பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்!

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டை கிடுகிடுக்க வைக்க வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி பெங்களூரில் வைத்து தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் பிரத்யேக படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் வழங்குகிறோம்.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு விதத்தில் மதிப்பு வாய்ந்ததாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. போதாக்குறைக்கு கியா சொனெட், நிஸான் மேக்னைட், ரெனோ கிகர் என பல புதிய மாடல்களுடன் விரைவில் அறிமுகமாவதற்கு வரிசை கட்டியுள்ளன.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்த சூழலில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதமாக, கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்தில் தங்களது காம்பேக்ட் எஸ்யூவிகளில் பல புதிய அம்சங்களை கார் நிறுவனங்கள் சேர்த்து வருகின்றன. அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின் தேர்வை விரைவில் வழங்க உள்ளது.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த மாடலானது மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் பவர்ஃபுல் எஞ்சின் தேர்வுடன் வரும் என்பதால் அப்போதே பார்வையாளர்களை கவர்ந்தது.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்த புதிய மாடல் அறிமுகம் நெருங்கி வந்த நிலையில், கொரோனா பாதிப்பால் தள்ளிப் போயுள்ளது. இந்த சூழலில், பெங்களூர் நைஸ் ரோட்டில் வைத்து இந்த புதிய மாடல் சாலை சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட சில பிரத்யேக படங்களை உங்கள் பார்வைக்கு இந்த செய்தியில் கொடுத்துள்ளோம்.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 T-GDI என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மஹிந்திராவின் புதிய எம் ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் குடும்ப வரிசையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாகவும் மாறும். தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

சாதாரண மாடலிலிருந்து இதனை வேறுபடுத்தும் விதத்தில், தோற்றத்தில் கூடுதல் வசீகரத்தை வழங்கும் சில நகாசு வேலைப்பாடுகளுடன் இந்த எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாடலில் விசேஷ பாடி டீக்கெல் ஸ்டிக்கர்கள், சக்கரங்களில் சிவப்பு வண்ண பிரேக் காலிபர்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

பின்புறத்தில் T-GDI பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருந்தது. உட்புறத்தில் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் மற்றும் சிவப்பு நூல் தையல் வேலைப்பாடுகள் மற்றும் சிவப்பு ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். கொரோனாவால் திட்டமிட்ட காலத்தில் இந்த மாடல் சந்தைக்கு வரவில்லை.

 பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இதனிடையே, இந்த ஆண்டு புதிய தலைமுறை தார் எஸ்யூவியும், இந்த புதிய எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை மஹிந்திரா உறுதி செய்துள்ளது. முதலில் தார் எஸ்யூவியும், இந்த ஆண்டு இறுதியில் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Exclusive: Mahindra XUV300 TGDI Spotted Testing in Bangalore.
Story first published: Friday, July 3, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X