வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

பள்ளத்தில் சிக்கிய மாருதி 800 காரை வெளியேற்றுவதற்கு யானை உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

உலக நாடுகளைக் காட்டிலும் அதிக ஆபத்து நிறைந்த சாலைகள் இந்தியாவில்தான் மிக அதிகமாக இருக்கின்றன. ஏனென்றால், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மலை மற்றும் காட்டுப் பாதைகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

அவை, பேராபத்தை விளைவிக்கும் கொண்டை ஊசி வளைவு முதல் மிக எளிதில் பின்னோக்கி சரிய செய்யும் மேடுகள் நிறைந்த சாலைகளையும் கொண்டிருக்கின்றன.

இதற்கு மிக சிறந்த உதாரணமாக கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளா இருக்கின்றது.

MOST READ: வெறிச்சோடி கிடந்த சாலைகள்... உயிரை காப்பாற்ற சென்ற டாக்டர்களுக்கு நேர்ந்த கதி... என்னனு தெரியுமா?

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

இந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மலையைச் சார்ந்தே இருக்கின்றது. எனவே, இங்கு பாதைகள் கரடு, முரடானதாக இருப்பதுடன் அதிகளவில் வளைவுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. எனவே, இங்கு வாகன விபத்துகளுக்கு பஞ்சமிருப்பதில்லை.

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவம் தற்போது அம்மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் மாருதி 800 கவிழ்ந்து விபத்தைச் சந்தித்திருக்கின்றது. பள்ளம் சற்று ஆழமானதாக இருந்ததன் காரணத்தால் மாருதி 800 காரால் மீண்டும் சமதள சாலைப் பகுதிக்கு ஏற முடியவில்லை.

MOST READ: 116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

எனவே, அருகில் இருந்த வளர்ப்பு யானை ஒன்று வரவழைக்கப்பட்டு மாருதி சுசுகி 800 கார் வெளியேற்றப்பட்டது. கேரளாவில் பெரும்பாலானோர் மாருதி 800 காரையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

இதற்கு மாருதி 800 அதிகம் மைலேஜ் வழங்கும் என்பதைக் காட்டிலும், அது முன்சக்கரம் இயக்கம் கொண்ட காராக இருப்பதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

கேரளாவின் பெரும்பாலான சாலைகள் திடீர் மேடுகள் மற்றும் சரிவுகளைக் கொண்டதாக இருக்கின்றது.

MOST READ: ஒரகடம் ஆலையில் உற்பத்திப் பணிகளை துவங்கியது ராயல் என்ஃபீல்டு

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

இம்மாதிரியான சாலையில் அதிக இழுவை திறனுடன் மேலே ஏறுவதற்கு முன் சக்கர இயக்கம் கொண்ட கார்களே அதிக பயனளிக்கின்றன. அந்தவகையில், மாருதி 800 முதல் தேர்வாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலானோர் மாருதி 800 காரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

அவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் மாருதி 800 கார்தான் தற்போது பள்ளத்தில் சிக்கியது. அப்போது, அந்த பகுதியில் ஏராளமான இளைஞர்கள் இருந்தும், நன்கு வளர்ந்த யானை ஒன்று வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை ஆனந்த்க்ளிக்ஸ் எனும் யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

MOST READ: பிரம்மிக்க வைக்கும் அமெரிக்க விமானிகளின் ஹெல்மட்... இது ஒன்றின் மதிப்பு இத்தனை கோடிகளா..?

நன்கு வளர்ந்த யானையானது 300 கிலோ முதல் 500 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை மிக எளிதாக நகர்த்துவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய திறனுடைய யானை ஒன்றுதான் தற்போது பள்ளத்தில் சிக்கியிருந்த மாருதி 800 காரை மிகவும் அசால்டாக, துதிக்கை மூலமே வெளியேற்றிவிட்டது.

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

யானைகள் இதுபோன்ற பள்ளத்தில் சிக்கியிருக்கும் வாகனங்களை மீட்பது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக சகதியில் சிக்கிய இருந்த பல வாகனங்களை யானைகள் மீட்டிருக்கின்றன. அதில், லாரிகள் முதல் ஸ்கார்பியோ கார் வரை அடங்கும்.

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

யானைகள் பெரும்பாலும் கலாச்சார பயன்பாட்டிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, அவ்வப்போது இதுபோன்ற வெளியேற முடியாமல் சிக்கியிருக்கும் வாகனங்களையும் அவை லிஃப்ட் செய்து உதவியிருக்கின்றன.

ஆனால், அதிகளவில் கலாச்சார திருவிழாவிற்கு பயன்படும் வகையிலேயே கேரளாவில் பலர் யானைகளை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ!

இதுபோன்ற யானைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் கேரளாவில் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

யானைகள் கேரள மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்திருந்தாலும், சில நேரங்களில் அவை கட்டுப்படுத்த முடியாதவையாக மாறிவிடுகின்றன. இருப்பினும், தங்களது குடும்பத்தில் ஒருனாக கருதிய பாகன்கள் அதனை கை விடுவதில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Elephant Rescues Maruti 800. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X