மின்சார காராக மாறிய அம்பாஸ்டர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

மின்சார காராக புதிய அவதாரம் எடுத்த அம்பாஸிடர் காரில் ஒரு கிமீ பயணிக்க ஒரு ரூபாயே போதும் என கூறப்பட்டுள்ளது. இது பைக்கில் நாம் பயணிப்பதைவிட மிக மிக மலிவான பயண செலவு ஆகும். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் நாம் காணலாம்.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

பல வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே மின்சார வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், இந்தியாவில் இது தற்போதும் ஆரம்பநிலையிலேயில்தான் காணப்படுகின்றது. அதேசமயம், மக்கள் மத்தியில் இன்றளவும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் மீதான மோகம் குறையாமல் அப்படியே காணப்படுகின்றது. இருப்பினும், விரைவில் இந்திய சாலைகளை மின்சார வாகனங்களே அதிகளவில் ஆளும் என்ற உறுதியான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

இதை உறுதி செய்கின்ற வகையில், அண்மைக் காலங்களாக புது முக மின்சார வாகனங்களின் அறிமுகம் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், தற்போத இந்த அறிமுகங்களுக்கு கொரோனா வைரஸ் தற்காலிக தடையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மின்சார வாகனங்கள்மீது மக்களுக்கு மோகம் ஏற்படாதநிலையே தற்போது வரை நீடித்து வருகின்றது.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

அது குறைந்த பராமரிப்பு செலவில் அதிக பலனை வழங்கினாலும் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு பல வளர்ந்த நகரங்களில்கூட ஆரம்பநிலையிலேயே இருக்கின்றது. ஆகையால், மின்சார வாகனங்களின் சார்ஜ் தீர்ந்துவிட்டால், அவற்றை சார்ஜ் செய்வது கேள்விக் குறியாக இருக்கின்றது. எனவே, பலர் மின்சார வாகனங்களை தயக்கம் காட்டுகின்றனர்.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

அதேசமயம், மின்வாகனங்களின் விலையும் மலையளவு உயர்ந்த விலையில் இருக்கின்றது. இது மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு கிடைக்காததற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள் வழக்கமான எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றியமைத்து வருகின்றனர். அதுவும் மிக மலிவான செலவில்.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

அந்தவகையில், டீசல் எஞ்ஜினில் இருந்து மின்சார வாகனமாக ஹிந்துஸ்தான் அம்பாசிடர் காரைப் பற்றிய தகவலைதான் இங்கு பார்க்கவிருக்கின்றோம். இந்த காரில் ஒரு கிமீ பயணிக்க வெறும் ரூ. 1 மட்டுமே போதும் என கூறப்பட்டுள்ளது. இது பைக்கில் நாம் பயணிப்பதைக் காட்டிலும் மிக குறைந்த பயண செலவாகும். இதனை உறுதிச் செய்கின்ற வகையில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

இந்த அம்பாஸிடர் காரை ஹி-மேன் ஆட்டோ ரோபோபார்க் என்ற தனியார் நிறுவனம் மின்சார வாகனமாக மாற்றியிருக்கின்றது. இந்நிறுவனம் கேரளாவை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. மின்சார வாகனமாக மாற்றும் நோக்கிலேயே ஹி-மேன் ஆட்டோ ரோபோபார்க் நிறுவனம் பழைய அம்பாஸிடர் காரை விலைக்கு வாங்கி மாற்றியமைத்துள்ளது. இதற்காக, குறிப்பிட்ட சில மாறுபாட்டை அந்நிறுவனம் செய்துள்ளது.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

குறிப்பாக, முன்பிருந்த டீசல் எஞ்ஜின் நீக்கப்பட்டு லீட்-ஆசிட் பேட்டரியின் உதவியில் இயங்கும் புதிய மின்சார மோட்டாரை அந்த நிறுவனம் புகுத்தியுள்ளது. இதற்கு கூடுதல் திறனை வழங்குவதற்காக மேலும் சில பேட்டரிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவை எஞ்ஜினின் பாதையில் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 53 பிஎச்பி மற்றும் 275 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த அதீத திறனை வெளிப்படுத்துவதற்காக 20kW திறனுடைய 20 பேட்டரிகள் காரில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

இவை, மிகவும் சுவாரஷ்யமாக ஒரு முழுமையான சார்ஜில் 100 கிமீ தூரம் வரை செல்லும். அதாவது, இதை முழுமையாக சார்ஜ் செய்து இயக்கும்போது ஒரு கிமீட்டருக்கு 1 ரூபாய் மட்டுமே செலவாகுமாம். இது மிக மிக மலிவான பயண செலவாகும். ஆனால், இந்த பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகின்றது. ஆகையால், லித்தியம்-அயன் பேட்டரியில் இது போன்ற மின்சார வாகன கிட்-களை தயாரிக்கும் பணியிலும் அந்த நிறுவனத்தின் குழு களமிறங்கியிருக்கின்றது.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

மேலும், தங்களின் இந்த மின்சார வாகன கிட்-களுக்கு காப்புரிமை பெற ஆராய் அமைப்பிடம் விண்ணப்பிக்க இருப்பதாக ஹி-மேன் நிறுவனம் கூறியிருக்கின்றது. ஆகையால், தற்போது டெமோ மாடலாக தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த கிட்டுகள் விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு, அது பயன்பாட்டிற்கு வரும்போது மிக மிக மலிவான தொகையாக ரூ. 6 லட்சத்தில் இந்த சிறப்பு வசதியை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது.

மின்சார காராக மாறிய அம்பாஸிடர்.. ஒரு கிமீ பயணிக்க 1 ரூபாயே போதும்.. பைக்கைவிட குறைவான பயண செலவு..

ஆனால், இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. புரோட்டோ ரகத்தில் தயார் செய்யப்பட்டிருக்கும் அம்பாஸிடர் கார் அதிகபட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது வெறும் 12 நொடிகளில் 60 கிமீ வேகத்தை எட்டும் அசாத்திய திறனைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், தற்போது புத்துயிரைப் பெற்றிருக்கும் இந்த அம்பாஸிடர் கார் மின்வாகன பிரியர்கள் மத்தியில் புதிய ஆவலைத் தூண்டியிருக்கின்றது.

Most Read Articles
English summary
EV Converted Hindustan Ambassador Car Running Cost. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X