Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட்!! பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா!
உலகின் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான ஃபியட் அதன் பெரும்பான்மையான கார்களை மின்மயமாக்க(எலக்ட்ரிஃபை) உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பாவிற்கான ஃபியட் பிராண்டின் முதன்மை அதிகாரி லுகா நபோலிடானோ, 2021ஆம் இறுதிக்குள் தங்களது லைன்-அப்பை 60 சதவீதம் மின்மயமாக மாற்றிவிடும் என கூறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

வாகன உற்பத்தியாளர்கள் பொதுவாக ‘மின்மயமாக்கு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், வழக்கமான எரிபொருள் என்ஜின்களின் ஒரு பகுதிதான் வழக்கமான ஹைப்ரீட் சிஸ்டங்களால் நிரப்பப்படுகிறது. இதுதான் எதிர்கால எலக்ட்ரிக் போக்குவத்திற்கு முதல்படியாகும்.

இதற்கு அடுத்து ப்ளக்-இன் ஹைப்ரீட்கள், அதன் பின்னர் தான் முழு-எலக்ட்ரிக் வாகனமாகும். தற்சமயம், எந்தெந்த ஃபியட் மாடல்கள் மின்மயமாக்க சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

நமக்கு தெரிந்தவரை 500, 124 ஸ்பைடர், டிபோ, பாண்டா, குபோ மற்றும் டோப்லோ போன்ற ஃபியட் மாடல்கள் முதல் ஹைப்ரீட் மாற்றங்களை ஏற்கலாம். இவற்றை தொடர்ந்து ஃபியட்டின் முதல் முழு-எலக்ட்ரிக் காராக புதிய 500 வெளிவருவதற்கான வாய்ப்புள்ளது.

அந்த நாளில், பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திரண்டு வந்தபோது, இவி வாகன தயாரிப்பில் இறங்குவதில் இருந்து விலகிச் சென்ற நிறுவனங்களில் ஃபியட்டும் ஒன்றாகும்.

இப்படிப்பட்ட நிறுவனம் அடுத்த ஒரு வருடத்திற்கு உள்ளாக பாதிக்கு மேற்பட்ட வாகனங்களை எவ்வாறு மின்மயமாக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.