மின்சார வாகன சந்தையில் புரட்சி.. ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்.. வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..

ஒரே ஒரு சார்ஜில் 1,200 கிமீ தூரம் செல்லும் திறனைக் கொண்ட கான்செப்ட் மாடல் தானியங்கி கார் விரைவில் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

இந்தியாவின் மின் வாகனங்களுக்கான தேவையை உணர்ந்து உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், அவர்களின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துவருகின்றனர்.

குறிப்பாக சமீபகாலமாக ஏராளமான புத்தம் புதிய நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் இதற்கு முன்பாக நாம் கேள்விப்படாத நிறுவனங்களாகவே இருக்கின்றன.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

இருப்பினும், இந்திய மின்வாகனத் தேவையைப் பூர்த்திச் செய்யும் விதமாக அவை புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்கி வருகின்றன.

இந்நிலையில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஐகோனா வடிவமைப்பு குழுமம், அதன் அதிக தூரம் செல்லும் மின்சார வாகனத்தை விரைவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரின் அறிமுகத்திற்கு முன்னதாக அதன் கான்செப்ட் மாடலை அடுத்த மாதம் நடைபெறவுள்ள வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்த அது திட்டமிட்டிருக்கின்றது.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

எதிர்கால தொழில்நுட்பத்தை ஏராளமாக உள்ளடக்கியுள்ள இந்த கார் தானாக டிரைவ் செய்யும் அம்சத்தைப் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி ஒரு முழுமையான சார்ஜில் 1,200 கிமீ தூரம் வரை செல்லும் என கூறப்படுகின்றது. இதுவே, இந்த காரில் நாம் கவனிக்க வேண்டிய மிக சிறப்பு அம்சாக இருக்கின்றது.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

ஐகோனா நியூக்ளியஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவை அடுத்து விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.

இதுபோன்ற அதிக ரேஞ்ச் கொண்ட வாகனங்கள் இந்தியாவில் படையெடுப்பதன்மூலம் இந்திய மின் வாகன சந்தை கணிசமான வளர்ச்சியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

அதற்கேற்பவகையில், அனைவரையும் ஈர்க்கும் விதமாக பல்வேறு அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் பெற்றிருக்கின்றது. குறிப்பாக ஐந்தாம் நிலை தன்னாட்சி இயக்கம் முக்கியமானதாக காட்சியளிக்கின்றது.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

இந்த அம்சத்தினால் காருக்கு கட்டாயம் ஓட்டுநர் தேவை என்ற சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே, ஓட்டுநரே இல்லாமல் தேவையான இடங்களுக்கு இந்த காரின் மூலம் செல்ல முடியும். இருப்பினும், டேஷ்போர்டு மற்றும் ஸ்டியரிங் வீல் இந்த காரில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவசர காலங்களில் உதவும்.

இந்த அம்சத்தால் இந்த காரில் பயணிப்பவர்கள் புதுவிதமான பயண அனுபவத்தை அனுபவிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

இந்த காரில் அதிக ரேஞ்ச் வழங்குவதற்காக ஹைட்ரஜன் சக்தி இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், மற்ற சாதாரண பேட்டரி வாகனங்களைக் காட்டிலும் ஐகோனா எலெக்ட்ரிக் கார்கள் அதிக ரேஞ்சை வழங்கும். குறிப்பாக, 1,200 கிமீ வரையிலான ரேஞ்சை அது வழங்கவுள்ளது. தொடர்ந்து, 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.5 செகண்டுகளிலேயே தொட்டுவிடுகின்ற அளவிற்கு இந்த காரின் மின்மோட்டார் சக்தி வாய்ந்ததாகக் காட்சியளிக்கின்றது.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

இதனால் நெடுஞ்தூர இலக்கைக்கூட மிக விரைவில் அடைந்துவிட முடியும். அதுவும், சார்ஜ் தீர்ந்துவிடும் என்ற பயமின்றி. இத்துடன், பிரிமியம் கார்களில் காணப்படக்கூடிய லக்சூரிய வசதிகளும் இந்த காரில் இடம்பெறவிருக்கின்றது.

குறிப்பாக சொகுசு இருக்கை மற்றும் பொழுதுபோக்கு கருவிகள் என நட்சத்திர விடுதிகளுக்கு இணையான அம்சங்கள் ஐகோனா நியூக்ளியஸ் காரில் இடம்பெற உள்ளது.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

ஐகோனா நிறுவனம் இந்த நியூக்ளியஸ் கான்செப்ட் மாடலை நியோ கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது. ஆகையால், முதலில் நியோவும் பின்னர் நியூக்ளியஸும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

இவையிரண்டுமே அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய தானியங்கி மின்சார கார்களும். இந்த இரண்டு கார்களுமே இந்தியாவில் களமிறங்குமேயானால், நிச்சயம் இந்திய வாகனச் சந்தையில் ஓர் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தளவிற்கு தொழில்நுட்பமும், லக்சூரியஸ் வசதியையும் உள்ளடக்கியதாக அவை இருக்கின்றன.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

சுற்றுப்புறச்சூழல் மீது அதிக அக்கறைக் கொண்ட பலர் மின்வாகங்களை தங்களின் பயன்பாட்டில் இணைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஐகோனா நியூக்ளியஸ் கான்செப்டின் அறிமுகம் நல்ல வரவேற்பைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, இதன் உச்சபட்ச ரேஞ்ச் அதிகப்படியானோரைக் கவரும் என நாங்கள் நம்புகின்றோம்.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

இந்த காரின் அம்சங்கள் மட்டுமின்றி தோற்றமும் பிரம்மிக்க வைக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 21 நாடுகளைச் சேர்ந்த 90-க்கும் அதிகமான டிசைனர்கள் தங்களின் பங்கை அர்பணித்துள்ளனர். இதற்கான பணிகள் டுரின், ஷாங்காய் மற்றும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த ஐகோனா தானியங்கி மின்சார கார்கள் சர்வதேச தரத்திலான தோற்றத்தில் நம் மனதைக் கொள்ளையடிக்க உள்ளது.

மின்சார வாகன சந்தையில் புரட்சி... ஒரே சார்ஜில் 1,200 கிமீ தூரம்... வாயை பிளக்காதீங்க பாஸ், இது நிஜம்..!

இந்தியாவின் மின்சார வாகன சந்தையை தற்போதே முளைக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, இந்தியர்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் பெரியளவில் புழக்கத்தில் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது சார்ஜிங் நிலையம் பற்றாக்குறை மற்றும் குறைந்த ரேஞ்ச் உள்ளிட்டவையே காணப்படுகின்றது.

ஆனால், இந்த கவலை அனைத்தையும் தூக்கியெறிகின்ற வகையில் ஐகோனா எலெக்ட்ரிக் கார்கள் விரைவில் சந்தையில் களமிறங்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
Driverless Icona Nucleus Electric Car Debut In 2020 Auto Expo. Read In Tamil.
Story first published: Tuesday, January 21, 2020, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X