அவர்கள் இருவரும் ஏதோ பேயைக் கண்டதைப் போன்று தலை தெரிக்க ஓட ஆரம்பிக்கின்றனர். அதில் ஒருவர் லாரியினுள்ளும், மற்றொருவர் எங்கு மறைவது என தெரியாமல் தட்டித்தடுமாறி கடைசியாக லாரியினுள்ளேயே ஏறுகிறார்.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

அப்போதுதான் அவர்கள் இருவரும் சிறுத்தையைக் கண்டே ஓடி வந்தனர் என்பது தெரியவந்தது. அதுவே அவர்களை விரட்டவும் செய்துள்ளது. இந்த சம்பவத்தில், சிறிது அசந்திருந்தாலும்கூட வெள்ளை நிற சட்டை அணிந்திருந்த நபரை சிறுத்தை ஒரு கை பார்த்திருக்கும். ஆனால், அதற்குள்ளாக அவர் லாரிக்குள் ஏறிவிட்டார். அதேசமயம், அங்கு கூடிய சாலையோர நாய்கள் சில அந்த சிறுத்தையை அங்கிருந்து விரட்ட ஆரம்பித்தன.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

ஆனால், அந்த சிறுத்தையோ தன்னுடைய கர்ஜனை திறனால் நாய்களை விரட்டத் தொடங்கியது. இருப்பினும், விடாமல் கூடிய நாய்கள் அந்த சிறுத்தையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டன. இதனால், செய்வதறியாது அந்த சிறுத்தை அங்குமிங்காக அலைந்தது. பின்னர், சாலையோரத்தில் சென்று படுத்த சிறுத்தை, நாய்களின் தொடர் விரட்டலால் அருகில் இருந்த பண்ணை வீட்டுக்குள் புகுந்துக் கொண்டது. ஹைதராபாத் நகரத்தின் எல்லைப் பகுதியிலேயே அரங்கேறிய இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

இந்த சம்பவத்தில் நாய்கள் இல்லையெனில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி, அசம்பாவிதங்கள் சில நிகழ்ந்திருக்கும். அந்த டிரைவரை காப்பாற்றியதோடு மட்டுமில்லாமல் அப்பகுதியைவிட்டே விரட்டுவதற்கு நாய்கள்தான் உதவியிருக்கின்றன.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தெரு நாய்களால் அதிக தொல்லை ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து, நகராட்சி ஊழியர்கள் சிலர் தெருநாய்களைக் கொன்று குவித்த சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஏற்கனவே, மக்கள் பலர் கொரோனா அச்சம் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்தநிலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அவர்களின் வயிற்றில் புளியையே கரைக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, வேட்டையாடும் வன விலங்குகளின் நடமாட்டம் தென்படும் பகுதிகளில் மக்கள் மிகுந்து அச்சத்தில் உறைந்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

இச்சம்பவம்குறித்த வன அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வந்த வன அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க பல கட்ட முயற்சிகளை எடுத்தனர். ஆனால், சிறுத்தையோ அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டது. எனவே, சிறுத்தையைப் பிடிக்கும் செயலில் அதிகாரிகள் தொடர் தோல்வியையேச் சந்தித்தனர். எனவே, அங்கிருக்கும் கேமிராக்களின் ஊடாக சிறுத்தை நடமாட்டத்தை அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனர். ஆனால், அது தற்போது எங்கிருக்கின்றது என்பதுகுறித்து தெரியவில்லை.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

எனவே, நகரத்தின் சில பகுதிகளில் அதனை பிடிப்பதற்காக கூண்டுகளை வன அதிகாரிகள் தயார்படுத்தியுள்ளனர். பொதுவாக இம்மாதிரியான சம்பவங்களை அடர்ந்த வனப் பகுதியில் வாகனங்களை இயக்கும் அல்லது முகாமிட்டு தங்கும் வாகன ஓட்டிகளே சந்திப்பது வழக்கம். எனவே, நகர்புறத்தில் இதுமாதிரியான அனுபவத்தை வாகன ஓட்டிகள் அரிதினும் அரிதாகவே பார்க்கப்படுகின்றது.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

இதுமாதிரியான சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிக கவனமாக இருக்க வேண்டும் எனவே அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வன விலங்குகள் ஆக்கிரோஷமானவை ஆகும். அவை எப்போது என்ன செய்யும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எனவே, அவற்றை சாலையில் கண்டால் வாகனங்களை நிறுத்தி வீடியோ எடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக கூறி வருகின்றனர்.

விடாது கருப்புபோல் விரட்டிய சிறுத்தை... தக்க நேரத்தில் காப்பாற்றிய நாய்கள் கூட்டம்... திக் திக் வீடியோ!

இருப்பினும், பலர் வன விலங்குகளைச் சீண்டும் விதமாக அவற்றை வீடியோ எடுத்தல் போன்ற வேண்டாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனாலயே விலங்கு-மனித சில நேரங்களில் அரங்கேறுகின்றது. இதனைத் தவிர்க்கவே வனப்பகுதியில் பயணிப்பவர்களுக்கு பல கடுமையான அறிவுரைகள் வழங்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dogs Saves Driver From Leopard. Read In Tamil.
Story first published: Tuesday, May 19, 2020, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X