துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

துபாயில் மின்சார கார்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் காற்று மாசுபடுகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது ஊக்குவித்து வருகின்றன. இதில், அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் (United Arab Emirates) ஒன்று.

துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான துபாயில், தற்போது புதிய திட்டம் ஒன்று அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி துபாய் நகரின் எந்த இடத்தில் வேண்டுமானாலும், மின்சார கார்களை இலவசமாகவே பார்க்கிங் செய்து கொள்ளலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

மின்சார கார்களின் உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. மின்சார கார்களை வைத்திருக்கும் நபர்களுக்கு, பொது பார்க்கிங் நிலையங்களில், கட்டணம் செலுத்துவதில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. துபாய் அதிகாரிகள் தற்போது அதனை உறுதி செய்துள்ளனர். எனினும் இதன் பலனை அனுபவிக்க வேண்டுமென்றால், மின்சார கார் உரிமையாளர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதன்படி துபாயில் பதிவு செய்யப்பட்ட மின்சார கார்களுக்கு மட்டுமே இலவச பார்க்கிங் சலுகை வழங்கப்படும்.

துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

மற்ற அமீரகங்களில் பதிவு செய்யப்பட்ட மின்சார கார்களுக்கு இச்சலுகை வழங்கப்படாது. அந்த கார்களின் உரிமையாளர்கள் துபாயில் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் நகரில், தற்போதைய நிலையில் 1,803 மின்சார கார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

இந்த கார்களின் உரிமையாளர்களுக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். எனவே மின்சார கார்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இத்தகைய சலுகைகளால், வரும் காலங்களில், துபாயில் மின்சார கார்களின் எண்ணிக்கை உயரலாம். துபாயின் பசுமை போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியாக, மின்சார கார்களுக்கு பார்க்கிங் கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

துபாயை போல், உலகின் பல்வேறு நகரங்களும் மற்றும் நாடுகளும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தற்போது தீவிரமாக உள்ளன. இதில், இந்தியாவும் ஒன்று. பெட்ரோல், டீசல் வாகனங்களால், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன. இதற்கு தலைநகர் டெல்லியே ஒரு உதாரணம்.

துபாய் துபாய்தான்... இனிமேல் இலவசம்னு போட்டாங்க பாருங்க ஒரு ஆர்டர்... எல்லாரும் செம ஜாலி ஆய்ட்டாங்க

அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகவும், அதிக தொகையை இந்தியா செலவிடுவது பொருளாதார ரீதியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த 2 பிரச்னைகளுக்கு மின்சார வாகனங்கள் தீர்வாக இருக்கும் என்பதால், இந்தியாவில் அவற்றை வாங்குபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவதுடன், சாலை வரி, பதிவு கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Dubai: Free Parking For Electric Cars. Read in Tamil
Story first published: Saturday, October 10, 2020, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X