கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

கொரோனா ஊரடங்கால் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார், பைக்குகளுக்கான சிறப்பு சர்வீஸ் திட்டத்தை ட்ரூம் நிறுவனம் அறிவித்துள்ளது.

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

கொரோனா வைரஸ் பிரச்னையால் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு விதிகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பலர் அலுவலகம் மற்றும் இதர பயன்பாட்டிற்காக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

ஆனால், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் வாகனங்களில் பேட்டரி சார்ஜ் இழப்பு உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை மனதில் வைத்து, கார், பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான சிறப்பு சர்வீஸ் திட்டத்தை ட்ரூம் அறிவித்துள்ளது.

MOST READ: ஒரகடம் ஆலையில் உற்பத்திப் பணிகளை துவங்கியது ராயல் என்ஃபீல்டு

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

ட்ரூம் ஜம்ப்ஸ்டார்ட் என்ற பெயரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போய் செல்ஃப்ட் ஸ்டார்ட் ஆகாத நிலையில், வாடிக்கையாளரின் வீட்டிற்கு வந்து ஜம்ப் ஸ்டார்ட் முறையில் உடனடியாக காரை இயங்குவதற்கான வாய்ப்பை இந்த சர்வீஸ் திட்டம் வழங்கும்.

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

அத்துடன், காரின் ஆயில் அளவு, தன்மை, எரிபொருள் குழாயில் கசிவு பிரச்னை, டயர்களில் காற்றழுத்தம் குறைவு உள்ளிட்ட சாதாரண பராமரிப்புப் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கொடுக்கும் விதத்தில் இந்த ஜம்ப்ஸ்டார்ட் சர்வீஸ் திட்டம் அமையும்.

MOST READ: கொரோனா வைரஸ் பரவல் என்ற பேச்சுக்கே இடமில்லை... மீண்டும் மீண்டும் ரோல் மாடலாக மாறும் கேரளா..!

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

பயிற்சி பெற்ற பணியாளர்களை கொண்டு கார் இயக்கம் குறித்த பரிசோதனைகளும் இந்த திட்டத்தின் கீழ் செய்து தரப்படும் என்று ட்ரூம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் வழக்கமான சர்வீஸ் நடைமுறைகள் மற்றும் ஆய்வுகள் பின்பற்றப்படும்.

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

பெரிய அளவிலான பழுது நீக்கும் பணிகளும் செய்து தரப்படும். கார் உள்ளிட்ட வாகனங்களை சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் செல்வதற்கான டோ சர்வீஸும் உண்டு. குறிப்பிட்ட நாட்களில் பழுது நீக்கும் பணிகளை உரிய முறையில் செய்து தருவதாக ட்ரூம் தெரிவிக்கிறது.

MOST READ: சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயசு பொடியன்... சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

ட்ரூம் நிறுவனத்தின் இணையதளம், ஆன்ட்ராய்டு செயலி மற்றும் ஆப்பிள் செயலிகள் மூலமாக ட்ரூம் நிறுவனத்தின் இந்த சர்வீஸ் திட்டத்தை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் அல்லது மொபைல்போன் அப்ளிகேஷன் வாயிலாகவே பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

இதுகுறித்து ட்ரூம் ஸ்தாபகரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தீப் அகர்வால் கூறுகையில்,"தேசிய ஊரடங்கு காரணமாக, கடந்த 40 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டார்ட் ஆகும் பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. 5 முதல் 25 மில்லியன் வாகனங்களில் இந்த பிரச்னை ஏற்படும் என்று மதிப்பிடுகிறோம்.

MOST READ: 3 மாதத் தவணைகளுக்கு நாங்க கேரண்டி... சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஹூண்டாய்!

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

எனவே, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்காக இந்த சிறப்பு பராமரிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த சர்வீஸ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எங்களது செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மற்றும் மொபைல் செயலி மூலமாக சிறப்பான சேவை தரத்தை வாடிக்கையாளர்களுக்கு தக்க தருணத்தில் வழங்கி வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

கார், பைக் ஸ்டார்ட் ஆகலையா?... ட்ரூம் வழங்கும் பிரத்யேக சர்வீஸ் திட்டம்!

ட்ரூம் நிறுவனத்தின் ஜம்ப்ஸ்டார்ட் சர்வீஸ் திட்டமானது பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ரூ.499 கட்டணத்திலும், சூப்பர் பைக்குகளுக்கு ரூ.699 கட்டணத்திலும் வழங்கப்படும். ஹேட்ச்பேக் கார்களுக்கு ரூ.999 கட்டணமும், செடான் கார்களுக்கு ரூ.1,299 கட்டணமும், எஸ்யூவி வாகனங்களுக்கு ரூ.1,599 கட்டணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ட்ரூம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Droom has announced a doorstep vehicle maintenance service in India. Called the 'Jumpstart', the service will cater to all two-wheeler and four-wheeler vehicles. The service is being offered in light of the ongoing Covid-19 pandemic in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X