அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் 3 இந்தியர்களின் சொகுசு கார்!

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்று அழைக்கப்படும் அம்பானியிடமே ஒரு இல்லாத ஒரு கார்களை வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்று புகழப்படும் அம்பானியிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் பல இருக்கின்றன. இவரிடத்தில், இன்னும் இந்தியாவில் விற்பனைக்கே வராத டெஸ்லா மின்சார கார் போன்ற பல வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அம்பானி ஓர் வாகன பிரியர் என்பதற்கு இதுவும், அவருடைய கார் கலெக்சன்களுமே முக்கிய சான்றாக இருக்கின்றது.

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

அதுமட்டுமின்றி, அவரின் மும்பை சொகுசு இல்லத்தில் திரையரங்கு, ஜிம் உள்ளிட்டவற்றிற்கு தனி தளங்கள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கின்றதோ அதேபோன்று கார்களுக்கென தனி பார்க்கிங் தளங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அதில், கார்களை பராமரிப்பதற்கென பிரத்யேக கருவிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இவ்வாறு, கார் மற்றும் அதனை பராமரிக்கும் விஷயத்தில் அம்பானி குடும்பத்தினர் அதிகம் கவனத்தை செலுத்துகின்றனர்.

MOST READ: குழந்தையின் வீட்டிற்கு ராஜ மரியாதையுடன் வந்த போலீஸ் வாகனங்கள்... காரணம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

அவரிடத்தில் டெஸ்லா தானியங்கி மின்சார கார் மட்டுமின்றி ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யு, பென்ஸ், ஆடி, ரேஞ்ஜ் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்கள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், இவற்றைக் காட்டிலும் அதிக விலை மற்றும் திறன் கொண்ட ஒரு சில கார்களை அம்பானியைச் சாராத மற்ற இந்திய பணக்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவை, அம்பானி குடும்பத்தினரிடமே இல்லாத சொகுசு கார் வாகனங்கள் ஆகும். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

குறிப்பாக, புகாட்டி நிறுவனத்தின் காரை பயன்படுத்தி வரும் இந்தியர்களை பற்றிய தகவலைதான் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். உலகில் புகாட்டி நிறுவனத்தின் கார்கள் அதிகளவில் காணப்படாததற்கு அதன் அதீத விலையே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதனாலயே உலகளவில் புகாட்டி காரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

MOST READ: போலீசார் மீதான அக்கறையில் எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

ஆனால், இதில் மூன்று இந்தியர்கள் இடம்பெற்றிருக்கின்றனர் என்பது உங்களில் எத்தனைக்கு பேருக்கு தெரியும். அவர்கள் அனைவரும் விண்டேஜ் புகாட்டி கார்கள் அல்லாமல் மிகவும் புத்தம் புதிய மாடல் புகாட்டி கார்களைதான் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் முதலில் ரோஹித் ராய் என்பவரை பற்றி பார்க்கலாம்.

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

ரோஹித் ராய்

இவர், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது துபாயில் வசித்து வருகின்றார். இவர் இந்திய பணக்காரர்களில் ஒருவரான டாக்டர் சி.ஜே. ராய் என்ற தொழிலதிபரின் மகன் ஆவார். இவரிடத்தில் ஏராளமான சொகுசு கார் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, இவரது கராஜில் இருக்கும் கார்கள் அனைத்தும் துபாயின் அதிக விலையுயர்ந்த கார்கள் என வர்ணிக்கப்படுகின்றது.

MOST READ: உச்சத்தில் கொரோனா வைரஸ்.. ஊர் சுற்ற புது யுக்திகளை கையாளும் இளைஞர்கள்.. இந்த நேரத்திலுமா இப்படி..?

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

ஆனால், அந்த கராஜில் என்னென்ன கார்கள் இருக்கின்றன என்பது பற்றிய முழுமையான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவரிடத்தில் மிக மிக அதிக விலைக் கொண்ட புகாட்டி வெரோன் கார் இருப்பதை துபாய் ஊடகங்கள் சில உறுதிப்படுத்தியிருக்கின்றன. இது அவராது கராஜில் இருக்கும் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றாகும். இதனை ஸ்பெஷலாக நிறம் மாற்றம் மற்றும் சொகுசு வசதிகள் மாற்றம் உள்ளிட்டவற்றைச் செய்து ரோஹித் ராய் பயன்படுத்தி வருகின்றார்.

இதுதவிர ரோஹித் ராயின் கராஜில் இடம்பெற்றிருக்கும் மற்ற கார்களைப் பற்றிய தகவலும் அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் தெரியவந்தது. அந்த புகைப்படத்தில் கார்கள் நிறுத்தப்படுவதற்கான கராஜ், லக்சூரி தோற்றத்தில் இருப்பதை நம்மால் காண முடுகின்றது. மேலும், அதில் ரோல்ஸ் ராய்ஸ் செடான் ரக கார், பென்ட்லீ, மெக்லாரேன் 720, ஃபெர்ராரி 458 மற்றும் கோயனிக்செக் ஆகோரா உள்ளிட்டவை நிற்கப்படுவதையும் நம்மால் காண முடிகின்றது.

MOST READ: தல எப்பவுமே கெத்துதான்... குடிசையில் வாழும் ஏழை குடும்பத்தை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்த அஜீத்

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

ரியூபன் சிங்

இந்தியவைச் சேர்ந்த ரியூபன் சிங் தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். இவர், தொழில் காரணமாக அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி அங்கு வசித்து வருகின்றார். இவர்தான் அண்மையில் ஒரே நேரத்தில் ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் லக்சூரி கார்களை பயன்பாட்டிற்கு வாங்கியிருந்தார். இதுதவிர, பல விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் புகாட்டி வேரோன் 16.4.

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்த இக்கார், ரியூபன் சிங்கின் கராஜிலேயே மிக அழகான கார் என கூறப்படுகின்றது. அழகு மட்டுமின்றி அதிக திறனை வெளிப்படுத்தும் காராகவும் இருக்கின்றது. இது அதிகபட்சமாக 1001 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றது. இந்த காரின் ஆரம்பநிலை மாடல் ரூ. 9.8 கோடிக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

இந்த கார்களைப் போலவே ரியூபன் சிங் மெக்லாரன் எஃப்1, பகானி ஹூவார்யா, ஃபெர்ராரி எஃப்12 பெர்லினட்டா, போர்ஷே 918 ஸ்பைடர் மற்றும் ஃபெர்ராரி லாஃபெர்ராரி உள்ளிட்ட அதி திறன் வாய்ந்த கார்களையும் பயன்படுத்தி வருகின்றார்.

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

மயூர் ஷா

இந்திய வம்சாவளியைச் சார்ந்த இவரும் தற்போது அமெரிக்காவில் குடி பெயர்ந்துள்ளார். மயூர் ஷா டெக்சாஸ் மாகாணத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகின்றார். இவர் புகாட்டி நிறுவனத்தின் இரு சிரோன் கார்களைப் பயன்படுத்தி வருகின்றார். புகாட்டி நிறுவனத்தின் இரு கார்களைப் பயன்படுத்தும் ஒரே இந்தியர் இவர்தான். இந்த கார்கள் ஒவ்வொன்றும் ரூ. 21 கோடி மதிப்பிலானவை ஆகும்.

இதனாலயே உலகின் அதிக விலைக் கொண்ட கார்களில் புகாட்டி சிரோன் முதல் இடத்தில் இருக்கின்றது. இதில், தனக்கேற்ப சில மாற்றங்களைச் செய்து மயூர் ஷா பயன்படுத்தி வருகின்றார். இந்த கார்கள் ஆர்டர் செய்த இரு வருடங்களுக்கு பின்னரே அவரது கைகளுக்கு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

அம்பானியிடமே இல்லாத சொகுசு கார்கள்.. வெளிநாடுகளில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் விலையுயர்ந்த கார்கள்!

இதுதவிர, ஜிடி ஆர்எஸ்2, மெக்லாரன் 720எஸ், ரோல்ஸ் ராய்ஸ் டிராப் ஹெட் கூப், லம்போர்கினி அவேன்டிடேட்டர் எஸ்விஎச், ஃபோர்ஷே ஜிடி ஆர்எஸ்3 உள்ளிட்ட ஏராளமான கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Expensive Bugatti Cars Used By Indians Abroad. Read In Tamil.
Story first published: Monday, May 4, 2020, 21:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X