கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் நடுங்கி வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்கள் பலே திட்டத்தை வகுத்துள்ளன.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

பொருளாதாரத்தில் தற்போது ஒருவிதமான நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பிரச்னையும் மக்களை ஆட்டி படைத்து வருகிறது. இதனால் இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் குடும்பங்களுக்கு ஏற்ற கார்களுக்கான தேவை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

கார்களுக்கான தேவை உயர்வதற்கு பண்டிகை காலம் ஒரு காரணமாக இருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற மக்களின் எண்ணமும் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணித்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

எனவே சொந்தமாக ஒரு காரை வாங்கும் எண்ணத்தில் பலர் உள்ளனர். இந்த இரு காரணங்களாலும் சிறிய கார்களுக்கான தேவை வரும் மாதங்களில் உயர்ந்து, விற்பனை அதிகரிக்கும் என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே இதற்கு ஏற்ற வகையில் தயாராவதற்கு மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய இரண்டு நிறுவனங்களும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

அதாவது இந்த இரண்டு நிறுவனங்களும் கார்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து லிவ்மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய இரண்டு நிறுவனங்களின் உற்பத்தியும் கடந்த 2018ம் ஆண்டில் உச்சத்தில் இருந்தன. அதே அளவிற்கு வரும் மாதங்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்த 2 நிறுவனங்களும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய 2 நிறுவனங்களுமே விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தியை அதிகரித்தன. ஆனால் அதன்பின் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் புதிய வாகன விதிமுறைகள் ஆகிய காரணங்களால், ஆட்டோமொபைல் துறை பேரிடியை சந்தித்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

2019ம் ஆண்டு ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொரோனா வைரஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து விட்டது. இருந்தாலும் எதிர்வரும் பண்டிகை காலம் கார் நிறுவனங்களுக்கு சிறப்பானதாக அமையலாம். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மாருதி சுஸுகி, ஹூண்டாய் உள்பட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தியிருந்தன.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

அதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதால், தற்போது கார்களை ஓரளவிற்கு உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன. இந்த உற்பத்தி எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிறிய கார்களுக்கான தேவை கிராமப்புற சந்தைகளில் தற்போது உயர்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

தீபாவளி பண்டிகை காரணமாக வரும் நவம்பர் மாதத்தில், இந்த தேவை இன்னும் பெருமளவிற்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் வரும் அக்டோபர் மாதத்தில் 1.70 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனமும், வரும் பண்டிகை காலத்தில் தனது வெனியூ மற்றும் கிரெட்டா போன்ற கார்களுக்கான தேவை உயரும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் வரும் அக்டோபர் மாதத்தில் 60 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

ஆக மொத்தத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து வரும் அக்டோபர் மாதத்தில் 2.30 லட்சம் கார்களை உற்பத்தி செய்வதற்கு தயாராகி வருகின்றன. ஆனால் பண்டிகை காலம் முடிந்த பிறகு கார்களின் உற்பத்தி மீண்டும் குறையலாம் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்த 2 நிறுவனங்களும் தற்போது திட்டமிட்டுள்ளபடி கார்களை உற்பத்தி செய்வதில் பெரும் சவால்கள் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் கொரோனா வைரஸ் ஊரடங்கு சற்று கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது வினியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் பணியாளர்கள் பற்றாக்குறையும் ஏற்படலாம். இந்த பிரச்னைகளை எல்லாம் கடந்து, உற்பத்தியை அதிகரித்தாக வேண்டிய தேவை கார் நிறுவனங்களுக்கு உள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Festive Season: Maruti And Hyundai To Ramp Up Production. Read in Tamil
Story first published: Thursday, August 6, 2020, 0:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X