புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 கார் புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட 2020 ஹோண்டா சிட்டி மாடல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மாசு உமிழ்வை கணக்கிடும் கருவிகளுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிஎஸ்6 செடான் கார், இதற்கு முன்பும் பல்வேறு சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

இவ்வாறு தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதால் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 மாடலின் இந்திய அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து இந்த பிஎஸ்6 மாடலின் அறிமுகம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

புனேக்கு அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், இதேபோல் நொய்டாவிலும் பொது சாலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது கண்டறியப்பட்டுள்ளது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

ஏற்கனவே கூறியதுபோல், பின்புறத்தில் மாசு உமிழ்வை அளவிடும் கருவிகளுடன் உள்ள இந்த சோதனை ஓட்ட ஹோண்டா சிட்டி மாடலின் அடிப்பகுதியில் தான் இந்த சோதனை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எக்ஸாஸ்ட் அமைப்பு நேரடியாக இந்த கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

2020 ஹோண்டா சிட்டி மாடலின் இந்த சோதனை ஓட்டம் ARAI அமைப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை தவிர்த்து காரின் டிசைன் மற்றும் என்ஜின் வேரியண்ட்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் இணையத்தில் கசிந்துள்ள இதன் சோதனை ஓட்ட புகைப்படங்களில் இருந்து பெற முடியவில்லை.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

ஹோண்டா சிட்டி பிஎஸ்6 செடான் காரில் 1.5 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜினை பொருத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. தாய்லாந்து மார்க்கெட்டில் கடந்த ஆண்டு இறுதியிலேயே அறிமுகமாகிவிட்ட ஹோண்டா சிட்டியின் இந்த அடுத்த தலைமுறை கார், இதே வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் தான் இந்திய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

இந்த பிஎஸ்6 செடான் மாடலின் கடந்த சில சோதனை ஓட்டங்களின் மூலம் இந்த காரில் முழுவதும் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்ஸ், ஸ்போர்டியான டிசைன் பாகங்கள், அப்டேட்டான இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப் மற்றும் செடான் பிரிவில் உள்ள மாடல்களுக்கு கடுமையான விற்பனை போட்டியினை அளிக்கும் விதமாக ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களை பெற்றுள்ளது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

ஹோண்டா சிட்டிக்கு இந்திய சந்தையில் போட்டி மாடல்களாக ஹூண்டாய் வெர்னா (இதன் அடுத்த தலைமுறை கார் விரைவில் வரவுள்ளது), ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ உள்ளிட்டவை உள்ளன. மாருதி சுசுகி சியாஸ் செடான் மாடல் கூட ஒரு வகையில் ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக தான் உள்ளது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடலாக அறிமுகமாகவுள்ள இந்த பிஎஸ்6 செடான் மாடலில் பொருத்தப்படவுள்ளதாக கூறப்படும் 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜினுடன் சமீபத்தில் உலக சந்தையில் அறிமுகமான ஹோண்டா ஜாஸ் ஹேட்ச்பேக்கின் மில்டு-ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் தேர்வும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

இதேபோல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக பெட்ரோல் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு என்ஜின் தேர்வுகளுடனும் சிவிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றொரு தேர்வாக வழங்கப்படவுள்ளது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட்டில் உள்ள 1.5 லிட்டர் என்ஜின் 117 பிஎச்பி பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தி வருகிறது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

பிஎஸ்4 தரத்தில் தான் தற்போதுவரை உள்ள இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 99 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கி வருகிறது. என்ஜினின் இந்த வெளியிடும் அளவு பிஎஸ்6 மாற்றத்தால் சிறிது அதிகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

புதிய ஹெட்லைட்டுடன் 2020 ஹோண்டா சிட்டி பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை ஓட்டம்...!

தற்போதைய ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்தில் உள்ளதால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக பெட்ரோல் வேரியண்ட் தான் உள்ளது. இதனால் விரைவில் அறிமுகமாகவுள்ள இதன் அடுத்த தலைமுறை காரில் வழங்கப்படவுள்ள மில்ட்-ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜினின் விற்பனையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Fifth gen Honda City BS6 spied again details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X